இராமகிருசுணா மிசன் விவேகானந்தா பல்கலைக்கழகம் - கோயம்புத்தூர் வளாகம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இராமகிருசுணா மிசன் விவேகானந்தா பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் (RKMVU) கொல்கத்தா பேலூர் மடத்தில் அமைந்துள்ள இராமகிருசுணா மிசன் விவேகானந்தா பல்கலைக்கழகத்தின் வெளிவளாக சிறப்புக் கல்வி மையமாகும். இப்பல்கலைக்கழகத்தைக் குறித்த கருத்துரு சுவாமி விவேகானந்தருக்கு 111 ஆண்டுகளுக்கு முன்னரே ஏற்பட்டதாகக் கூறப்படுகின்றது. நடுவண் அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் இதனை ஏ தரநிலை பல்கலைக்கழகமாக ஏற்றுள்ளனர்.
இந்த பல்கலைக்கழகப் பிரிவு கோயம்புத்தூரில் உள்ளது.
Remove ads
மேலோட்டம்
கோயம்புத்தூர் இராமகிருசுணா மிசன் விவேகாநந்தா பல்கலைக்கழகம் (RKMVU), கொல்கத்தா பேலூர் மடத்திலிருந்து இயங்கும் விவேகானந்தா பல்கலைக்கழகத்தின் வெளிவளாக பல்கலைக்கழகப் பிரிவு ஆகும். இது கோவையிலுள்ள இராமகிருஷ்ண மிசன் வித்தியாலய வளாகத்தில் இயங்குகின்றது.
இதன் (பதவிசார்) வேந்தராக சுவாமி சுகிதானந்தா உள்ளார்; இவர் இராமகிருசுண மடம் மற்றும் இராமகிருசுண இயக்கம் இரண்டிற்கும் உலகளாவிய பொதுச்செயலாளராக உள்ளார். துணை வேந்தராக ஆத்மப்பிரியானந்தாவும் நிர்வாகத் தலைவராக அபிராமானந்தாவும் உள்ளனர். துறைத்தலைவர்களும் கல்விப்பிரிவு தலைவர்களும் இவர்களுக்கு உறுதுணையாக உள்ளனர்.
Remove ads
மேற்சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads