நீர்நாய்

From Wikipedia, the free encyclopedia

நீர்நாய்
Remove ads

நீர்நாய் (Otter) என்பது நீரில் வாழ தன்னை ஓரளவு தகவமைத்துக்கொண்ட ஒருவகைப் பாலூட்டி விலங்கு. நீர்நாய்கள் பொதுவாக மீன்கள், சிறிய நிலநீர்வாழிகள், பறவைகள் முதலியவற்றை இரையாகக் கொள்கின்றன. நீர்நாய்களில் மொத்தம் 13 சிற்றினங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

விரைவான உண்மைகள் நீர்நாய், உயிரியல் வகைப்பாடு ...
Remove ads

பண்புகள்

நீர்நாய்கள் மெலிந்த நீண்ட உடல்வாகினைப் பெற்றுள்ளன. நீரில் செல்ல ஏதுவாக பாதங்களில் சவ்வுகளும், வேட்டையாட உதவியாக கூர்மையாக உகிர்களும் உண்டு. கடல் நீர்நாயைத் தவிர மற்ற சிற்றினங்கள் நீண்ட, உறுதியான வாலினைப் பெற்றுள்ளன. நீர்நாய்களின் இவற்றின் 13 சிற்றினங்களைப் பொறுத்து 2 முதல் 6 அடி வரை நீளமும் 1 முதல் 45 கிலோ எடையும் வளரும். இவை மிகவும் சுறுசுறுப்பான, விளையாட்டுத்தனம் கொண்ட விலங்குகள். நீர்நாய்கள் கூச்ச சுபாவம் கொண்டவையாக இருப்பதால் மனிதர்களிக்கண்டால் ஒளிந்துகொள்ளும் தன்மை கொண்டது.[1]

Remove ads

வாழ்வியல்

சுமாராக 60 முதல் 86 நாட்கள் கருவுற்றிருக்கும். புதிதாய் பிறந்த குட்டிகளை தாயும், தந்தையும் முன்பிறந்த குட்டிகளும் கவனித்துக்கொள்கின்றன. பெண் நீர்நாய்கள் சுமார் 2 வருடங்களில் இனப்பெருக்கத்திற்கு தயாராகின்றன, எனினும் ஆண்கள் 3 ஆண்டுகளுக்கப்புறம் தான் இனப்பெருக்கம் செய்கின்றன. ஒரு மாதம் ஆற்றின் கரையிலிருக்கும் தன் பொந்தில் இருக்கும் குட்டிகள் 2 மாதங்களுக்குப்பின் நீந்த செய்கின்றன. இது தன் குடும்பத்துடன் 1 வருடமிருந்துவிட்டு பிரியும். இதன் ஆயுட்காலம் சுமார் 16 ஆண்டுகள்.

Remove ads

வாழ்வியல் தொடர்ச்சி

இவை தோற்றத்தில் கீர்ப்பிள்ளையைப் போல் காணப்படும் இவை மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரில் அதிகமாக வாழுகின்றன. மேலும் தமிழகத்தில் உள்ள முக்கூர்த்தி தேசிய பூங்காவிலும், பவானிசாகர் அணையின் முகத்துவாரமான மாயாற்றிலும் இந்த இனத்தைக் காண முடிகிறது. ஆனாலும் நீர் ஆதாரங்கள் அற்றுப்போன சூழ்நிலையின் காரணமாக சிங்கப்பூர், கம்போடியா, பூட்டான் போன்ற நாடுகளில் இவை இல்லாமல் அழிந்து போய்விட்டன. [1]

மேற்கோள்கள்

Loading content...
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads