இராஜபக்ச குடும்பம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இராஜபக்ச குடும்பம் (Rajapaksa family) என்பது இலங்கையின் அரசியலில் பெயர் பெற்று விளங்கிய ஒரு குடும்பம் ஆகும்.[1][2]மகிந்த ராசபக்சவின் ஆட்சிக்காலத்தில் நாட்டின் பலம் மிக்க குடும்பமாக விளங்கியது இதுவேயாகும்.[3][4] அத்துடன் 2005 தொடக்கம் 2015 வரையான காலப்பகுதியில் இக்குடும்பத்தின் பெரும்பாலான உறுப்பினர்கள் உயர் அரசியல் பதவிகளை வகித்து வந்தனர்.[5][6] சர்வாதிகாரம், ஊழல், மோசமான ஆட்சி, குடும்ப உறுப்பினர்களுக்குச் சலுகை வழங்கல் என்றவாறு பல்வேறு குற்றச்சாட்டுக்களும் இக்குடும்ப அங்கத்தவர்கள் மீது சுமத்தப்பட்டன.[7] அத்துடன் ராஜபக்ச குடும்பத்தின் செயற்பாடுகள் அரசராட்சி, ஏகாதிபத்திய ஆட்சி போன்றவற்றிற்கு முன்னெடுத்துச் சென்றதாகவும் பல்வேறு அறிக்கைகளும் குற்றச்சாடுக்களும் முன் வைக்கப்படன.[8][9]
பொது பல சேனா போன்ற பௌத்த அமைப்புக்களிற்கு ஆதரவு அளித்தமையினாலும் சிறுபான்மை இன மக்கள் மீது மேற்கொண்ட தக்குதல்களினாலும் ராஜபக்சக்கள் சிறுபான்மை இன மக்களால் வெறுப்பிற்கு உள்ளாகினர். எனினும் 2009 ஆம் ஆண்டில் விடுதலைப் புலிகளைத் தோற்கடித்தமையால் பெரும்பாலான சிங்கள மக்களின் ஆதரவைப் பெற்றுக் கொண்டனர்.[10] தற்போது இக்குடும்பத்தின் தலைவராக இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராசபக்ச விளங்குகின்றார்.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads