இரைச்சல்

From Wikipedia, the free encyclopedia

இரைச்சல்
Remove ads

இரைச்சல் (Noise) என்பது கேட்க இயலாத, அதிக சப்தம் கொண்ட, விரும்பத்தகாத மற்றும் தேவையற்ற ஒலி ஆகும். இயற்பியல் கோட்பாட்டின்படி ஒலியுடன் இரைச்சல் உண்டாவதைத் தவிர்க்க இயலாது. வாயு மற்றும் நீர் போன்ற ஊடகங்களில் பரவும் போது ஒலியானது அதிர்வுகளாகப் பரவுகிறது. ஒலி மற்றும் இரைச்சலைப் பிரித்தறிவது மூளையின் செயல்பாடாகும்.[1][2]

Thumb
1967 ல் தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கிளென் ஆய்வு மையத்தில் வானூர்திக் கருவியின் இரைச்சல் அளவை கணக்கிடுகின்றனர்.

பரிசோதனை அறிவியலில் இரைச்சல் என்பது கொடுக்கப்பட்டுள்ள தரவுகளில் ஏற்படும் ஏற்றவிறக்கம் ஆகும். இது எதிர்பார்க்கப்படும் குறிப்பலையின் தன்மையை மாற்றி விடுகிறது.[3][4]

ஒலியில் ஏற்படும் இரைச்சல் என்பதை எளிதில் காதால் உணர முடியும். மாறாக மின்னணுவியல் குறிப்பலையில் ஏற்படும் இரைச்சலைக் காதால் உணர முடியாது அதற்கான தனிப்பட்ட கருவிகளைக் கொண்டே உணர இயலும்.[5]

ஒலிப் பொறியிலில், இரைச்சல் என்பது மின்னணுவியல் குறிப்பலையில் ஏற்படுவது, இதனால் ஏற்படும் ஒலி இரைச்சல், சீறொலியாகக் கேட்கிறது.[6]

Remove ads

அளவிடுதல்

ஒலி என்பது வீச்சு மற்றும் அதிர்வெண் ஆகியவற்றைக் கொண்டு அளக்கப்படுகிறது.[7] வீச்சு என்பது ஒலியின் வலிமையை அளக்கப் பயன்படுகிறது. ஒலி அலையின் ஆற்றலானது டெசிபெல் என்ற அலகால் அளக்கப்படுகிறது. ஒலியின் உரப்பு மற்றும் செறிவு ஆகியவற்றை அளக்கவும் ஒலி அலையின் வீச்சு பயன்படுகிறது.

மாறாகச் சுருதி என்பது ஒலியின் அதிர்வெண்ணை உணர்த்துகிறது. இது ஏர்ட்சு என்ற அலகால் அளக்கப்படுகிறது.[8]

ஒலியின் அழுத்த அளவை டெசிபெல் என்ற அலகால் அளக்கிறோம். 0 டெசிபெல் என்பது மனிதக் காதால் கேட்கக்கூடிய இதமான ஒலியாகும். சாதாரணப் பேச்சின் ஒலியின் அளவு 65 டெசிபெல் வரை இருக்கும். ஒரு ராக் இசை நிகழ்ச்சியில் ஒலியின் அளவு 120 டெசிபெல் வரை இருக்கும்.

Remove ads

பதிவிடுதலும் மீட்டுக்கொணர்தலும்

ஒலியைப் பதிவிடவும் ஒலிபரப்பவும் செய்யும் போது மிகக் குறைந்த இரைச்சல் உண்டாகிறது. அமைதியான மற்றும் சுத்தமான ஒலியைப் பதிவிடும் போது, ஒலியைப் பதிவிடும் கருவியில் ஏற்படும் இரைச்சலும் தேவையில்லாமல் பதிவிடப்படுகிறது.[9]

சுற்று சூழல் இரைச்சல்

சுற்றுசூழல் இரைச்சல் என்பது ஒரு குறிப்பிட்ட சுற்றுசூழலில் உண்டாகும் இரைச்சல் அளவாகும். இரைச்சலின் முதன்மையான மூலங்கள் வானூர்தி, புகைவண்டி, இயக்கூர்தி மற்றும் தொழிற்சாலைகள் ஆகியவை ஆகும்.[10] இரைச்சலால் ஏற்படும் ஒலி மாசு இலட்சக்கணக்கான மக்களைப் பாதித்து, அவர்களுக்கு கேட்டல் குறைபாட்டையும், இதய சம்பந்தப்பட்ட நோய்களையும் உண்டாக்குகிறது.[11]நிலப் பயன்பாட்டுத் திட்டமிடல், இரைச்சல் தடுப்பான்கள், கட்டடக்கலை ஒலிமவியல் ஆகியவற்றின் மூலம் இரைச்சல் கட்டுப்படுத்தப்படுகிறது.

இரைச்சல் ஏற்படுத்தும் உடல் நல விளைவுகள்

Thumb
நமது காதுகளைப் பேரிரைச்சலிருந்து பாதுகாக்கும் செவிச்செருகிகள்.

இரைச்சல் என்பது தேவையற்ற உடல் நலப் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. அதிக நேரம் காதுகளை இரைச்சலைக் கேட்கச் செய்யும் போது, கேள்விக் குறைபாடு, உயர் இரத்த அழுத்தம், குருதி ஊட்டக்குறை இதய நோய், தூக்கக் குறைபாடுகள் மற்றும் பள்ளிச் செயல்பாடுகளில் ஈடுபாடின்மை ஆகியவை ஏற்படுகின்றன.[12] There are also causal relationships between noise and psychological effects such as annoyance, psychiatric disorders, and effects on psychosocial well-being.[13]

சமீப காலமாக இரைச்சல் என்பது பொது சுகாதாரப் பிரச்னையாக மாறியுள்ளது. கேட்டல் குறைபாட்டை தடுக்கும் முறைகள், சில நாடுகளில் பின்பற்றப்படுகிறது.[14]

இரைச்சல் கூட ஒரு தொழில்சார்ந்த இடத்தில் ஏற்படும் ஆபத்து என்று நிரூபிக்கப்பட்டுள்ளது, ஏனெனில் இது மிகவும் பொதுவான வேலை செய்யுமிடத்தில் உண்டாகும் மாசுபடுத்தியாகும்.[15]

இரைச்சலால் ஏற்படும் கேட்டல் திறனிழப்பு என்பது வேலை செய்யுமிடத்தில் நடைபெற்றால், அது வேலை சார் கேட்டல் திறனிழப்பு எனப்படுகிறது.

தடுக்கும் முறைகள்

இரைச்சலால் ஏற்படும் கேட்டல் திறனிழப்பு என்பது நிரந்தரமானது, ஆனால் தடுக்க இயலும்.[16] வேலை பார்க்குமிடங்களில், அனுமதிக்கப்பட்ட அளவிலான இரைச்சலே உருவாக்கப்பட வேண்டும். இசையமைப்பாளர்கள், ஒலிப் பொறியாளர்கள் மற்றும் இசை ஆசிரியர்கள் ஆகியோர் இரைச்சலால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.[17]

இரைச்சல் கட்டுப்பாட்டுக் கருவிகள் மூலம் ஓரிடத்திலுள்ள ஒலியின் அளவு கட்டுப்படுத்தப்படுகிறது.[18][19][20]

Remove ads

மேலும் பார்க்க

மேற்கோள்கள்

மேலும் படிக்க

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads