2-ஆம் நூற்றாண்டு

நூற்றாண்டு From Wikipedia, the free encyclopedia

2-ஆம் நூற்றாண்டு
Remove ads

2ம் நூற்றாண்டு என்ற காலப்பகுதி ஜூலியன் நாட்காட்டியின் படி கிபி 101 தொடக்கம் கிபி 199 வரையான காலப்பகுதியை குறிக்கிறது. இக்காலப் பகுதி தொன்முறை யுகமாகக் கருதப்படுகிறது.

விரைவான உண்மைகள்
Thumb
கிபி 2ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கீழைத்தேய அரைக்கோளம்
Thumb
கிபி 2ம் நூற்றாண்டின் இறுதியில் கீழைத்தேய அரைப்பகுதி
Thumb
பிரித்தானியாவில் கிரீனெட் என்ற இடத்தில் எஞ்சியிருக்கும் ஏட்ரியன் சுவரின் பகுதி

இந்நூற்றாண்டின் ஆரம்பத்தில், ரோமப் பேரரசு அதன் பேரரசன் திராசானின் ஆட்சியின் கீழ் மிகப்பெரும் வளர்ச்சியைக் கண்டிருந்தது. ஆனாலும் திராசானின் மறைவிற்குப் பின்னர் (117) அதன் மிகுதியான வரலாறு வெறுமனே ஆட்சியைக் காப்பாற்றும் வகையிலான நடவடிக்கைகளிலேயே ஈடுபட்டிருந்தது. இக்காலப்பகுதியில் ஏட்ரியன் என்பவனின் ஆட்சியில் ஜெருசலேமில் இருந்து யூதர்கள் வெளியேற்றப்பட்டனர். இரண்டாம் நூற்றாண்டின் கடைசிப் பகுதியில் மார்க்கசு அவுரேலியசு என்ற ரோமப் பேரரசனின் இறப்புக்குப் பின்னர் அமைதி மற்றும் செழுமையான காலப்பகுதி மறைய ஆரம்பித்தது.

சீனா கான் வம்சத்தினரின் ஆட்சியின் கீழ் தொடர்ந்து இருந்து வந்தது. இந்நூற்றாண்டின் முதல் அரைப்பகுதியில் நடு ஆசியாவில் சீனா தனது ஆதிக்கத்தைப் பரவலாக்கியது. ஆனாலும் இரண்டாம் அரைப்பகுதியில் ஊழல், மற்றும் கிளர்ச்சி காரணமாக இவ்வாட்சி ஆட்டம் காணத் தொடங்கியது. முடிவில் கிபி 220 ஆம் ஆண்டில் ஹான் ஆட்சி முடிவுக்கு வந்தது.

Remove ads

நிகழ்வுகள்

Remove ads

கண்டுபிடிப்புகள்

  • சீனா பத்திரிகைத் தாளைக் கண்டுபிடித்தது (105)
  • தொலெமி கண்ணுக்குத் தெரியக்கூடிய விண்மீன்களின் தொகுப்பை எழுதினார்.
  • 132: நிலநடுக்கத்தின் திசையைக் கண்டறியும் கருவியை முதன் முதலாக சீனர்கள் கண்டுபிடித்தனர்.
  • யுனானி மருத்துவம் அறிமுகம்

வேறு

குறிப்பிடத்தக்கவர்கள்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads