இராமநாதன் கிருஷ்ணன்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

இராமநாதன் கிருஷ்ணன் (பிறப்பு 11 ஏப்ரல் 1937, சென்னை, இந்தியா) இந்தியாவின் ஓய்வுபெற்ற டென்னிஸ் விளையாட்டு வீரராவார். 1950களிலும் 1960களிலும் உலகின் முன்னணி டென்னிஸ் வீரர்களுடன் விளையாடியவர்.

விளையாட்டுத் தொழில்

இவர் தமது தந்தை டி.கே. இராமநாதனிடம் டென்னிஸ் பயின்றார். விரைவிலேயே பல இளநிலை டென்னிஸ் பட்டங்களை வென்று தேசிய அளவில் கவனிக்கப்பட்டார்.

விம்பிள்டன்

1954ஆம் ஆண்டு விம்பிள்டனில் சிறுவர் ஒற்றையர் பட்டத்தைப் பெற்ற முதல் ஆசியர் என்ற பெருமையைப் பெற்றார்.[1] 1959ஆம் ஆண்டு, ஆண்கள் ஒற்றையர் போட்டியில் மூன்றாம் சுற்று வரை முன்னேறினார். அதே ஆண்டு இந்தியாவில் நடந்த டேவிஸ் கோப்பைப் போட்டியில் விம்பிள்டனில் இரண்டாவதாக வந்த ராட் லேவரை நான்கு செட்களில் வீழ்த்தினார்.[2]. 1960ஆம் ஆண்டு விம்பிள்டன் தரவரிசையில் ஏழாவது இடம்பிடித்த கிருஷ்ணன் அரையிறுதியில் அந்த ஆண்டு கோப்பையை வென்ற நீல் பிரேசரிடம் தோற்றார்.[3]. 1961 ஆம் ஆண்டு, மீண்டும் அரையிறுதியில் ஆடிய கிருஷ்ணன் ராட் லேவரிடம் தோற்றார். 1962ஆம் ஆண்டு விம்பிள்டன் தரவரிசையில் நான்காம் இடத்தைப் பிடித்தநிலையில் போட்டி இடையிலேயே கால் காயம் காரணமாக விலக வேண்டி வந்தது.[4].

டேவிஸ் கோப்பை

கிருஷ்ணன் 1966ஆம் ஆண்டு டேவிஸ் கோப்பை இறுதியாட்டம் செல்ல பங்கெடுத்த அணியில் முதன்மை ஆட்டக்காரராக இருந்தார்.மண்டலங்களிடையேயான போட்டியில் இந்தியா மேற்கு செருமனியை வென்று அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அரையிறுதியில் கொல்கத்தாவில் பிரேசிலுடனான ஆட்டத்தில் இரு அணிகளும் தலா இரு ஆட்டங்கள் வென்ற நிலையில் போட்டி முடிவு கிருஷ்ணனுக்கும் தாமஸ் கோக்கிற்குமிடையே நடந்த ஆட்டத்தை சார்ந்திருந்தது.கோக் இரண்டுக்கு ஒன்று என்று செட்டளவிலும் நான்காவது செட்டில் 5-2 என்ற ஆட்ட அளவிலும் முன்னணியில் இருந்தார். மறக்க முடியாத விளையாட்டை விளையாடி கிருஷ்ணன் நான்காவது செட்டை 7-5 என்ற கணக்கில் வென்று போட்டியையும் வென்றார்.[5]. 1953 க்கும் 1975க்கும் இடையே கிருஷ்ணன் டேவிஸ் கோப்பை விளையாட்டுகளில் தொடர்ந்து விளையாடி 69-28 என்ற வெற்றிக் கணக்கை நிலைநாட்டினார்.[6].

இந்திய தேசிய டென்னிஸ் போட்டிகளில் எட்டு ஆண்டுகள் தொடர்ச்சியாக வென்றுள்ளார்.

Remove ads

விருதுகள்

கிருஷ்ணன் 1961ஆம் ஆண்டு அருச்சுனா விருது, 1962ஆம் ஆண்டு பத்மஸ்ரீ மற்றும் 1967ஆம் ஆண்டு பத்ம பூசண் பெற்றிருக்கிறார்[7].

புத்தகம்

கிருஷ்ணன் தமது மகன் ரமேஷ் கிருஷ்ணன் மற்றும் நிர்மல் சேகர் இவர்களுடன் இணைந்து 'ஓர் டென்னிஸ் தொடுகை:டென்னிஸ் குடும்பமொன்றின் கதை (A touch of tennis: The story of a tennis family)' என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.[8]. மூன்று தலைமுறைகளின் டென்னிஸ் சாதனைகளை வெளிக்கொணரும் இப்புத்தகத்தை பெங்குவின் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.[9].

தற்போது

தற்போது கிருஷ்ணன் சமையல்வாயு வினியோக நிறுவனமொன்றை சென்னையில் நடத்தி வருகிறார்.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads