சந்திரஜித் யாதவ்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

சந்திரஜித் யாதவ் (Chandrajit Yadav) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். இவர் இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் மக்களவை உறுப்பினராக உத்தரப் பிரதேசம், அசம்கர் தொகுதியிலிருந்து 1967, 1971 தேர்தல்களில் இந்திய தேசிய காங்கிரசு வெற்றிபெற்றார். ஆனால் 1977-ல் ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிட்ட ராம் நரேசு யாதவிடம் வெற்றி வாய்ப்பினை இழந்தார். இந்திரா காந்தி கட்சியைப் பிளவுபடுத்தியபோது, இவர் 'சோசலிஸ்ட்' குழுவிலிருந்தார். மேலும் 1978ஆம் ஆண்டு அசம்கர் இடைத்தேர்தலில் இந்திரா காங்கிரசின் மொஹ்சினா கித்வாயிடம் தோல்வியடைந்தார்.[1] பின்னர் இவர் காங்கிரசை விட்டு வெளியேறி, 1980ல் ஜனதா கட்சி (மதச்சார்பற்ற) வேட்பாளராக அசம்கரில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மீண்டும் காங்கிரசில் சேர்ந்த இவர் 1989 மக்களவைத் தேர்தலில் புல்பூரில் தோல்வியடைந்தார். 1991-ல் நாடாளுமன்றத் தேர்தலில் ஜனதா தளம் வேட்பாளராக அசம்கர் தொகுதியில் வெற்றி பெற்றார்.

விரைவான உண்மைகள் சந்திரஜித் யாதவ், நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை ...

இந்திரா காந்தி அமைச்சகத்தில் மத்திய எஃகு மற்றும் சுரங்கத்துறை அமைச்சராக பணியாற்றினார்.[2][3][4]

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads