இரா. தமிழ்ச்செல்வன்
இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
இரா. தமிழ்ச்செல்வன், 2014, 2019, 2024ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற மகாராட்டிரா சட்டமன்றத் தேர்தல்களில், சியோன் கோலிவாடா தொகுதியிலிருந்து, பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்டு வென்ற, மகாராட்டிர சட்டப் பேரவை உறுப்பினர் ஆவார்[1] .
- இதே பெயர் கொண்ட தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினரைப் பற்றி அறிய, இரா. தமிழ்செல்வன் என்ற பக்கத்தைப் பார்க்கவும்.
Remove ads
வாழ்க்கைக் குறிப்பு
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடிக்கு அருகே உள்ள பிலாவிடுதி கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் ராமையா, தங்கம் தம்பதியருக்கு பிறந்த 6 மகன்களின் மூத்தவர். கடந்த 35 ஆண்டுகளாக மகாராட்டிராவின் தலைநகரமான மும்பையில் தனது சகோதரர்களுடன் வசித்து வருகிறார். 2011 முதல் பாஜகவின் நகரப் பொதுச்செயலராகப் பதவி வகித்து வந்தார். ரயில்வே சரக்கு கையாளும் ஒப்பந்ததாரராகத் தொழில் செய்து வரும் இவருக்கு கமலா என்ற மனைவியும், மகாலெட்சுமி, வைஷாலி ஆகிய மகள்களும் உள்ளனர்.[2][3]
26/11 மும்பை தாக்குதலின் போது கசாப்பும் அவனது கூட்டாளியும் சுட ஆரம்பித்தபோது தமிழ்ச்செல்வன் சத்ரபதி சிவாஜி தொடருந்து நிலையத்தில் சுமார் 36 உயிர்களைக் காப்பாற்றியதில் முக்கியப் பங்கு வகித்தார்.[4]
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads