இரும்பு(II) சல்பைடு

From Wikipedia, the free encyclopedia

இரும்பு(II) சல்பைடு
Remove ads

இரும்பு(II) சல்பைடு (Iron(II) sulfide) என்பது FeS என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பெரசு சல்பைடு என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது. இரும்பு(II) சல்பைடுகள் பெரும்பாலும் விகிதவியல் அல்லாத அளவுகளில் இரும்பு குறைபாடு கொண்டவையாக இருக்கும். அனைத்தும் கருப்பு நிறம் கொண்டவையாகவும் தண்ணீரில் கரையாதவையாகவும் இருக்கும்.

விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...
Remove ads

தயாரிப்பு

இரும்பையும் கந்தகத்தையும் சேர்த்து சூடுபடுத்தி வினைபுரியச் செய்தால் இரும்பு(II) சல்பைடு உருவாகும்.:[1]

Fe + S → FeS

FeS ஆனது நிக்கல் ஆர்சனைடு கட்டமைப்பை ஏற்றுக்கொள்கிறது. இதில் எண்முக Fe மையங்கள் மற்றும் முக்கோணப் பட்டக சல்பைடு தளங்கள் உள்ளன.

வேதி வினைகள்

இரும்பு(II) சல்ஃபைடு ஐதரோகுளோரிக் அமிலத்துடன் வினைபுரிந்து அழுகிய முட்டையின் நாற்றமுடைய நச்சுவாயுவான ஐதரசன் சல்பைடை உருவாக்கும்.:[2]

FeS + 2 HCl → FeCl2 + H2S
FeS + H2SO4 → FeSO4 + H2S

ஈரமான காற்றில், இரும்பு சல்பைடுகள் நீரேற்றப்பட்ட இரும்பு சல்பேட்டாக ஆக்சிசனேற்றம் அடைகின்றன.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads