இராமகிருஷ்ணன் (நடிகர்)

From Wikipedia, the free encyclopedia

Remove ads

இராமகிருஷ்ணன் என்பவர் தமிழ் மொழி படங்களில் தோன்றிய ஒரு இந்திய நடிகர் ஆவார். இவர் ராஜ்மோகனின் கிராமிய படமானகுங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும் (2009) திரைப்படத்தில் அறிமுகமானதிலிருந்து, போங்கடி நீங்களும் உங்கள் காதலும் (2014) மற்றும் ஒரு கனவு போல (2017) உள்ளிட்ட படங்களில் முன்னணி மற்றும் துணை வேடங்களில் நடித்துள்ளார்.

விரைவான உண்மைகள் Ramakrishnan, பிறப்பு ...
Remove ads

தொழில்

இயக்குநர் கே. பாலச்சந்தரிடம் உதவியாளராக திரைத்துறையில் பணியினைத் தொடங்கிய இராமகிருஷ்ணன், இயக்குநர் சேரனிடம் பணிபுரிந்தார்.[1] ராஜ்மோகன் இயக்கிய குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும் (2009) என்ற கிராமப்புற படத்தில் நாயகனாக நடிக்க எஸ். பி. பி. சரண் கேட்டபோது தனது முடிவை மாற்றி நடிக்க ஆரம்பித்தார். பாண்டிராஜின் பசங்க (2009) படத்தில் நடிப்பதற்குப் பதிலாக அந்தப் படத்தில் பணியாற்றினார்.[2] பின்னர் இவர் இதைத் தொடர்ந்து ராசு மதுரவன் இயக்கிய கோரிப்பாளையம் (2010) மற்றும் நீண்ட கால தாமதமான வெட்கத்தைக் கேட்டல் என்ன தருவாய் ஆகிய படங்களில் நடித்தார். இதில் இவர் முன்னணி நடிகராக நடிக்கவிருந்தார், ஆனால் இவருக்குப் பதிலாக அசோக் நடித்தார்.[3] இராமகிருஷ்ணனும் சரண் தயாரிப்பு நிறுவனத்தின் படத்தினை இயக்க ஒப்புக்கொண்டார், ஆனால் படம் இறுதியில் வெளியிடப்படவில்லை.[4]

2014-இல், இவர் போங்கடி நீங்களும் உங்கள் காதலும் (2014) என்ற திரைப்படத்தை இயக்கி நடித்தார். இது பாலியல் கருப்பொருளுக்காக விமர்சகர்களால் பரவலாக விமர்சிக்கப்பட்டது.[5] 2017-இல், இவர் எந்த நேரத்திலும் மற்றும் ஒரு கனவு போல ஆகிய படங்களில் தோன்றினார்.[6]

Remove ads

திரைப்படவியல்

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, திரைப்படம் ...
Remove ads

தொலைக்காட்சி

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, தலைப்பு ...

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads