இராஜ சூரிய சேதுபதி
இராமநாதபுரம் சமஸ்தான மன்னர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
இராஜ சூரிய சேதுபதி என்பவர் இராமநாதபுரம் சமஸ்தான மன்னராவார். இவர் திருமலை ரெகுநாத சேதுபதிக்கு அடுத்து ஆட்சிக்கு வந்து ஆட்சிபுரிந்தார். இவர் திருமலை ரெகுநாத சேதுபதியின் சகோதரர் ஆதிநாராயணத் தேவரின் மகனாவார்.
திருமலை ரெகுநாத சேதுபதி மன்னர் ஆண்வாரிசு இல்லாமல் இறந்து போனதால் அவரின் சகோதரர் ஆதிநாராயணத் தேவரின் மகன் இராஜ சூரியத் தேவர் சேதுபதியாகப் பட்டமேற்றார். இவரது ஆட்சிக்காலம் மிகக்குறுகியதாக ஆறுமாதங்களுக்குள் முடிவுற்றது. இவர் மன்னராக இருந்தபோது தஞ்சாவூரில் இருந்த அழகிரி நாயக்கருக்கும் திருச்சியிலிருந்த சொக்கநாத நாயக்கருக்கும் ஏற்பட்ட பூசலில் தலையீடு செய்து சமரசம் செய்ய முயன்ற போது தஞ்சைத் தளவாய் வேங்கட கிருஷ்ணப்ப நாயக்கரால் கைது செய்யப்பட்டு திருச்சியில் கொலை செய்யப்பட்டார்.
இராமநாதபுரம் நகருக்குத் தெற்கேயுள்ள சக்கரக் கோட்டைக் கண்மாயின் தென் கிழக்கு மூலையில் உள்ள கலுங்கும் அதனை அடுத்துள்ள சிற்றுாரும் இவரது பெயரால் இராஜசூரியமடை என்று வழங்கப்பட்டு வருகின்றன.[1]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads