இரிச்சி ரிச்சார்ட்சன்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சர் ரிச்சார்ட் பெஞ்சமின் ரிச்சார்ட்சன் (Sir Richard Benjamin Richardson, பிறப்பு: 12 சனவரி 1962) என்பவர் மேற்கிந்தியத் தீவுகளின் முன்னாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட வீரரும், மேற்கிந்தியத் தீவுகள் தேசியத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் தலைவரும் ஆவார். இவர் ஒரு சிறப்பான மட்டையாட்ட வீரரும், சிறந்த வேகப்பந்து வீச்சாளராகவும் திகழ்ந்தவர். 1992-இல், இவர் அவ்வாண்டின் விசுடன் சிறந்த துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராகப் பெயரிடப்பட்டார். ரிச்சர்ட்சன், வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக அணிந்திருந்த பரந்த விளிம்பு கொண்ட அரக்கு நிறத் தொப்பிக்காகப் பிரபலமானார், இருப்பினும் அவரது பிற்கால வாழ்க்கையில், அவர் தலைக்கவசம் அணியத் தொடங்கினார்.[1][2]
ரிச்சர்ட்சன், லீவர்டு தீவுகள் துடுப்பாட்ட அணிக்குத் தலைமை தாங்கினார், அத்துடன் யார்க்சயர் கவுண்டி, வடக்கு திரான்சுவால் துடுப்பாட்ட அணிகளுக்கும் தலைமைதாங்கி விளையாடினார்.[3][4] ரிச்சர்ட்சன் 2011 சனவரியில், மேற்கிந்திய தீவுகளின் மேலாளராக ஐந்தாண்டு காலத்திற்கு பொறுப்பேற்றார். அதன்பிறகு அவர் தொடர்ந்து பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை (ஐசிசி) போட்டிகளுக்கு ஆட்ட நடுவராகப் பணியாற்றுகிறார்.[5][5]
Remove ads
தொடக்க வாழ்க்கை
ரிச்சார்ட்சன் அண்டிக்குவாவில் ஐந்து தீவுகள் என்ற கிராமத்தில் பிறந்தார். தனது துடுப்பாட்ட வாழ்க்கையை லீவர்டு தீவுகள் துடுப்பாட்ட அணியில் 1982 இல் தொடக்க மட்டையாளராகத் தொடங்கினார்.
பன்னாட்டுத் துடுப்பாட்டம்
ரிச்சார்ட்சன் 86 தேர்வு ஆட்டங்களில் 1995 வரை விளையாடி 16 சதங்களுடன் 5,949 ஓட்டங்கள் எடுத்தார். ஆத்திரேலிய அணிக்கு எதிராக மிகவும் வெற்றிகரமாக விளையாடினார். அவர்களுக்கு எதிராக 9 சதங்களை அடித்தார், மேலும் 1989 இல் கயானாவில் இந்தியாவுக்கு எதிராக 194 ஓட்டங்களை அடித்தார். 3 உலகக்க்கிண்ணத் தொடர்கள் உட்பட 224 பன்னாட்டு ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். 1992-இல், விசுடன் ஆண்டின் சிறந்த துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராகப் பெயரிடப்பட்டார்.[2][6]

Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads