இரண்டாவது எசுப்பானியக் குடியரசு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இரண்டாவது எசுப்பானியக் குடியரசு (Second Spanish Republic) என்பது 1931, ஏப்ரல் 14 முதல் 1939 ஏப்ரல் 1 வரையான காலப்பகுதியில் எசுப்பெயினில் இருந்த அரசைக் குறிக்கும். 1931 ஆம் ஆண்டில் நகரப் பகுதிகளில் இடம்பெற்ற தேர்தல்களில் குடியரசுவாதிகள் பெரும்பான்மையாக வெற்றிபெற்றதைத் தொடர்ந்து அப்போதைய எசுப்பானிய மன்னரான 13ம் அல்போன்சோ நாட்டைவிட்டு வெளியேறியதன் பின் இந்த அரசு பதவிக்கு வந்தது. எசுப்பானிய உள்நாட்டுப் போரின் இறுதியில், 1939 ஆம் ஆண்டு, பிரான்சிசுக்கோ பிராங்கோவின் தலைமையிலான தேசியவாதப் படைகளிடம் குடியரசுப் படை தோல்வியடையும் வரை இது நீடித்தது.[1][2][3]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
