இரண்டாம் மன்சிங்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இரண்டாம் மான்சிங் (Man Singh II) ( 21 ஆகத்து 1912 - 24 சூன் 1970) இவர் ஜெய்ப்பூர் மாநிலத்தை கடைசியாக ஆண்ட மகாராஜா ஆவார். இவர் 1922 மற்றும் 1949 க்குமிடையில் சுதேச அரசாக ஆட்சி செய்தார். பின்னர் இந்திய ஒன்றியத்துடன் இணைந்தது. அதன்பிறகு, 1949 மற்றும் 1956 க்குமிடையில் ராஜஸ்தானின் அரசப்பிரதிநிதியாக பதவியில் இருந்தார். பிற்கால வாழ்க்கையில், எசுப்பானியத்திற்கான இந்தியத் தூதராக பணியாற்றினார். இவர் ஒரு குறிப்பிடத்தக்க விளையாட்டு வீரராக இருந்தார். இவர் போலோ விளையாட்டில் புகழ் பெற்றிருந்தார்.[1][2][3]
Remove ads
ஆரம்ப கால வாழ்க்கை
இவர், உத்தரபிரதேசத்தின் கோட்லா கிராமமான இசர்தாவைச் சேர்ந்த தாகூர் சவாய் சிங்குக்கும் அவரது மனைவி சுகன் குன்வாருக்கும் இரண்டாவது மகனாக மோர் முகுத் சிங் என்ற பெயரில் பிறந்தார். இவரது தந்தை ராஜபுத்திரர்களின் கச்வாகா குலத்தைச் சேர்ந்த ஒரு பிரபு ஆவார். இன்றைய ராஜஸ்தானில் சவாய் மாதோபூர் மற்றும் ஜெய்ப்பூர் நகரங்களுக்கு இடையில் அமைந்துள்ள இசர்தா நகரத்தில் மோர் முகுத் வளர்ந்தார். இவரது குடும்பம் ஜெய்ப்பூர் மற்றும் கோட்டாவின் ஆளும் அரச இல்லத்துடன் தொடர்பிலிருந்தது (அங்கு இவரது தந்தையின் சகோதரி திருமணம் செய்து கொண்டார்).
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads