ஆர். என். இரவி
தமிழக ஆளுநரும் மேனாள் காவல் துறை அதிகாரியும் ஆவார் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆர். என். இரவி (Ravindra Narayana Ravi; பிறப்பு: 3 ஏப்ரல் 1952) என்பவர் முன்னாள் இந்திய அதிகாரி ஆவார். தமிழக ஆளுநராக, 2021 செப்டம்பர் 18 அன்று பதவியேற்ற இவர்,[2] நாகாலாந்து, மேகாலயா போன்ற வடகிழக்கு மாநிலங்களில் ஆளுநராகப் பணியாற்றியவராவார்.[3][4][5][6]
Remove ads
குடும்பம்
பீகாரின், பாட்னாவில் பிறந்த இவருக்கு இலட்சுமி என்ற மனைவியும் இரு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை என மூன்று குழந்தைகளும் உள்ளனர்.[7]
பணி
இந்தியக் காவல் துறை அதிகாரியான இவர், கேரள மாநிலத்தில், 1976 ஆம் ஆண்டு, தொகுதி அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டார். இவர் 2012இல் இந்திய உளவுத்துறையின் சிறப்பு இயக்குநராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார். இவர் 2014 தேசிய பாதுகாப்பு மன்றத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். பின்னர் அக்டோபர் 5, 2018 அன்று இந்தியாவின் தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.
ஆளுநர் பணி
நாகாலாந்து ஆளுநர்
2014 முதல் தேசிய சோசியலிசக் கவுன்சில் ஆப் நாகாலாந்து குழுவிற்கும் இந்திய அரசிற்கும் இடையில் மத்தியத்தராகப் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். இவரது முயற்சியின் பலனாகப் போராட்டக் குழுவிற்கும் இந்திய அரசிற்கும் இடையே நாகாலாந்து அமைதி உடன்படிக்கை ஆகத்து 2015 இல் கையெழுத்தானது.[8][9] 20 சூலை 2019 இல் நாகாலாந்து மாநில ஆளுநராகப் பதவியேற்றார்.[5]
தமிழ்நாடு ஆளுநர்
இவர் செப்டம்பர் 9, 2021 அன்று இந்திய குடியரசுத் தலைவர், ராம் நாத் கோவிந்த் ஆல் தமிழ்நாடு ஆளுநராக நியமிக்கப்பட்டார். செப்டம்பர் 18, 2021 அன்று சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி முன்னிலையில் தமிழ்நாடு ஆளுநராகப் பதவியேற்றார்.[10]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads