இரண்டாம் தமிழ் இணைய மாநாடு

From Wikipedia, the free encyclopedia

Remove ads

தகவல் புரட்சியின் பயனை மக்களும் அறியத்தக்க வகையில் இரண்டாம் தமிழ் இணைய மாநாடு சென்னையில் நடத்தப்பட்டது.[1] 1999ம் ஆண்டு பிப்ரவரி 7, 8 ஆம் நாட்களில் அன்றைய தமிழக முதல்வர் மு.கருணாநிதியின் முன்னிலையில் இம்மாநாடு நடைபெற்றது.[2] இதற்கு உலகத் தமிழ் இணையக் கருத்தரங்க மாநாடு அல்லது தமிழ் இணையம் 99 (TamilNet 99) என்று பெயர் சூட்டப்பட்டது. அப்போதைய நடுவண் அரசின் வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் முரசொலி மாறன் இம்மாநாட்டின் வரவேற்பு குழுத் தலைவராக இருந்துள்ளார்.

Remove ads

மாநாட்டின் பொருண்மை

தமிழ் எழுத்துருக்குறியீட்டுத் தரப்பாடு; தமிழ் விசைப்பலகைத் தரப்பாடு; கணிப்பொறி, பல்லூடகம் மற்றும் இணையம், கணிப்பொறியின் பிற பயன்பாடுகள் ஆகியவற்றில் தமிழ்மொழியின் இன்றைய பயன்பாட்டு நிலை ஆகியவை இம்மாநாட்டின் பொருண்மைகளாகும்.

டாம்,டாப் அறிமுகம்

இந்த மாநாட்டில் தமிழ் நாட்டிலுள்ள பல்வேறு கல்வியாளா்கள்,மொழிவாணா்கள், கணிப்பொறி வல்லுநா்கள், சொற்செயலியை உருவாக்கியவா்கள், ஆராய்ச்சியாளா்கள் போன்றோர்கள் கலந்து கொண்டனா். மேலும் சிங்கப்பா், மலேசியா, இலங்கை, கனடா, பிரான்சு, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளின் அரசு பிரநிதிகளும் அறிவியல் தமிழ் எழுத்து முறையை உலகம் முழுவதிலும் இணையத்தில் பயன்படுத்த வேண்டும் என்றனா். அம்முறையில் டாம் (Tamil Monolingual - TAM) வகையும் ஆங்கில தமிழ் கலப்பு எழுத்துரு முறையாக டாப் (Tamil Bilingual - TAB) வகையும் அறிமுகப்படுத்தப்பட்டன. மேலும் தமிழ் மென்பொருள் ஆராய்ச்சி மானியக்குழு அமைப்பதற்கான தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தமிழின் ஒலி வடிவம் வரிவம் அறிவியல் மொழியாக மட்டுமின்றி பொருளியல் மொழியாகவும் இயங்கச் செய்தல் ஆகிய பொருள்களிலும் ஆய்வுக்கட்டுரைகள் கணினித்திரைக் காட்சிகள் இடம் பெற்றன. விசைப் பலகையில் ஏற்பட்டு வந்த குழுப்பத்திற்கு இம்மாநாடு முற்றுப்புள்ளி வைத்தது.

Remove ads

தமிழ் இணையப் பல்கலைக்கழகம்

இருபத்தியோராம் நுாற்றாண்டில் காலடி எடுத்து வைக்கும் காலகட்டத்தில் உலகத் தமிழ் இணையப் பல்கலைக் கழகம் ஒன்றை கணிப்பொறி வாயிலாகத் தமிழ்நாடு அரசு அமைக்க உள்ளது என்ற அறிவிப்பை இம்மாநாட்டில் முதலமைச்சா் கலைஞா் கருணாநிதி அறிவித்தார். மேலும் தமிழ் மென்பொருள் வளா்சசி நிதி என்ற நிதியத்தையும் அறிவித்தார். முதற்கட்டமாக அரசு நிதியிலிருந்து ₹5 கோடி ஒதுக்கப்படுவதாகவும் அறிவித்தார். ஓராண்டுக்குள் ஓராயிரம் சமுதாய இணையங்களை நிறுவுவதற்கும் அரசு படிவங்கள் எல்லாம் தமிழ் இணையத்தின் மூலம் தடையின்றி கிடைப்பதற்கும் வழிவகை செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

மாநாட்டில் கலந்துகொண்டவர்கள்

மாநாட்டில் பல்வேறு அறிஞா்கள் பெருமக்கள் கலந்து கொண்டனா்.நா. கோவிந்தசாமி, சிங்கப்பூர் தேசியப் பல்கலைக் கனடா சீனிவாசன் இலங்கையைச் சோ்ந்த யாழன் இராமலிங்கம் சண்முகலிங்கம் ஜப்பானைச் சோ்ந்த மியா்மின் போன்ற அயல்நாட்டு அறிஞா்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனா். சென்னையைச் சோ்ந்த கிரசண்ட் பொறியியல் கல்லுாரியின் தலைமைப் பேராசிரியரும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தருமான திரு.பொன்னவைக்கோ, மனோஜ் அண்ணாத்துரை, இன்தாம் சவுரிராசன், இந்தியா டுடே செந்தில்நாதன் மற்றும் சேது பிழை திருத்தியை உருவாக்கிய பேராசிரியா் வா.மு.சே.ஆண்டவா் ஆகியோர் இம்மாநாட்டில் கலந்து கொண்டனா். இவா்களின் கருத்துக்களால் தமிழ் இணையம் 99 என்ற மாநாடு சிறப்பு பெற்றது. இம் மாநாட்டின் மூலமாக தமிழ் மென்பொருள் தயாரிப்பாளர்கள் உலக அளவில் அடையாளம் காட்டப்பட்டனா். இக்கருத்தருங்கில் தமிழ் எழுத்துருக் குறியீட்டுத் தரப்பாடு தொடர்பாக 12 கட்டுரைகளும், பல்லூடகத்திலும், இணையத்திலும், கணிப்பீட்டிலும் தமிழின் பயன்பாடு தொடர்பாக 8 கட்டுரைகளும் படிக்கப்பட்டன.

Remove ads

அடிக்குறிப்பு

  • முனைவர் துரை.மணிகண்டன் எழுதிய இணையமும் தமிழும் என்ற நூல்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads