எசுப்பானியம்
ரோமானிய மொழி From Wikipedia, the free encyclopedia
Remove ads
எசுப்பானிய மொழி (español) அல்லது ஸ்பானிய மொழி' அல்லது எசுப்பான்யால் மொழி (ஆங்கிலம்: Spanish language) ரோமானிய மொழிகள் குடும்பத்தில் உள்ள ஒரு மொழியாகும். இது எசுப்பானியத்திலும் (ஸ்பெயினிலும்), தென்னமெரிக்க நாடுகளிலும் பெருவாரியாக பேசப்படும் மொழியாகும். ஐக்கிய அமெரிக்காவின் தென் மாநிலங்களிலும் பரவலாகப் பேசப்படுகின்றது. இம்மொழியை உலகில் ஏறத்தாழ 350 மில்லியன் மக்கள் பேசுகிறார்கள். உலகில் 21 நாடுகளில் அரச அலுவல் மொழியாக உள்ளது.
இக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
Remove ads
வரலாறு
எசுப்பானிய மொழி இலத்தீன் மொழியில் இருந்து கிளைத்த ஒரு மொழியாகும். ரோமன் பேரரசு திளைத்து இருந்த காலத்தில் (கி.மு 200-கி.பி 150), ரோமானியர் படையெடுத்து ஐபீரிய மூவலந்தீவுப் பகுதிகளில் (இன்றைய எசுப்பானியாவும் போர்த்துகலும் ஆகும்) வென்ற நாடுகளில் அன்று பரவிய பேச்சு வழக்கு இலத்தீன் (Vulgar Lain) மொழிவழி இம்மொழி தோன்றியது. பேச்சு வழக்கு இலத்தீன் மொழியானது பெரும்பாலும் படையாட்களும், வணிகர்களும் மற்ற குடியேறிய பொதுமக்களும் பேசிய மொழியாகும். இது கற்றவர்களின் செம்மொழியாகிய இலத்தீனில் இருந்து மாறுபட்டது. எசுப்பானிய மொழி குடியேற்ற வாதக் காலத்தில் (~ கி.பி. 1500) அமெரிக்கக் கண்டங்களுக்குப் பரவியது. இன்று இம்மொழி 21 நாடுகளின் ஏற்பு பெற்ற அலுவல் மொழியாகப் பயன்படுகின்றது. ஏறத்தாழ 322 மில்லியன் முதல் 400 மில்லியன் மக்கள் இம்மொழியைப் பேசுவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது[1][2]. உலகில் அதிகம் பேசப்படும் மொழிகள் வரிசையில் இது ஐந்தாமிடத்தில் இருக்கிறது. ஐக்கிய நாடுகள் அவையின் ஏற்பு பெற்ற ஆறு மொழிகளில் இதுவும் ஒன்று. ஐரோப்பாவில் எசுப்பானியாவில் பேசப்படும் மொழி காஸ்ட்டில்லியன் என்றும் தென் அமெரிக்காவில் பேசப்படும் எசுப்பானிய மொழியை அமெரிக்க எசுப்பானிய மொழி என்றும் குறிப்பிடப்படுகின்றது.
Remove ads
மொழி அமைப்புகள்
எசுப்பானிய மொழி உலகிலேயே ஒலிப்பொழுக்கம் (phonetic) மிக்க மொழிகளில் ஒன்றாகும். எழுத்துக்கூட்டல்களைக் கொண்டு சொற்களை எளிதாகவும் துல்லியமாகவும் ஒலிக்கலாம்.
எசுப்பானிய மொழியின் நெடுங்கணக்கு அல்லது அகரவரிசை
எசுப்பானிய மொழியில் மொத்தம் 29 எழுத்துக்கள் உள்ளன. அவையாவன:
a, b, c, ch, d, e, f, g, h, i, j, k, l, ll, m, n, ñ, o, p, q, r, s, t, u, v, w, x, y, z.
அகர வரிசையில் உள்ள எழுத்துக்களும் அவைகளின் பெயர்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. தலைப்பு எழுத்துவகை, சிறிய எழுத்துவகை ஆகிய இரண்டும் காட்டப்பட்டுள்ளன. பிறைக்குறிகளுக்கிடையே கொடுக்கப்பட்டுள்ளவை அனைத்துலக ஒலியன் குறிகள் ஆகும். k, w ஆகிய இரண்டும் வேற்றுமொழிகளில் இருந்து கடனாகப் பெற்ற சொற்களில் மட்டும் வழங்குவன.
A a | a ['äˑ]| அ | J j | jota ['xo̞ˑ.t̪ä], ['χo̞ˑ.t̪ä], ['ho̞ˑ.t̪ä]| ஹோத்தா | R r | ere,erre ['e̞ˑ.r͈e̞]| எர்ரே | ||||
B b | be ['be̞ˑ] 'பே be alta [ˌbe̞ 'äl̪.t̪ä] 'பே ஆல்ட்டா be grande [ˌbe̞ 'ɰɾän̪.d̪e̞] 'பே 'கிராண்டே be larga [ˌbe̞ 'läɾ.ɰä] 'பே லார்கா |
K k | க | S s | எஸெ | ||||
C c | ce ['s̻e̞ˑ] ஸே, ['θe̞ˑ] ஸ்தே | L l | ele ['e̞ˑ.le̞] எலெ | T t | te ['t̪e̞ˑ] தெ | ||||
Ch ch | செ | Ll ll | doble ele 'டோ'ப்லெ எலெ elle எயெ | D d | de ['d̪e̞ˑ] 'டெ | M m | eme ['e̞ˑ.me̞] எமெ | U u | u ['uˑ] ஊ |
E e | e ['e̞ˑ] எ | N n | ene ['e̞ˑ.ne̞] எனெ | V v | uve ['uˑ.β̞e̞] உபெ ve ['be̞ˑ] 'பெ ve baja [ˌbe̞ 'β̞äˑ.hä] 'பெ பஹா, [ˌbe̞ 'β̞äˑ.xä] ve chica 'பெ சிக்கா [ˌbe̞ 'ʧiˑ.kä] ve corta [ˌbe̞ 'ko̞ɾ.t̪ä] 'பெ கோர்த்தா | ||||
F f | efe ['e̞ˑ.fe̞] எஃவெ | Ñ ñ | eñe ['e̞ˑ.ɲe̞] என்யெ | W w | uve doble [ˌu.β̞e̞ 'ð̞o̞ˑ.β̞le̞] ஊபெ 'டோப்லெ doble ve 'டோ'ப்லெ வே ['do̞ˑ.β̞le̞ ˌβ̞e̞] doble u ['do̞ˑ.β̞le̞ ˌu] 'டோப்லே உ ve doble ['ˌβ̞e̞ do̞ˑ.β̞le̞] வே 'டோப்லெ, 'பெ 'டோப்லெ | ||||
G g | ge ['xe̞ˑ] ஃஎ, ['çe̞ˑ] ஸெ, ['he̞ˑ] ஹெ | O o | o ['o̞ˑ] ஓ | X x | equis ['e̞ˑ.kis̻] எக்கிஸ், ['e̞ˑ.kis̺]எக்கிஸ் | ||||
H h | hache ['äˑ.ʧe̞] ஹாச்செ, ['äˑ.ʨe̞] | P p | pe ['pe̞ˑ] பே | Y y | ye ['ʝe̞ˑ] யெ, ['ʒe̞ˑ], ['ʃe̞ˑ] இ கிரியேகா [ˌi 'ɰɾje̞ˑ.ɰä] | ||||
I i | i ['iˑ] இ i latina [ˌi lä't̪iˑ.nä] இ லத்தினா |
Q q | cu ['kuˑ] கு | Z z | zeta, ceta ['θe̞ˑ.t̪ä] த்ஸேத்தா, ['s̻e̞ˑ.t̪ä] ஸேத்தா zeda, ceda ['s̻e̞ˑ.ð̞ä] ஸேதா, ['θe̞ˑ.ð̞ä] த்ஸேதா |
உயிரொலிகள் உயிரெழுத்துகள்
இம்மொழியில் ஐந்து உயிரொலிகள் (உயிரெழுத்துக்கள்) உள்ளன.
அவை: a (அ), e (எ), i or y (இ), o (ஒ), u (உ).
மெய்யொலிகள் மெய்யெழுத்துகள்
எசுப்பானிய மொழியின் அகரவரிசையில் உள்ள 29 எழுத்துக்களுள் 5 உயிரொலிகளும், வேற்றுமொழி சொற்களில் மட்டும் பயன்படும் w என்னும் எழுத்தும் நீங்கலாக மொத்தம் 23 மெய்யொலி எழுத்துக்கள் உள்ளன (y என்னும் எழுத்தை மெய்யெழுத்தாகக் கொண்டால்). அவற்றுள் ஈரெழுத்து கூட்டங்களாகிய ch மற்றும் ll ஆகிய இரண்டும் எசுப்பானிய மொழியில் தனி மெய்யெழுத்துக்களாகக் கருதப்படுகின்றன. மெய்யெழுத்துக்களில் n என்னும் எழுத்து வேறு ñ என்னும் எழுத்து வேறு.
மெய்யொலிகளில் ஆங்கிலத்தில் இல்லாத 4 ஒலிகள் உண்டு.
அவையாவன:
- ch (தமிழிலுள்ள "ச்" போன்று உச்சரிக்கப்படும்.)
- ll (தமிழிலுள்ள "ய்" போன்று உச்சரிக்கப்படும்.)
- ñ (ஆங்கிலத்திலுள்ள canyon என்னும் சொல்லில் வரும் "ன்ய்" என்பது போன்று உச்சரிக்கப்படும்.)
- rr (தமிழிலுள்ள 'ற்' போன்று உச்சரிக்கப்படும்.)
பிற முக்கியமான மெய்யெழுத்து ஒலிப்பு விதிகள்
- c என்னும் மெய்யெழுத்துக்குப் பின் e அலது i வந்தால் c என்னும் எழுத்தை ஆங்கிலத்தில் sit என்னும் சொல்லில் வரும் s என்பதுபோல ஒலிக்க வேண்டும். ஆனால் எசுப்பானியாவில் பேசப்படும் காஸ்ட்டில்லியன் என்னும் எசுப்பானிய மொழி வடிவத்தில் இதனை ஆங்கிலச் சொல்லாகிய think என்பதில் வரும் "th" போல ஒலிக்க வேண்டும். ஆங்கிலத்தில் think என்பதை ஸ்திங்க் என்பதுபோல சற்றே காற்றொலி கலந்து முதல் தகரத்தை ஒலிக்க வேண்டும்.
- எசுப்பானிய மொழியில் h என்னும் எழுத்தை ஒலிப்பது கிடையாது.
- எசுப்பானியர்கள் b, v ஆகிய இரண்டையுமே ஈரிதழ் ஒலியாக b என்பதுபோல்தான் ஒலிக்கிறார்கள்.
எசுப்பானிய மொழி ஒலியன்கள்
எசுப்பானிய மொழி ஒலியன்களை கீழ்க்காணும் அட்டவணையில் காணலாம்.
Remove ads
புவியியல் பரம்பல்
பின்வரும் அட்டவணை பல்வேறு நாடுகளிலுள்ள எசுப்பானிய மொழி பேசுவோரின் எண்ணிக்கையைக் காட்டுகிறது.
Remove ads
எண்கள்
ஆங்கிலமும் எசுபானியமும்
ஆங்கிலத்தில் இன்று வழங்கும் பல சொற்கள் எசுப்பானிய மொழிவழி பெற்றவையாகும் [152]. எடுத்துக்காட்டாக aligator (முதலை), cargo (ஏற்றுபொருள்), cork (தக்கை), ranch (வயல்/கள வீடு), mosquito (கொசு), tornado (குழல் காற்று) முதலியவற்றைச் சுட்டலாம். அமெரிக்காவில் பல இடப்பெயர்களும் எசுப்பானிய மொழியில் இருந்து பெற்றவை. லாஸ் ஏஞ்சலஸ் (Los Angles), சான் ஃவிரான்சிஸ்க்கோ (San Francisco), ஃவுளோரிடா (Florida), நெவாடா (Neveda) முதலியவற்றைச் சுட்டலாம்.
Remove ads
மேலும் காண்க
குறிப்புகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads