இராஸ்நாமா
மகாபாரதத்தின் பாரசீக மொழிபெயர்ப்பு From Wikipedia, the free encyclopedia
Remove ads
இராஸ்நாமா (Razmnama) என்பது மகாபாரதத்தின் பாரசீக மொழிபெயர்ப்பாகும். இது முகலாய பேரரசர் அக்பரின் கட்டளையின்படி உருவாக்கப்பட்டது. அக்பரால் பத்தேப்பூர் சிக்ரியில் பதிவுகள் மற்றும் மொழிபெயர்ப்பிற்காக 1574 இல் மக்தாப் கானா என்கிற "மொழிபெயர்ப்பு இல்லம்" ஒன்றை தொடங்கினார். இராஜதரங்கிணி, இராமாயணம் மற்றும் மகாபாரதம் ஆகிய சமசுகிருத புத்தகங்களை முகலாய அரசவையின் இலக்கிய மொழியான பாரசீக மொழி மொழிபெயர்க்க அவர் ஒரு குழுவை நியமித்தார்.[1]
அக்பரின் அரசவை மொழிபெயர்ப்புகள் பல படிகளில் செய்யப்பட்டன. இதன் பொருள் இந்து அறிஞர்களால் விளக்கப்பட்டது. முதல் வரைவு முஸ்லிம் இறையியலாளர் நகிப் கானால் பாரசீக மொழியில் உருவாக்கப்பட்டது, பின்னர் இது அக்பரின் அவையில் இடம்பெற்ற நவரத்தினக்களில் ஒருவரன பைசியால் நேர்த்தியான உரைநடை அல்லது வசனமாக மேம்படுத்தப்பட்டது. பாரசீக மொழியில், "ராஸ்" என்றால் "போர்" என்றும் "நாமா" என்றால் "கதை", "வரலாறு" அல்லது "காவியம்" என்றும் பொருள்.
Remove ads
பிரதிகள்
நான்கு முழுமையான முகலாய கையெழுத்துப் பிரதிகள் 1584 மற்றும் 1586 க்கு இடையில் தயாரிக்கப்பட்டதாக அறியப்படுகின்றன. இவை இப்போது ஜெய்ப்பூரில் 176 ஓவியங்களாக உள்ளன. அவற்றில் 147 ஓவியங்கள் 1884 இல் தாமஸ் ஹோல்பின் ஹென்ட்லி என்பவரால் மீண்டும் உருவாக்கப்பட்டன. மற்றொன்றின் இறுதி ஐந்து பகுதிகள், 1598 மற்றும் 1599 க்கு இடையில் தயாரிக்கப்பட்டு 1921 இல் பிரிந்து, இராஸ்நாமா பிரித்தானிய நூலகத்திலும் பிற பக்கங்கள் வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் இந்தியா முழுவதும் சேகரிப்புகளில் பரவியுள்ளன ‘பிர்லா கையெழுத்துப் பிரதி’ என அழைக்கப்படும் மூன்றாவது, கொல்கத்தாவில் உள்ள பிர்லா கலை மற்றும் கலாச்சார அகாதமியில் 1605இல் சேர்க்கப்பட்டது. நான்காவது, தற்போது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சிறு உருவங்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளன. இது 1616-1617 ஆம் ஆண்டில் எழுதப்பட்டது. நான்காவது, தற்போது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சிறு உருவங்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளன. இது 1616-1617 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.[2]



1582இல் மகாபாரதத்தை பாரசீக மொழியில் மொழிபெயர்க்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஒரு லட்சம் சுலோகங்களைக் கொண்ட மகாபாரதத்தின் மொழிபெயர்ப்பு பணி 1584-1586 காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்டது.
Remove ads
தற்கால நிலைமை
இன்று இந்தப் படைப்பின் நகலை ஜெய்ப்பூரின் ஜெய்ப்பூர் நகர அரண்மனை வளாகத்திலுள்ள அருங்காட்சியகத்தில் முஷ்பிக்கின் ஓவியங்களுடன் காணப்படுகின்றது.[3] இந்த இராஸ்நாமாவுக்கு அபுல் ஃபசல் முன்னுரை எழுதியுள்ளார். இந்தப் பிரதியின் 11வது பதிப்பில் அபுல் ஃபசல் கி. பி. 1588ஆம் ஆண்டு என தேதியைக் குறிப்பிடுகிறார்.[4] ஜெய்ப்பூர் இராஸ்நாமாவில் அக்பர், ஷாஜகான் மற்றும் சா ஆலாம் ஆகியோரின் முத்திரைகள் உள்ளன. இந்த கையெழுத்துப் பிரதியில், 169 அத்தியாயங்கள் விளக்கப்பட்டுள்ளன. பசவன், தஸ்வந்த் மற்றும் லால் ஆகியோர் இதனை நகலெடுத்த கலைஞர்கள் ஆவர்.[5] இக்கையெழுத்துப் பிரதியின் 147 மாதிரிகள் 1883 ஆம் ஆண்டில் டி. எச். ஹென்ட்லியின் மெமோரியல்ஸ் ஆஃப் தி ஜெய்ப்பூர் எக்சிபிசன் என்ற புத்தகத்தில் மீண்டும் உருவாக்கப்பட்டன.[4][6]
Remove ads
இரண்டாவது நகல்
இராஸ்நாமாவின் இரண்டாவது நகல் 1598 மற்றும் 1599 க்கு இடையில் முடிக்கப்பட்டது. முதல் பிரதியுடன் ஒப்பிடும்போது, இரண்டாவது பிரதியுடன் 161 ஓவியங்கள் மிகவும் விரிவாக விவரிக்கப்பட்டிருந்தன. இவை இந்து மதத்தை நன்கு புரிந்துகொள்ள உதவும் என்பதால் இந்த பிரதிகள் அரச குடும்ப உறுப்பினர்களுக்கு பரிசுகளாக அனுப்பப்பட்டன. அக்பரின் மத அலுவலகத்தில் உறுப்பினர் அப்துல் காதிர் பதாயுனியின் கூற்றுப்படி, அக்பர் தனது இராச்சியத்தின் அனைத்து அமீர்களுக்கும் பிரதிகளை அனுப்ப உத்தரவிட்டார் என அறிய வருகிறது. அவற்றை கடவுளிடமிருந்து பெறப்பட்ட பரிசு எனவும் அறிவுறுத்தப்பட்டது. அக்பரின் அரசவையில் இடம்பெற்றிருந்த வரலாற்றாசிரியரான அபுல் ஃபசல் எழுதிய முன்னுரையின்படி, இந்த பரிசுகளின் பின்னணியில் உள்ள நோக்கமும் அவற்றின் விநியோகமும் மிகவும் புனிதமானவை.[1]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads