இராசுமி வர்மா

இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia

Remove ads

இராசுமி வர்மா (Rashmi Varma) பாரதிய ஜனதா கட்சியினைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார்.[2] இவர் 25 ஆகத்து 2014 முதல் பீகார் சட்டமன்றத்தில் நர்கதியாகஞ்ச் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். இவர் 2014 இடைத்தேர்தலில் பீகாரின் நர்கட்டியாகஞ்சு தொகுதியில் வெற்றி பெற்றார். இவர் நர்கட்டியாகஞ்சு முன்னாள் நகரத் தந்தையாக இருந்தார். இவர் 2020 தேர்தலில் நர்கட்டியாகஞ்சிலிருந்து இந்தியத் தேசிய காங்கிரசு சார்பில் போட்டியிட்ட வினய் வர்மாவைத் தோற்கடித்து சட்டமன்ற உறுப்பினராகப் பொறுப்பேற்றார்.[3][4]

விரைவான உண்மைகள் இராசுமி வர்மாRashmi Varma, பீகார்-சட்டமன்ற உறுப்பினர் ...
Remove ads

அச்சுறுத்தல்கள் மற்றும் சர்ச்சைகள்

தேர்தலில் போட்டியிடக் கூடாது என வர்மாவைக் கடிதம் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது. இவர் தேர்தலில் போட்டியிட்டால் இவரது பிள்ளைகள் பாதுகாப்பாக இருக்க மாட்டார்கள் என இக்கடிதம் மூலம் சுட்டிக்காட்டப்பட்டது.[5] இராசுமி வர்மா, தேர்ந்தெடுக்கப்பட்ட உடனேயே, தனது சொந்த உயிருக்காக 25,00,000 ரூபாய் மீட்கும் தொகையைச் செலுத்தாவிட்டால் கொலை செய்துவிடுவதாகச் தொலைப்பேசி அழைப்பு மூலம் மிரட்டப்பட்டார். இருப்பினும், உள்ளூர் காவல்துறை மற்றும் நிர்வாகத்தின் உதவியுடன் மிரட்டல் நபர் கைது செய்யப்பட்டார்.[6][7]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads