இரண்டாம் பவவர்மன்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

இரண்டாம் பவவர்மன் (ஆங்கிலம்: Bhavavarman II; கெமர்: ព្រះបាទភវវរ្ម័នទី២; தாய்: พระบาทภววรรมัมที่ ๒; சீனம்: 撥婆跋摩; பின்யின்: Bópóbámó) என்பவர் கெமர் பேரரசை (Khmer Empire) சார்ந்த சென்லா இராச்சியத்தின் (Chenla Kingdom) அரசர் ஆவார்.

விரைவான உண்மைகள் இரண்டாம் பவவர்மன்Bhavavarman II วฺระ กมฺรตางฺ อญฺ ศฺรีภวรฺมฺม, கெமர் பேரரசின் அரசர் ...

இவர் சென்லா இராச்சியத்தை கி.பி. 639-ஆம் ஆண்டில் இருந்து கி.பி. 657-ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்தவர். சென்லா அரசர்களான முதலாம் ஈசானவர்மன் (Isanavarman I) மற்றும் முதலாம் செயவர்மன் (Jayavarman I) ஆகிய அரசர்களின் ஆட்சிகளுக்கு இடையே கி.பி 639 முதல் 657 வரை 18 ஆண்டுகள் ஆட்சி செய்தார்.

Remove ads

வரலாறு

இரண்டாம் பவவர்மனின் பிறப்பிடம் அல்லது பூர்வீகம் போன்றவற்றுக்கான தகவல்கள் இன்று வரையிலும் அறியப் படாமல் உள்ளது. அவர் முதலாம் ஈசானவர்மனின் (Isanavarman I) மகனாக இருக்கலாம்; அல்லது அதே முதலாம் ஈசானவர்மனின் (கெமர்: ព្រះបាទភវវរ្ម័នទី២) அங்கீகரிக்கப்பட்ட வாரிசாக இருக்கலாம்; என்பதற்கான சான்றுகளும் இதுவரையிலும் கிடைக்கவில்லை.

ஆனாலும் அவர் சென்லா அரியணைக்கு முதலாம் ஈசானவர்மனுக்கு அடுத்து வந்தவர் என்பது மட்டும் உறுதியாகத் தெரிய வருகிறது. அவர் அரச குடும்பத்தின் இளவரசர்களில் ஒருவராக இருக்கலாம் என்றும் கல்வியாளர்கள் ஊகிக்கின்றனர்.

இரண்டாம் பவவர்மன் கல்வெட்டுகள்

அதைத் தவிர அவர் முதலாம் ஈசானவர்மனின் மகன்களில் ஒருவராக இருக்கலாம் என்றும் ஊகிக்கப்படுகிறது. இந்த அனுமானத்தில் இன்னும் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை.[1]

இரண்டாம் பவவர்மன் பல கல்வெட்டுகளை உருவாக்கி இருக்கிறார். ஆனால் அவற்றில் எதுவும் அவரின் வரலாற்றைப் பற்றிய குறிப்புகளை விட்டுச் செல்லவில்லை.[2]

இரண்டாம் பவவர்மனின் பேத்தி செயதேவி

இரண்டாம் பவவர்மன் மன்னர் (King Bhavavarman II) இறந்த பின்னர், அவருடைய மகன் முதலாம் செயவர்மன் (King Jayavarman I) அரியணை ஏறினார். முதலாம் செயவர்மன் ஆண் வாரிசு இல்லாமல் இறந்ததினால், அவருடைய பேத்தி இராணி செயதேவி (Queen Jayadevi) சென்லா இராச்சியத்தின் அரியணையில் அமர்ந்தார்.

இராணி செயதேவி பதவி ஏற்ற நேரத்தில், சென்லா இராச்சியம் அரசியல் குழப்பம் நிறைந்ததாக இருந்தது. மற்றும் இராணி செயதேவியின் ஆட்சி சர்ச்சைக்குள் சிக்கிக் கொண்டது.

இந்தக் கட்டத்தில் சென்லா இராச்சியம் மேல் சென்லா (Upper Chenla) மற்றும் கீழ் சென்லா (Lower Chenla) என இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது.[1]

Remove ads

சான்றுகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads