இரவிமங்கலம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இரவிமங்களம் (en:ERRAVIMANGALAM) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், பழனி ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் ஒரு வருவாய்க் கிராமம்(ஊர்).[4], பழனி வருவாய் வட்டத்தின் நாற்பத்தொன்றாவது எண் கொண்ட வருவாய் கிராமம் (கிராம எண்:41) ஆகும்.[5]
Remove ads
அமைவிடம்
பழனியிலிருந்து உடுமலைப்பேட்டை (கொழுமம்-வழி) செல்லும் மாநில நெடுஞ்சாலையில் பழனியிலிருந்து தெற்கே சுமார் 9 கி.மீ.தூரத்தில் அ.கலையம்புத்தூர் வருவாய் கிராமத்தின் கிழக்கே 5 கி.மீ தொலைவில் தொடங்கி கோடைக்கானல் மலை அடிவாரம் வரையிலும் நீண்டு அமைந்து உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 523 மீட்டர் உயரத்தில் உள்ளது. [6]
மக்கள் வகைப்பாடு
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இரவிமங்களம் கிராமத்தில் 107 வீடுகள் உள்ளது. இக்கிராமத்தில் 440 பேர் வசிக்கின்றார்கள். பாலின விகிதம் 53.40 %. இதில் 235 பேர் ஆண்கள்; 205 பேர் பெண்கள்.இக்கிராமத்தில் ஆரம்பப் பள்ளி 1 மட்டும் உள்ளது.[7]
முக்கிய பயிர்
அதிக மேட்டுப் பகுதியானதால் புன்செய்ப் பயிர்களான சோளம், கம்பு, ஆகியவையும், மக்காச்சோளமும் அதிகமாக பயிரிடப்படுகிறது.
நிருவாக அமைப்பு
- வருவாய் மாவட்டம் : திண்டுக்கல்
- வருவாய் கோட்டம் : பழனி
- வருவாய் வட்டம் : பழனி
- ஊராட்சி ஒன்றியம் : பழனி ஊராட்சி ஒன்றியம்
கிராமத்தின் தகவல்கள்
- வருவாய் கிராத்தின் மொத்த புலங்கள் (Number of Survey fields) : 1 முதல் 286 முடிய
- வருவாய்கிராமத்தின் பரப்பு : 786.51.50 ஹெக்டேர்- (1943.52 ஏக்கர்)
- வருவாய்கிராமத்தின் நன்செய் நிலம் :
- வருவாய்கிராமத்தின் புன்செய் நிலம் :
- வருவாய்கிராமத்தின் புறம்போக்கு நிலம் :
- குக்கிராமங்களின் எண்ணிக்கை :
Remove ads
அடிக்குறிப்பு
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads