இராஷ்டிரிய லோக் தளம்
இந்திய அரசியல் கட்சி From Wikipedia, the free encyclopedia
Remove ads
இராஷ்டிரிய லோக் தளம் (Rashtriya Lok Dal) (மொழிபெயர்ப்பு: தேசிய மக்கள் கட்சி) இந்தியாவின் முன்னாள் பிரதமரும், லோக் தளம் கட்சியின் தலைவருமான சரண் சிங்கின் மகன் அஜய் சிங் என்பவர் இக்கட்சியை 1996-ஆம் ஆண்டில் அரசியல் கட்சியாக நிறுவினார்.[2][3]தற்போது இக்கட்சியின் தலைவராக சௌத்திரி அஜித் சிங்கின் மகன் ஜெயந்த் சௌத்திரி என்பவர் உள்ளார். இக்கட்சியின் சின்னம் கைப்பம்பு[தெளிவுபடுத்துக] ஆகும்.
இக்கட்சியின் தலைவராக அஜித் சிங் இருக்கும் போது தேசிய ஜனநாயகக் கூட்டணி (1999-2003,2009-2011), சமாஜ்வாதி கூட்டணி மற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் (2011-2014) செயல்பட்டார். இக்கட்சியின் தற்போதைய தலைவர் ஜெயந்த் சௌத்திரி, மகாகட்பந்தன் கூட்டணியிலும் (2018-2019), தற்போது சமாஜ்வாதி கூட்டணியிலும் (2003-2007,2019-தற்போது வரை) உள்ளது.
Remove ads
தேர்தல் வரலாறு
- இக்கட்சியின் ஒரு சட்டமன்ற உறுப்பினர் சுபாஷ் கார்க் இராஜஸ்தான் சட்டமன்றத்தில் உறுப்பினராகவும், அமைச்சராக உள்ளார்.[4]
- 2002-இல் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தலைமையிலான அமைச்சரவையில் இக்கட்சியின் இரு சட்டமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்களாக இருந்தனர்.
- 2004 மக்களவைத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி வைத்து மேற்கு உத்தரப் பிரதேசத்தில் 3 மக்களவை தொகுதிகளை வென்றது.[5]
- 2009 மக்களவை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்து, உத்தரப்பிரதேசத்தில் ஏழு தொகுதிகளில் போட்டியிட்டு, 5 தொகுதிகளை வென்றது.[4]
- 12 டிசம்பர் 2011 அன்று இக்கட்சி ஐக்கிய முற்போக்கு கூட்டணியுடன் இணைந்து, 2014 மக்களவைத் தேர்தலில், உத்தரப் பிரதேசத்தில் 8 இடங்களில் போட்டியிட்டு,[6]அனைத்து தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவியதுடன், கட்சித் தலைவர் அஜித் சிங்கும், அவர் மகன் ஜெயந்த் சௌத்திரியும் முறையே பாக்பத் மற்றும் மதுரா மக்களவைத் தொகுதிகளில் தோல்வியைத் தழுவினர்.[4][7]
- சனவரி 2015-இல் உத்தரப் பிரதேச மேலவை தேர்தலில் இக்கட்சி பகுஜன் சமாஜ் கட்சியை ஆதரித்தது.[8][9][10]
- 2017 உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் இக்கட்சி ஒரு தொகுதியில் மட்டும் வென்றது.
- 2018 இராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தலில், இக்கட்சியின் வேட்பாளர் சுபாஷ் மார்க் வெற்றி பெற்று அமைச்ச்ராக உள்ளார்.
- 2019இல் இக்கட்சி உத்தரப் பிரதேச சட்டமன்ற இடைத்தேர்தலில், பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் சமாஜ்வாதி கட்சி கூட்டணியில் இணைந்து 3 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட்டு, அனைத்திலும் தோல்வியை தழுவியது.
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads