இராட்டை

From Wikipedia, the free encyclopedia

இராட்டை
Remove ads

இராட்டை (Spinning wheel) என்பது நூற்கும் எந்திரம் என பொருள்படும். இராட்டை சக்கரங்கள் அநேகமாக 11 ஆம் நூற்றாண்டில், ஆசியாவில் தோன்றின. இது மேலும் படிப்படியாக கை சுழல் கொண்ட அச்சு மற்றும் நூல் நூற்கும் கழியாக மாற்றம் செய்யப்பட்டது.

Thumb
Irish spinning wheel – around 1900
அமெரிக்கக் காங்கிரசு நூலகம் collection

தோற்றம்

11ம் நூற்றாண்டில் அரபுநாடுகள் மற்றும் சீனாவில் தோன்றி 13 ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் அறிமுகமானது.

காந்தியின் அந்நிய துணி எதிர்ப்பு.

Thumb
Mahatma Gandhi spinning yarn on a charkha.

இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்து போராடிய காந்தி கையில் எடுத்த ஆயுதம் சாதாரண நூல் நூற்கும் இராட்டை. இந்தியாவில் உற்பத்தியாகும் பஞ்சை, மிக குறைந்த விலைக்கு வாங்கி, ஆங்கிலேயர் அவர்கள் நாட்டிற்கு கப்பல் மூலம் கொண்டு சென்றனர். இதை துணிகளாக தயாரித்து மிக அதிக விலைக்கு இந்திய மக்களிடம் விற்பனை செய்து கொள்ளை இலாபம் அடைந்தனர்.

காந்தி கை இராட்டையை தன்னிறைவடைந்த கிராமீய பொருளாதாரத்தின் சின்னமாக கண்டார். இந்திய மக்கள் வெவ்வேறு பணிகளில் ஈடுபட்டாலும் கூட கையிராட்டையை பயன்படுத்தி நூல் நூற்க வேண்டும் என்றார். இராட்டை நூல் நூற்கும் வேள்வியும். அந்நிய துணி எதிர்ப்புப் போராட்டம் பிரிட்டிசாரின் வர்த்தக நலன்களையும், அந்நாட்டு பொருளாதாரத்தையும் கடுமையாக பாதித்தன.

Remove ads

பாடல்

ஆடு ராட்டே சுழன் றாடு ராட்டே சுய
ஆட்சியைக் கண்டோமென் றாடு ராட்டே!
ராட்டை சுற்றுவீர்! - கை
ராட்டை சுற்றுவீர்
நம்பிக்கை கொண்டெல்லோரும் கை
ராட்டை சுற்றுவீர்! - கை
ராட்டை சுற்றுவீர் - சுய
நாட்டைப் பற்றுவீர்!

புகைப்பட தொகுப்பு


இராட்டை வகைகள்

  1. விசிறி இராட்டை
  2. படுக்கும் இராட்டை
  3. கிஸான் இராட்டை
  4. பெட்டி இராட்டை
  5. மகன்வாடி இராட்டை
  6. ஈரிழை இராட்டை
  7. வில் இராட்டை
  8. மூங்கில் இராட்டை

விசிறி வகை இராட்டைகளை ”நிற்கும் இராட்டைகள்” எனவும் அழைப்பர்.இவற்றின் விலை சற்று அதிகம்.


வெளி இணைப்புகள்

விரைவான உண்மைகள்
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads