இராகு (நவக்கிரகம்)
அசுரப் பாம்பு உடம்புடன் கூடிய ஒரு அசுரர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
இராகு (ⓘ) (), அசுரர்களும், தேவர்களும் மந்திர மலையை மத்தாகவும், வாசுகியை கயிறாகவும் கொண்டு திருபாற்கடலை கடையும் போது, அமிர்தம் வெளிப்பட்டது. அதனை திருமால், மோகினி அவதாரம் கொண்டு முதலில் தேவர்களுக்கு வழங்குகையில், குறுக்கே புகுந்து ஒரு அசுரன் அமிர்தத்தை பருகியதை அறிந்த சூரிய-சந்திரர்கள், இவ்விடயத்தை திருமாலிடம் கூற, திருமால் அமிர்த கரண்டியால் அமிர்தம் குடித்த அசுரனின் தலையை வெட்டியதால், அவ்வசுரனின் உடல் இரண்டாக பிளவுபட்டது.[1][2][3]
அமிர்தம் குடித்த முண்டத்துடன் கூடிய பகுதி கேதுவாகவும், தலையுடன் கூடிய பகுதி இராகுவாகவும் மாறியது.
சூரியனை விழுங்கி கிரகணம் ஏற்படுத்த முற்பட்ட வேளை வெட்டப்பட்ட அசுரனின் தலை என இந்து தொன்மவியல் குறிப்பிடுகின்றது. இராகு சித்திரங்களில் எட்டு கருப்புக் குதிரைகளால் தேரில் கொண்டுவரப்படும் உடலற்ற பாம்பு என வரையப்பட்டுள்ளது. இது நவக்கிரகங்களில் ஒன்றாகும்.
Remove ads
மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads