இரா. சச்சிதானந்தம்

தமிழக அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia

Remove ads

இரத்னவேல் சச்சிதானந்தம் (Rathinavel Sachidanandam) என்பவர் தமிழ்நாட்டைச் ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 2024 ஆம் ஆண்டு திண்டுக்கல் மக்களவைத் தொகுதியிலிருந்து இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பாக இந்திய நாடாளுமன்றத்தின் கீழவையான மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

விரைவான உண்மைகள் இர. சச்சிதானந்தம், நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை (இந்தியா) ...
Remove ads

பின்னணி

சச்சிதானந்தம் திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் ஒன்றியம், காமாட்சிபுரம் கிராமம் கட்டச்சின்னாம்பட்டியைச் சேர்ந்தவர். இவருக்கு ச. கவிதா என்ற மனைவியும், இரா. ச. வைசாலி, இரா. ச. மிருணாளினி ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர்.

அரசியல் வாழ்வு

இளம் அறிவியல் பட்டதாரியாக சச்சிதானந்தம் தன் இளம் வயதிலிருந்தே மாக்சிய பொதுவுடமைக் கட்சியின் உறுப்பினராக இருந்துவருகிறார். 1987ஆம் ஆண்டு இந்திய மாணவர் சங்கத்தில் மாவட்ட துணைச் செயலாளராகவும், திண்டுக்கல் நகரத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். 1992ஆம் ஆண்டு இந்திய இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் இணைந்து, 1994-2002 வரை மாவட்டச் செயலாளராக, மாநில செயற்குழு உறுப்பினராக, மாநில துணைச் செயலாளராக பணியாற்றியுள்ளார். 2004-2007 வரை ஆத்தூர், ரெட்டியார்சத்திரம் ஒன்றியங்கள் உள்ளிட்ட மார்க்சிய பொதுவடமைக் கட்சியின் திண்டுக்கல் வட்ட (தாலுகா) செயலாளராகவும், பின்னனர் ரெட்டியார்சத்திரம் ஒன்றியச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். 2007-2018 வரை தமிழ்நாடு விவசாய சங்கத்தில் மாவட்டச் செயலாளர், மாநில துணைச் செயலாளர் மற்றும் அகில இந்திய கிசான் கவுன்சில் உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். இவர் மார்க்சிய பொதுவுடமைக் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழுவின் உறுப்பினராகவும், 2018 ஆம் ஆண்டு முதல் மார்க்சியப் பொதுவடமைக் கட்சியின் திண்டுக்கல் மாவட்டச் செயலாளராக பணியாற்றி வருகிறார்.[2]

Remove ads

தேர்தல்கள்

சச்சிதானந்தம் தன் 26 வயதில் ரெட்டியார்சத்திரம் ஒன்றியம், காமாட்சிபுரம் ஊராட்சி மன்றத் தலைவராக தேர்வு செய்யப்பட்டு, 1996-2006 வரை இரண்டு முறை மக்கள் பிரதிநிதியாக பதவிவகித்துள்ளார்.

2024 ஆம் ஆண்டு திண்டுக்கல் மக்களவைத் தொகுதியிலிருந்து இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பாக இந்திய நாடாளுமன்றத்தின் கீழவையான மக்களவைக்குத் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads