தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இந்தியாவின் 18 ஆவது மக்களவைக்கான தேர்தல் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 அன்று நடந்தது.[1] இத்தேர்தல் முடிவுகள் இந்தியாவின் பிற பகுதிகளிலும் தேர்தல் முடிவுற்ற பின்னர் சூன் 4 அன்று வாக்கு எண்ணிக்கைக்குப் பின்னர் வெளியிடப்பட்டது.[2]இதில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நாடாளுமன்றத் தொகுதிகளையும் வென்றது.
Remove ads
பின்புலம்
18 சூலை 2023 அன்று உருவாக்கப்பட்ட இந்தியத் தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணியில் திமுக அங்கம் வகிக்கிறது. 25 செப்டம்பர் 2023 அன்று, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து அதிமுக அதிகாரப்பூர்வமாக விலகியது. அதிமுக புதிய கூட்டணியை உருவாக்கி வழிநடத்தும் என அறிவிக்கப்பட்டது.[3][4][5]
தேர்தல் அட்டவணை
கட்சிகளும் கூட்டணிகளும்
இந்தியத் தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணி
திமுகவுக்கும் காங்கிரசுக்கும் இடையே தொகுதி பங்கீடு தொடர்பாக முதல் கட்ட பேச்சுவார்த்தை முடிந்தது.[6] இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் இந்த நாடாளுமன்றத் தேர்தலில், இராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுவது என தீர்மானிக்கப்பட்டது. இக்கட்சி ஏணி சின்னத்தில் போட்டியிடும். இராமநாதபுரத்தில் மீண்டும் நவாஸ்கனி போட்டியிடுவார் என்று இந்தியன் ஒன்றிய முஸ்லிம் லீக் கட்சித் தலைவர் காதர் மொய்தீன் தெரிவித்தார். கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அக்கட்சி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும்.[7][8] இந்தியப் பொதுவுடமைக் கட்சி, இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) இரண்டுக்கும் தலா 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. போட்டியிடும் தொகுதிகள் குறித்து பின்னர் முடிவு செய்யப்படும் என அக்கட்சி பொதுச்செயலாளர்கள் தெரிவித்தனர்.[9] தி.மு.க. - விடுதலை சிறுத்தைகள் கட்சி இடையே தொகுதி பங்கீடு இறுதியாகியது. அதன்படி, தி. மு. க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகளுக்கு விழுப்பும் மற்றும் சிதம்பரம் தொகுதிகள் ஒதுக்கப்பட்டது.[10][11] திமுக - மதிமுக தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்பட்டு முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, மக்களவை தேர்தலில் போட்டியிட மதிமுகவுக்கு ஒரு மக்களவை தொகுதியை திமுக ஒதுக்கியுள்ளது என்றும் தொகுதி பின்னர் முடிவு செய்யப்படும் என்றும் கூறினார். தனிச்சின்னத்தில் தான் மதிமுக போட்டியிடும் என்றும் கூறினார். இதன் பின்னர் மதிமுக திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டது.[12] திமுக கூட்டணியில் காங்கிரசு தமிழகத்தில் ஒன்பது மக்களவைத் தொகுதிகளிலும் புதுச்சேரி மக்களவைத் தொகுதியிலும் என மொத்தம் 10 (பத்து) தொகுதிகளில் போட்டியிடும் என முடிவெடுக்கப்பட்டது.[13]இந்திய பொதுவுடைமை கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், நாகை, திருப்பூர் தொகுதிகளில் அந்தக் கட்சி போட்டியிட இருப்பதாக அறிவித்தது. இதேபோல் இந்தியப் பொதுவுடைமை (மார்க்சியம்) கட்சிக்கும் இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அக்கட்சிக்கு மதுரை மற்றும் திண்டுக்கல் தொகுதிகளை திமுக ஒதுக்கியது.[14] [15] திமுக அணியில் காங்கிரசு கட்சிக்கு திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை, சிவகங்கை, கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, கரூர், விருதுநகர் மற்றும் புதுச்சேரி ஆகிய தொகுதிகளை திமுக ஒதுக்கியது.[16] காங்கிரசு கடந்த தேர்தலில் திருவள்ளூர், ஆரணி, திருச்சி, கரூர், சிவகங்கை, கிருஷ்ணகிரி, விருதுநகர், கன்னியாகுமரி, தேனி, புதுச்சேரி ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டது. தற்போது அந்த கட்சிக்கு ஆரணி, திருச்சி, தேனி ஆகிய தொகுதிகளுக்கு பதிலாக கடலூர், மயிலாடுதுறை, நெல்லையை திமுக ஒதுக்கியது.[17] திமுக கூட்டணியில் திருச்சி மக்களவைத் தொகுதியில் மதிமுகவின் முதன்மை செயலாளர் துரை வைகோ போட்டியிட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.[18] திமுக கூட்டணியில் இந்திய பொதுவுடமைக் கட்சி சார்பில் திருப்பூர் தொகுதியில் கே. சுப்பராயனும் நாகப்பட்டினம் தொகுதியில் வை. செல்வராசும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.[19]
அதிமுக கூட்டணி
22 சனவரி 2024 அன்று, கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த 5 பேர் கொண்ட குழுவை அதிமுக அமைத்தது.[20][21] அதிமுக - தேமுதிக இடையே தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி, அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இவை திருவள்ளூர் (தனி), மத்திய சென்னை, கடலூர், விருதுநகர், தஞ்சாவூர் என அறிவிக்கப்பட்டது.[22]
தேசிய ஜனநாயகக் கூட்டணி
பாஜக கூட்டணியில் ஐ.ஜே.கே கட்சிக்கு பெரம்பலூர் தொகுதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று முடிவெடுக்கப்பட்டது. பெரம்பலூர் தொகுதியில் ஐஜேகே போட்டியிட இருப்பதாக பாரிவேந்தர் பேட்டியளித்தார்.[23] மக்களவைத் தேர்தலில் கூட்டணி அமைப்பதற்காக பாஜக - பாமக இடையிலான ஒப்பந்தம் கையெழுத்தானது[24]
தனித்து தேர்தல் களத்தில் நிற்கும் கட்சி
- நாம் தமிழர் கட்சி, கன்னியாகுமரி, தென்சென்னை, திருநெல்வேலிக்கு வேட்பாளர்களை அறிவித்தது.[25] [26] [27][28]
நாம் தமிழர் 2019 முதல் பயன்படுத்தி வரும் விவசாயி சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் பாரதிய பிரஜா ஆகியதா என்ற கர்நாடகா கட்சிக்கு ஒதுக்கியது.[29][30] [31] இதனால் விவசாயி சின்னத்தை இக்கட்சி இழந்துள்ளது. முதன் முதல் இரட்டை மெழுகுவர்த்தியில் போட்டியிட்டது இக்கட்சி, உள்ளாட்சி தேர்தல் உட்பட கடைசி ஆறு தேர்தல்களில் விவசாய சின்னத்தில் போட்டியிட்டது.
Remove ads
கூட்டணிகள் / கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்
இந்தியா கூட்டணி
அதிமுக கூட்டணி
தேசிய ஜனநாயகக் கூட்டணி
Remove ads
வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்
வேட்பாளர் பட்டியல்
Remove ads
வாக்குப்பதிவு
ஏப்ரல் 19 அன்று இரவு 7 மணி நிலவரப்படி, தமிழ்நாட்டில் உத்தேசமாக 72.09 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார். ஏப்ரல் 20 அன்று, தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளின் மொத்த சராசரி வாக்குப்பதிவு 69.46% என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார்.[32] [33]
மூன்றாவது முறையாக இன்று (ஏப்ரல் 21) பிற்பகல் 12.44 மணியளவில் வெளியிடப்பட்ட இறுதி வாக்குப்பதிவு நிலவரத்தின்படி, தமிழ்நாட்டில் 69.72 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. .[34][35]
Remove ads
தேர்தல் முடிவுகள்
தமிழ்நாட்டின் 39 மக்களவை தொகுதிகளிலும் திமுக கூட்டணியே வென்றது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இரு மக்களவைத்தொகுதிகளைப் பெற்றதாலும் நாம் தமிழர் கட்சி 8%இக்கு மேல் வாக்குகளைப் பெற்றதாலும் தேர்தல் ஆணையத்தால் ஏற்பு பெற்ற மாநில கட்சி எனும் தகுதியை பெற்றன. இத்தேர்தலில் வாக்களித்தவர்கள் 43,458,875.
பெற்ற வாக்குகள்
Remove ads
சட்டமன்ற இடைத்தேர்தல்
காங்கிரசு சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் விசயதரணி பிப்ரவரி 25, 22024 அன்று பாரதிய சனதா கட்சியில் இணைந்தார். இதனை தொடர்ந்து தனது காங்கிரசு உறுப்பினர் பொறுப்பையும், சட்ட மன்ற உறுப்பினர் பதவியையும் விட்டு விலகிவிட்டதாக அறிவித்தார். இதைத்தொடர்ந்து அந்த தொகுதி காலி இடமாக அறிவிக்கப்பட்டது. இவரின் கடிதத்தை ஏற்றுக்கொண்ட சபாநாயகர் அப்பாவு விளவங்கோடு தொகுதி காலியாக உள்ளதாக தமிழ்நாடு அரசு அரசிதழில் அறிவிப்பை வெளியிட்டார். [36] விசயதரணி தனது உறுப்பினர் பதவியை துறந்துவிட்டு பாசகவில் சேர்ந்ததால் அத்தொகுதிக்கும் மக்களவை தேர்தலுடன் தேர்தல் நடந்தது. இதிலும் திமுக கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட காங்கிரசு வெற்றிபெற்றது. [37]
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads