அரூர்
தருமபுரி மாவட்டத்திலுள்ள நகராட்சி From Wikipedia, the free encyclopedia
Remove ads
அரூர் (ஆங்கிலம்:Harur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தருமபுரி மாவட்டத்தில் அரூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
Remove ads
வரலாறு
அரூரின் பழைய பெயர் அரியூர் என்பதாகும். கல்வெட்டுகளும் இந்த ஊரை 'அரியூர்' என்றே குறிப்பிடுகின்றன. 'அரூர்' என்பது அதன் திரிபு.[3][4] இந்த ஊரை, கிராம மக்களில் பலர் இன்னமும் அதன் பழைய பெயரான அரியூர் என்றே குறிப்பிடுகின்றனர். பேரூராட்சியாக இருந்த இந்த ஊர் 2024 யூலை நகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்தார்.[5] அரூர் நகரம் முந்தைய சேலம் மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.
Remove ads
அமைவிடம்
அரூர் பேரூராட்சியிருந்து, தருமபுரி 40 கி.மீ. (வழி: மொரப்பூர், ஒடசல்பட்டி). மாரண்டஹள்ளி 66 கி.மீ. (வழி: மொரப்பூர், கம்பைநல்லூர், காரிமங்கலம், வெள்ளிசந்தை) தொலைவில் உள்ளது. இதனருகே உள்ள தொடருந்து நிலையம் 13 கி.மீ. தொலைவில் உள்ள மொரப்பூர் ஆகும்.
பேரூராட்சியின் அமைப்பு
14.75 ச.கி.மீ. பரப்பும், 18 வார்டுகளும், 113 தெருக்களையும் கொண்ட அரூர் பேரூராட்சியானது அரூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தருமபுரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[6]
புவியியல்
இவ்வூரின் அமைவிடம் 12.07°N 78.5°E ஆகும்.[7] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 350 மீட்டர் (1148 அடி) உயரத்தில் இருக்கின்றது.
மக்கள் வகைப்பாடு
இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இங்கு 6,607 வீடுகளில் 25,469 மக்கள் வசிக்கின்றார்கள். இவர்களில் 12,543 ஆண்கள், 12,926 பெண்கள் ஆவர். அரூர் மக்களின் சராசரி கல்வியறிவு 75% ஆகும். இதில் ஆண்களின் கல்வியறிவு 82%; பெண்களின் கல்வியறிவு 68% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியது ஆகும். அரூர் மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவர்.[8]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads