மகாராட்டிர சட்டமன்றத் தேர்தல், 2014

From Wikipedia, the free encyclopedia

மகாராட்டிர சட்டமன்றத் தேர்தல், 2014
Remove ads

மகாராட்டிர மாநில சட்டமன்றத்தைத் தேர்ந்தெடுக்க 2014, அக்டோபர் 15 அன்று 288 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை 2014, அக்டோபர் 19 அன்று நடைபெற்றதில் பாசக அதிக தொகுதிகளை கைப்பற்றியது. ஆனால் அதற்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை.

விரைவான உண்மைகள் மராட்டிய சட்டமன்றத்தில் 288 இடங்கள் அதிகபட்சமாக 145 தொகுதிகள் தேவைப்படுகிறது, வாக்களித்தோர் ...
Remove ads

2009ஆம் ஆண்டு தேர்தல்

2009ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான இடங்களை வென்ற காங்கிரசு-தேசியவாத காங்கிரசு கூட்டணி ஆட்சியில் உள்ளது. முதலமைச்சராக காங்கிரசு கட்சியைச் சேர்ந்தவர் உள்ளார். இதன் பதவிக்காலம் 2014, நவம்பர் 11 அன்று முடிவடைகிறது.

மேலதிகத் தகவல்கள் காங்கிரசு, தேசியவாத காங்கிரசு ...
Remove ads

தேர்தல் ஆணைய அறிவிப்பு

மேலதிகத் தகவல்கள் தேர்தல் தொடர்பான நிகழ்வு, தேதி ...

[7]

மராட்டியத்தில் உள்ள 288 சட்டப்பேரவை தொகுதிகளில் 29 தாழ்த்தப்பட்டோருக்கும் 25 மலைவாழ் மக்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தேர்தலில் மகாராட்டிராவில் நிழற்பட அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 92.40% ஆகும். இத்தேர்தலுக்காக 90,403 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. [8]

Remove ads

கூட்டணிகள்

25 ஆண்டுகளாக கூட்டணியாக இருந்து மகாராட்டிர தேர்தலை சந்தித்த பாசக-சிவசேனா கூட்டணி இத்தேர்தலில் முறிந்துள்ளது. அதுபோலவே காங்கிரசு - தேசியவாத காங்கிரசு கூட்டணியும் முறிந்துள்ளது. 2004, 2009 சட்டப்பேரவை தேர்தல்களில் சிவசேனா-பாசக கூட்டணியும், காங்கிரசு - தேசியவாத காங்கிரசு கூட்டணியும் போட்டியிட்டன. இம்முறை பெரிய கட்சிகள் கூட்டணி இல்லாமல் போட்டியிடுகின்றன.

சிவசேனா-பாசக

1989 ஆண்டு முதல் தொடரும் பாசக சிவசேனாவின் 25 ஆண்டுகால கூட்டணி தொகுதிப்பங்கீடில் உடன்பாடு ஏற்படாததால் முறிந்தது என பாசக அறிவித்தது[9] [10]. 2009ஆம் ஆண்டு தேர்தலில் சிவசேனா 169 தொகுதிகளிலும் பாசக 119 தொகுதிகளிலும் போட்டியிட்டன. 1995இல் இக்கூட்டணி மகாராட்டிராவில் ஆட்சியமைத்தார்கள். [11] 1984 இல் சிவசேனாவும் பாசகவும் கூட்டணி வைத்து 1984 மக்களவைத் தேர்தலைச் சந்தித்தார்கள். அப்போது சிவசேனாவுக்குத் தனி சின்னம் இல்லாததால் பாசகவின் தாமரை சின்னத்திலேயே போட்டியிட்டது. அத்தேர்தலுக்குப் பின் அக்கூட்டணி முறிந்தது. [12]

2014 மக்களவைத்தேர்தலில் மாநிலத்தில் பெரிய கட்சியாக வந்ததால்[13] பாசக அதிக தொகுதிகளைக்கேட்கவும் முதலமைச்சர் பதவியை அதிக இடங்களில் வெல்பவர் பெற வேண்டும் என்று கூறியது. [14] மாநில பாசக தலைவர் சிவசேனா 150+ தொகுதிகளுக்குக் கீழ் வர மறுத்துவிட்டதாகவும் 135 தொகுதிகளிலிருந்து 127 தொகுதிகளுக்குத் தாங்கள் இறங்கி வந்ததாகவும், முதலமைச்சமைர் பதவியை விட்டுத்தர மறுத்துவிட்டதாகவும் கூறினார். [15]

காங்கிரசு - தேசியவாத காங்கிரசு

1999ம் ஆண்டு தேர்தலில் காங்கிரசும் தேசியவாத காங்கிரசும் தனித்து போட்டியிட்டன. காங்கிரசிலிருந்து விலகிய சரத்பவார் தோற்றுவித்த தேசியவாத காங்கிரசுக்கு அதுவே முதல் சட்டமன்ற தேர்தலாகும். காங்கிரசும் தேசியவாத காங்கிரசும் பாசக-சிவசேனா கூட்டணியை விட அதிக இடம் பிடித்த காரணத்தால் அக்கூட்டணி பதவிக்கு வரக்கூடாது என்பதற்காக தேர்தலுக்கு பின் கூட்டணி கண்டன [16]. பின் அக்கூட்டணி 2004, 2009 சட்டமன்ற தேர்தலிலும் தொடர்ந்தது. 2014 சட்டமன்ற தேர்தலில் தேசியவாத காங்கிரசுக்கு 144 தொகுதிகள் வேண்டும் என்றும் முதலமைச்சமைச்சர் பதவியை சுழற்சி முறையில் காங்கிரசும் தேசியவாத காங்கிரசும் பங்கிடவேண்டும் என்றதேசியவாத காங்கிரசின் கோரிக்கையை காங்கிரசு ஏற்காததால் கூட்டணியில் இருந்து விலகிக்கொள்வதாக தேசியவாத காங்கிரசு கூறியது. [17]

Remove ads

பரப்புரை

மகாராட்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்ரே பெரிய கட்சிகள் தொகுதிகளுக்காகச் சண்டையிட்டுப் பிரிந்தன என்றும் அவற்றுக்கு மகாராட்டிர மக்கள் பாடம் புகட்டவேண்டும் என்றும் கூறினார்.[18]

தேர்தல் முடிவு

மேலதிகத் தகவல்கள் கட்சி, 2009இல் வென்ற தொகுதிகள் ...

[19]

Thumb
  பாரதிய ஜனதா கட்சி: 122 தொகுதிகள்
  சிவ சேனா: 63 தொகுதிகள்
  பகுஜன் விகாஸ் ஆகாதி: 3 தொகுதிகள்
  Peasants and Workers Party of India: 3 தொகுதிகள்
  All India Majlis-e-Ittehadul Muslimeen: 2 தொகுதிகள்
  Bharipa Bahujan Mahasangh: 1 தொகுதி
  Rashtriya Samaj Paksha: 1 தொகுதி
  சுயேட்சை 7 தொகுதிகள்



Thumb

கட்சி வாரியாக வோட்டு சதவியிதம்[20]

  ஏனைய (13%)
மேலதிகத் தகவல்கள் கட்சி, வென்ற தொகுதிகள் ...

முதல்வர்

புதிய முதல்வராக பாசகவின் மாநில தலைவர் தேவேந்திர பத்னாவிசு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் 2014, நவம்பர் 11க்குள் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிருபிக்கவேண்டும். பாசகவுக்கு வெளியில் இருந்து நிபந்தனையற்ற ஆதரவு தருவதாக கூறியுள்ள தேசியவாத காங்கிரசு வாக்கெடுப்பு நடைபெறும் நேரத்தில் சட்டமன்றத்தில் கலந்து கொள்ளாது.[21]

வென்ற வேட்பாளர்களின் பட்டியல்

The following is the list of candidates won: [20]

கேப்டன் தமிழ் செல்வன் என்பவர் பாசக கட்சி சார்பில் மும்பையின் ஒரு தொகுதியான சியோன் கோலிவாடாவில் வென்றுள்ளார். இச்சட்டப்பேரவையில் மராட்டிய சட்டமன்றத்துக்கு செல்லும் தமிழர் இவர்.

மேலதிகத் தகவல்கள் தொகுதியின் எண், சட்டமன்ற தொகுதியின் பெயர் ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads