பண்டைய எகிப்தியக் கடவுள்கள்

From Wikipedia, the free encyclopedia

பண்டைய எகிப்தியக் கடவுள்கள்
Remove ads

பண்டைய எகிப்தியத் தெய்வங்கள் (Ancient Egyptian deities) என்பது எகிப்தில் பண்டைய காலத்தில் வழிபடப்பட்ட ஆண், பெண் கடவுளர்கள் ஆவர். எகிப்தியக் கடவுளர்களில் முக்கியமானவர் இரா எனும் சூரியக் கடவுள் ஆவர். பிற கடவுளர்கள் அமூன், ஒசைரிஸ், ஓரசு, அதின், மூத், ஆத்தோர், கோன்சு, சகுமித்து, தாவ் மற்றும் வத்செட் ஆவார்.

Thumb
தலையில் கதிரவ தகடும், நாகச் சின்னமும், வல்லூற்றின் தலையும் கொண்ட இரா எனும் சூரியக் கடவுள்
Thumb
கடவுளர் ஒசைரிஸ், இன்பு மற்றும் ஓரசு
Thumb
நடுவில் எகிப்தின் நான்காம் வம்ச மன்னர் மென்கௌரே, இடது பக்கம் ஆத்தோர் பெண் கடவுள், வலது பக்கம் பசுக் கடவுள் சிற்பம்

இந்தக் கடவுளரைச் சார்ந்த நம்பிக்கைகளும் சடங்குகளும் பண்டைய எகிப்தியச் சமயத்தின் கருப்பகுதியாகும். இவை பண்டைய எகிப்தில் தோன்றின. தெய்வங்கள் இயற்கை விசைகளையும் நிகழ்வுகளையும் குறித்தன. எகிப்தியர் தம் படையல்களாலும் சடங்குகளாலும் இத்தெய்வங்களை நிறைவுபடுத்தினர். எனவே இவை தம் பணிகளை மாத் எனும் தெய்வ ஆணையின்படி நிறைவேற்றவே இந்த ஆகுதிகளும் சடங்குகளும் செய்யப்பட்டன. எகிப்திய அரசு கி.மு 3100 இல் நிறுவப்பட்டதும், இந்தப் பணிகளைச் செய்யும் அதிகாரம் படைத்தவர் பார்வோன் எனும் எகிப்திய அரசர்களால் கட்டுபடுத்தப்பட்டனர். பார்வோன் இறைவனின் பேராளராகக் கருதப்பட்டார். இவரே சடங்குகள் செய்யப்பட்ட கோயில்களையும் மேலாண்மை செய்தார்.

கடவுளரின் சிக்கலான பான்மைகள் எகுபதியத் தொன்மங்களால் புலப்படுத்தப்பட்டன. இத்தொன்மங்கள் தெய்வங்களுக்கிடையில் நிலவும் உறவுகளையும் குடும்பப் பிணைப்புகளையும் தனிக் குழுக்கள் அவற்றின் படிநிலை வரிசை, பல தெய்வங்கள் ஒன்றி ஒன்றாதல் ஆகியவற்றை விவரித்தன. பண்டைய எகுபதியக் கலையில் விலங்குகளாக, மாந்தராக, பொருள்களாக, பல்வேறு வடிவங்களின் சேர்மானமாக அமையும் தெய்வங்களின் பல்வேறு தோற்றப்படிமங்கள் வழ்வின் சாரநிலையான கூறுபாடுகளை குறியீட்டு வடிவத்தில் வெளிப்பட்டன.

பல்வேறு காலகட்டங்களில், எகுபதியரின் தேவ சமூகத்தில் ரா எனப்பட்ட சூரியன் உட்பட. மருமக் கடவுளான அமுன், பெண்கடவுளான இசிசு என வெவ்வேறு கடவுளர் மிக உயர்ந்த நிலை வகித்துள்ளனர். உயர்நிலைக் கடவுளே உலகைப் படைத்தவராகவும் சுரியன் போல உயிர்தரவும் எடுக்கவும் வல்லவராகவும் கருதப்பட்டுள்ளார். எகுபதிய எழுத்துகளை வைத்துகொண்டு சில அறிஞர்கள் இவை அனைத்துக்கும் பின்னணியில் ஒற்றைக் கடவுள் வல்லமை சார்ந்தசிந்தனை இருந்ததாகவும் இவரே அனைத்து தெய்வங்களிலும் நிலவுவதாகவும் வாதிடுகின்றனர். இருந்தாலும் அவர்கள் எகுபதியர் சூரிய வழிபாட்டுக் காலமாகிய கி. மு 14 ஆம் நூற்ரண்டு வரை பலதெய்வ வழிபாட்டைக் கைவிட்டு விடவில்லை . அப்போது, நடப்பில் இருந்த சமயம் சூரியக் கடவுள் வழிபாட்டில் மட்டுமே கவனத்தைக் குவித்தது.

கடவுளர் உலகின் அனைத்திலும் அமைந்து இயற்கை நிகழ்வுகளையும் மாந்தர் வாழ்க்கைத்தடத்தையும் கட்டுபடுத்தியதாக்க் கருதப்பட்டது. மக்கள் கோயில்களிலும் கடவுளர் சிலைகளுடனும் சொந்த அலுவல்களுக்காகவும் அரசு சடங்குகளுக்கான பேரிலக்குகளுக்காகவும் ஊடாட்டம் செய்தனர். எகுபதியர் தெய்வ உதவியை நாடி வழிபட்டதோடு சடங்குகளால் அவர்களைத் தமக்காகச் செயல்பட வைத்தனர். அவர்களது அறிவுரைக்காகவும் தெய்வங்களை நாடியுள்ளனர். தம் கடவுளர் உடனான மாந்த உறவுகளே எகுபதியச் சமூகத்தின் அடிப்படை பகுதியாக விளங்கியது.

Remove ads

வரையறை

விரைவான உண்மைகள் "தெய்வம்" படவெழுத்துக்களில் ...

எகுபதிய மரபில் நிலவிய கடவுளர் எண்ணிக்கையை முடிவு செய்வது அரிது. தெளிவில்லாத, தன்மை அறியப்படாத பல தெய்வங்கள் எகுபதியப் பனுவல்களில் சுட்டப்படுகின்றன; பெயரில்லாத மறைமுகமான கடவுளரும் அவற்றில் சுட்டப்படுகின்றனர்.[2] எகுபதியவியல் வல்லுனர் ஜேம்சு பி. ஆலன் பனுவல்களில் 1400 அளவினும் கூடுதலான தெய்வங்கள் பெயரிடப்படுவதாகக் குறிப்பிடுகிறார்.[3] ஆனால் இவரது ஒருசாலி அறிஞராகிய கிறித்தியான் இலெப்ட்சு ஆயிர மாயிரக் கடவுளர் உள்ளதாகக் கூறுகிறார்.[4]

இந்த தெய்வங்களுக்கான எகுபதிய பெயர்கள் nṯr, "கடவுள்" என்பனவும் பெண்பால் நிலையில் nṯrt, "பெண்கடவுள்" என்பனவும் ஆகும்.[5]

Remove ads

முக்கிய எகிப்தியக் கடவுளர்கள்

Remove ads

இதனையும் காண்க

குறிப்புகளும் சான்றுகளும்

மேற்கோள் எழுத்துகள்

மேலும் படிக்க

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads