இரா

From Wikipedia, the free encyclopedia

இரா
Remove ads

இரா (Ra) என்பவர் பண்டைய எகிப்திய மதத்தில் கூறப்படும் சூரியக் கடவுளும் நண்பகல் வேளையின் கடவுளும் ஆவார். இவர் வானுலகம், புவி மற்றும் பாதாளம் ஆகிய மூவுலகையும் ஆள்பவராக கருதப்படுகிறார்.[1][2] இவரது மகன்கள் காற்று கடவுள் ஷூ மற்றும் மழைக் கடவுள் டெஃப்னூட் ஆகியோர் ஆவர். இராவின் கண்ணிலிருந்து வெளிப்பட்ட நெருப்பில் இருந்து பெண் சிங்கக் கடவுள் செக்மெட் தோன்றினார்.

விரைவான உண்மைகள் இரா, துணை ...
Remove ads

இராவின் பயணம்

மான்ட்செட் (காலை படகு) மற்றும் மெசெக்டெட் (மாலை படகு) என்னும் இரு படகுகளின் மூலம் இரா நாள்தோறும் வானுலகில் இருந்து துவாத் உலகிற்கு (பாதாளம்) நாள்தோறும் பயணம் செய்வதாகக் கூறப்படுகிறது. இவ்வாறு செல்லும் போது அவருக்கு ஆட்டுக்கிடாவின் தலை இருக்கும்.

வெறுமையின் கடவுளான அபோபிசு என்ற பெரிய பாம்பு இராவின் பயணத்தை தடுத்து நிறுத்த இரவு வேளையில் அவரது காலை படகை விழுங்கிவிடுகிறார். அதனால் இரா இரவு படகின் மூலம் பாதாளம் செல்கிறார். பிறகு மறுநாள் காலை இரா மீண்டும் மறுபிறவி எடுக்கிறார். வானக் கடவுள் நூட் இராவை பெற்றெடுக்கும் வேளையே கதிரவ உதயம் என்று கூறப்படுகிறது. இவ்வாறு நாள்தோறும் இராவின் பயணம் சுழற்சி முறையில் நடந்து கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

Remove ads

வழிபாடு

ஈலியோபோலிசு மக்கள் இராவை பிறப்பின் கடவுளாக வழிபடுகின்றனர். அவர்கள் அனைவரும் இராவின் கண்ணீர் மற்றும் வியர்வை துளிகளில் இருந்து பிறந்ததாக நம்புகின்றனர். மேலும் இரா தானாக தோன்றியவர் என்று நம்புகின்றனர். ஆனால் தாவ் வழியினர் இராவை தாவ் கடவுள் உருவாக்கியதாக நம்புகிறார்கள்.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads