இரைகௌவல்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இரைகௌவல் என்பது மற்றைய விலங்குகளைக் கொன்று உண்ணும் விலங்கான இரைகௌவி விலங்குக்கும் இரையாகும் விலங்குக்கும் இடையிலான உயிரியல் இடைத் தொடர்பு ஆகும். இது அங்கிகள் காட்டும் ஒரு போசணைமுறை ஆகும். போசணை முறைகளில் ஒட்டுண்ணி மற்றும் நுண் இரைகௌவல் முறை ( இங்கு விருந்து வழங்கி கொல்லப்பட மாட்டாது) மற்றும் ஒட்டுண்ணிப்போலி ( விருந்து வழங்கி இங்கு இறுதியில் கொல்லப்படும்) என்பனவும் அடங்கும். இரைகௌவல் தோட்டி விலங்குகளில் இருந்தும் வேறுபட்டது. தொட்டி விலங்குகள் இறந்த விலங்குகளை உண்பவை. இரைகௌவி விலங்குகள் பல தோட்டி விலங்குகளாக உணவு முறையை கொண்டிருப்பினும் இவை இரண்டும் வேறுபட்டவை.


இரைகௌவி விலங்குகள் செயற்றிறனுடன் தமது இரையைத் தேடும், அல்லது இரைக்காகக் காத்திருக்கும். இரை கண்டடையப்பட்டதும் உடனடியாக அதனைத் தாக்கும் அல்லது அணுகும். இது மறைந்திருந்து இரைகௌவுதல் மற்றும் பின்தொடர்ந்து இரைகௌவல் முறைகளைக் கையாளும். இரை வேட்டையாடப்பட்டதும் இரைகௌவி அதனைக் கொல்லும். தேவையற்ற பாகங்களை நீக்கிவிட்டு உண்ணும்.
Remove ads
வரைவிலக்கணம்
அடிப்படையில் இரைகௌவி என்பது மற்றொரு அங்கியை கொன்று உண்பது ஆகும்.இருப்பினும், இரைகௌவல் எனும் எண்ணக் கரு அகண்டது. வெவ்வேறு கருத்துநிலைகளைக் கொண்டது. இது பல்வேறு உணவு வழக்கங்களை உள்ளடங்கியது. இவற்றில் சில உணவு வழக்கங்களில் இரையின் இறப்பு இரைகௌவலாக இருக்காது. இச்னியூமொன் குளவி முதலான ஒரு ஒட்டுண்ணிப் போலி அதன் விருந்து வழங்கியில் முட்டைகளை இடுகின்றது. முட்டை பொரித்து குடம்பி வெளிவரும் போது, அது விருந்து வழங்கியை உண்ணுகின்றது. இதனால் விருந்து வழங்கி இறக்கின்றது. விலங்கியலாளர்கள் இதனை ஒட்டுண்ணியியல் என்கின்ரார்கள். வழமையில் இது ஒட்டுண்ணியால் விருந்து வழங்கி கொல்லப்பட்டதாகக் கருதப்படுவதில்லை. ஆகவே ஒரு ஒட்டுண்ணிப் போலி இரைகௌவியில் இருந்து இரண்டு வழிகளில் வேறுபடுவதாகக் கருதப்படுகின்றது. இரைகௌவி இரையை உடனடியாக கொல்லும். மற்றது இரைகௌவிக்கு தனது வாழ்க்கைக் காலத்தில் பல விலங்குகளை இரையாக உண்ணும். ஒட்டுண்ணிப் போலியின் குடம்பி இந்த சந்தர்ப்பத்தில் ஒரே இரையை கொள்ளக் கூடியதாக இருக்கும்.[1][2]
இனங்கானக் கடினமான எல்லைக்கோட்டு நடத்தைகளும் காணப்படுகின்றன. நுண்இரைகௌவிகள் என்பவை சிறிய விலங்குகளாக இருந்த போதிலும் இரை கௌவிகளைப் போல் முழு இரையையும் வேட்டையாடக் கூடியன. எடுத்துக் காட்டாக; தெள்ளு, நுளம்பு என்பன விலங்குகல்லின் குருதியை உறுஞ்சிக் குடிக்கின்றன. செடிப்பேன்கள் தாவரச் சாறுகளைக் குடிக்கின்றன. இருப்பினும், அவை விருந்து வழங்கிகளைக் கொல்வதில்லை. இவை ஒட்டுண்ணிகள் எனப் பொதுவாகக் கொள்ளப்படும்.[3][4] அலைதாவரங்கள் மற்றும் நுண் தாவரங்களை உணவாகக் கொள்ளும் விலங்குகள் அவை உணவாகும் தாவரங்களைக் கொல்லுவதால் இரை கௌவிகள் எனக் கொள்ளக் கூடியவை. ஆயினும் தாவர உண்ணிகள் இலைகளை ஊண்ணும் போது விருந்து வழங்கி அழிவதில்லை.[5] ஆயினும் தாவரங்கள் வித்துக்களை உண்ணும் போது அல்லது முட்டைகளை உண்ணுதல் வரைவிலக்கணப்படி இரைகௌவலாகக் கொள்ளப்படும்.[6][7]
தோட்டி விலங்குகள் என்பவை ஏற்கனவே இறந்த விலங்கை உணவாகக் கொள்ளுபவை. இவை இரைகௌவிகள் அல்ல. ஆனால், நரி, கழுதைப்புலி முதலான பெருமளவு இரைகௌவிகள் வாய்ப்புக் கிடைக்கும் போது தோட்டி விலங்குகளாகவும் செயற்படுகின்றன.[8][9]
Remove ads
பாகுபாட்டு வீச்சு
ஊனுண்ணித் தாவரம்: பனிப்பூண்டு பூச்சியை வளைத்துப் பிடித்தல்
விதை இரை கௌவல்: வீட்டு எலி வித்துக்களை உண்ணுதல்
பாலூட்டிகள் மற்றும் பறவைகளில் இரைகௌவிகள் அதிகம் உள்ளன.இரைகௌவிகள் பரந்த பாகுபாட்டு வீச்சில் காணப்படுகின்றன. இவை தும்பி, லேசுப்பூச்சி முதலான பூச்சி வகைகளில் பொதுவாக உள்ளது. சில இனங்களில் குடம்பிகள் மட்டும் இரைகௌவிகளாகக் காணப்படுகின்றன. சிலந்தி, அதேபோல் தரைவாழ் முள்ளந்தண்டிலிகளான தேள், மட்டத்தேள், உண்ணிகள், நத்தை, ஓடில்லா நத்தை, நெமட்டொடாக்கள், தட்டையன் புழு என்பன இதிலடங்கும்.[10] உவர்நீர்ச் சூழலில் , பெரும்பாலான நிடாரியாக்கள்(எ.கா:இழுது மீன், ஐதரா, பொலிப்பு முதலானவை) , முட்தோலி வகையைச் சேர்ந்த நட்சத்திர மீன், கடலட்டை கடல் எர்ச்சின் முதலானவை இரைகௌவிகள் ஆகும்.[11]

Remove ads
சிறப்பியல்புகள்
பௌதீக பொருத்தப்பாடு
இயற்கைத் தேர்வின் அடிப்படையில் இரை கௌவிகள் தமது இரையை கண்டடைதல், பிடித்தல், கொல்லுதல், சமிபாட்டுக்குள்ளாக்கல் என்பவற்றில் பல்வேறு இசைவாக்கங்களைக் கொண்டிருக்கின்றன. அவையாவன வேகம், சுறுசுறுப்பு, பதுங்குதல், கூர்மையான உணர்திறன், பற்கள், நகங்கள், உகிர்கள், சமிபாட்டுத் தொகுதி என்பனவாகும்.[12]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads