பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை

From Wikipedia, the free encyclopedia

Remove ads

பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை(International Cricket Council) சுருக்கமாக ஐசிசி(ICC) துடுப்பாட்டத்தைக் கட்டுப்படுத்துகின்ற ஓர் பன்னாட்டு விளையாட்டுக் கட்டுப்பாட்டு அமைப்பு ஆகும்.1909ஆம் ஆண்டு இம்பீரியல் துடுப்பாட்ட அவை (Imperial Cricket Conference) என இங்கிலாந்து, ஆத்திரேலியா மற்றும் தென்னாபிரிக்காவின் பிரதிநிதிகளால் நிறுவப்பட்ட இவ்வமைப்பிற்கு 1965ஆம் ஆண்டு பன்னாட்டுத் துடுப்பாட்ட கூட்டம்(International Cricket Conference) என்று பெயர் மாற்றப்பட்டது;1989ஆம் ஆண்டு தற்போதையப் பெயருக்கு மாற்றமடைந்தது.

விரைவான உண்மைகள் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை, சுருக்கம் ...

ஐசிசி துடுப்பாட்டத்தின் பல்வகை பன்னாட்டு போட்டிகள் நடத்துவதையும் அமைப்புகளையும் கட்டுப்படுத்துகிறது. அது கண்காணிக்கும் போட்டிகளில் துடுப்பாட்ட உலகக்கிண்ணம் குறிப்பிடத்தக்கது. மேலும் நடுவர்கள் மற்றும் துடுப்பாட்ட கண்காணிப்பாளர்களை நியமிப்பது, பன்னாட்டு துடுப்பாட்ட ஒழுங்கினை நிலைநிறுத்துமாறு ஐசிசி நடத்தை விதிகளை இயற்றி நிர்வகிப்பது[6], மற்றும் விளையாட்டுகளில் நிலவும் ஊழல், சூதாடல் போன்றவற்றைக் கண்காணித்தல் ஆகிய பணிகளை ஆற்றிவருகிறது. இரு நாடுகளிடையே நடக்கும் துடுப்பாட்டப் போட்டிகளையும் அங்கத்தினர் நாட்டிற்குள் நடக்கும் உள்போட்டிகளையும் கட்டுப்படுத்துவதில்லை.துடுப்பாட்ட விதிகளையும் எம்சிசி என வழங்கப்படும் மேரில்போன் துடுப்பாட்டக் கழகமே கட்டுப்படுத்தி மாற்றங்களைக் கொண்டு வருகிறது.

பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் தலைவராக நாராயணசாமி சீனிவாசன் (2014ஆம் ஆண்டு சூன் முதல்) தலைமை செயல் அதிகாரியாக டேவ் ரிச்சர்ட்சன் (2012ஆம் ஆண்டு முதல்) பணியாற்றி வருகின்றனர்.

Remove ads

அங்கத்தினர்கள்

Thumb
பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை அங்கத்தினர் நாடுகள்

ஐசிசியில் 105 அங்கத்தினர்கள் உள்ளனர்:10 தேர்வுத் துடுப்பாட்டத்தில் ஈடுபடும் அங்கத்தினர்கள்(அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னா பிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள், நியூசிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, சிம்பாவே, வங்காள தேசம்), 35 இணை அங்கத்தினர்கள் மற்றும் 60 தொடர்பு அங்கத்தினர்கள்.

காண்க: ஐசிசி அங்கத்தினர் பட்டியல்

ஐ.சி.சி உலக தரவரிசை

ஆண்கள் அணி தரவரிசை (முதல் 10)

பெண்கள் அணி தரவரிசை (முதல் 10)

மேலதிகத் தகவல்கள் தரவரிசை, ஒநாப ...
Remove ads

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads