இரமாகாந்த் யாதவ்

இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia

Remove ads

இரமாகாந்த் யாதவ் (Ramakant Yadav ; பிறப்பு சூலை 1,1957) என்பவர் சமாஜ்வாதி கட்சியினைச் சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் தற்போது உத்தரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினராக பூல்பூர் பவாயை சட்டமன்றத் தொகுதியினைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். இவர் ஆசம்கர் மக்களவைத் தொகுதியின் மேனாள் மக்களவை உறுப்பினர் ஆவார்.[1]

விரைவான உண்மைகள் இரமாகாந்த் யாதவ்v, உத்தரப் பிரதேச சட்டப் பேரவை ...
Remove ads

அரசியல் வாழ்க்கை

இரமாகாந்த் யாதவ் 2004 நாடாளுமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சியிலிருந்து விலகி பகுஜன் சமாஜ் கட்சியில் சேர்ந்தார். பின்னர் 2008-ல் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார்.[2] சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் நாடாளுமன்றத் தேர்தலில் இரமாகாந்த் யாதவுக்கு எதிராகப் போட்டியிட்டு மிகக் குறைந்த வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இது அனைத்து அரசியல் பகுப்பாய்வாளர்களுக்கும் சவாலானதாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது. "பின்தங்கிய இரட்சகர்" என்ற உருவத்தை இவர் கொண்டிருப்பதால் மக்களுடனான இவரது சிறந்த பிணைப்பு இதற்குக் காரணம்.

இவருக்கு முன்னாள் பகுஜன் சமாஜ் கட்சி மக்களவை உறுப்பினராக இருந்த உமகாந்த் யாதவ் இவரது சகோதரர் ஆவார். இவரது மகன்களில் ஒருவரான அருண் குமார் யாதவ் உத்தரப் பிரதேசத்தின் ஆசம்கர் மாவட்டத்தில் உள்ள பூல்பூர் பவாயை சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஆவார். 2019ஆம் ஆண்டில் இவர் காங்கிரசு கட்சி சார்பில் பாதோகி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் அவமானகரமான தோல்வியை எதிர்கொண்டார். இவருக்கு 25 ஆயிரம் வாக்குகள் மட்டுமே கிடைத்தன. பின்னர் 2022ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் உத்தரப்பிரதேசத்தின் பூல்பூர் பவாயை சட்டமன்றத் தொகுதியில் சமாஜ்வாதி கட்சியின் சார்பில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.

Remove ads

பதவிகள் வகித்தவர்

1985-95 உறுப்பினர், உத்தரப் பிரதேசச் சட்டப்பேரவை (நான்கு முறை)
1996 11ஆவது மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்
1999 13ஆவது மக்களவைக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார் (2வது முறையாக)
1999-2004 உறுப்பினர், வர்த்தகக் குழு
2000-2004 உறுப்பினர், ஆலோசனைக் குழு, தொடருந்து அமைச்சகம்
2004 14ஆவது மக்களவைக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார் (3வது முறையாக)
2004-2008 உறுப்பினர், உணவு, நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் பொது விநியோகக் குழு
2008 உறுப்பினர் இல்லாதது 28.1.2008 முதல்
2009 15ஆவது மக்களவைக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார் (4வது முறையாக)
31 ஆகஸ்ட் 2009 உறுப்பினர், உணவு, நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் பொது விநியோகக் குழு
2022 உறுப்பினர், உத்தரப்பிரதேசச் சட்டப்பேரவை
Remove ads

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads