இறகு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இறகுகள் (ⓘ) என்பவை பறவைகளில் தோலின் வெளிப்புறம் வளரும் மெல்லிய உறுப்புகளாவன. அவை ஒவ்வொரு பறவையினத்தின் தோகைக்கும் ஒரு குறிப்பிட்ட நிறம் மற்றும் பாங்கைத் தருகின்றன. இவை பறவை வகுப்பை பிற விலங்குகளிலிருந்து வேறுபடுத்திக் காட்டுவதில் பெரும் பங்கு வகிக்கின்றன. டைனோசர்களில் சிலவற்றிற்கும் இறகுகள் இருந்தன. பல பறவையின் இறகுகள் அவை வாழும் நிலத்திற்கு ஏற்றவாறும், அங்குள்ள மரஞ்செடி கொடிகளுக்கு ஏற்றவாறும், நிறத்திலும் சாயலிலும் ஒத்து உருமறைப்பு தன்மையைக் கொண்டிருந்து அவற்றிற்கு தற்காப்பு அளிப்பதாக உள்ளன.[1] இறகுகள் பற்றிய ஆய்வு புளூமாலஜி (அல்லது இறகு அறிவியல்) என்று அழைக்கப்படுகிறது.[2][3]




1. இறகின் விசிறி
2. ஈர்
3.கூரல்
4. தூவி (குருத்திறகு)
5.முருந்து
மக்கள் நடைமுறை வாழ்விலும், பண்பாடு மற்றும் சமய ரீதியான பல வழிகளிலும் இறகுகளைப் பயன்படுத்துகின்றனர். இறகுகள் மென்மையானவையாகவும், வெப்பத்தைத் தக்கவைத்துக்கொள்வதில் சிறந்தவையாகவும் உள்ளவை. இதனால், அவை சில நேரங்களில் உயர்தர படுக்கைகளில், குறிப்பாக தலையணைகள், போர்வைகள், மெத்தைகள் போன்றவற்றில் பயன்படுத்தப்படுகின்றன. இவை குளிர்கால ஆடைகள் மற்றும் வெளிப்புற படுக்கைகளுக்கு உள் நிரப்பியாகவும் பயன்படுத்தப்படுகின்றன. பெரிய பறவைகளின் இறகுகள் (பெரும்பாலும் வாத்துகள்) இறகுப் பேனாக்களை உருவாக்கப் பயன்படுத்தப்படுகின்றன. வரலாற்று ரீதியாக, அலங்காரத்துக்குத் தேவைப்படும் இறகுகளுக்காக பறவைகளை வேட்டையாடப்பட்டது சில இனங்களை ஆபத்தில் ஆழ்த்தியது, சில இனங்கள் அழிய காரணமாயிற்று.[4] இன்று, பேஷனிலும் இராணுவ தலைக்கவசங்கள் மற்றும் துணிகளிலும் பயன்படுத்தப்படும் இறகுகளுக்காக கோழிகள், வாத்துகள், வான்கோழிகள், வீசனங்கள், தீக்கோழிகள் உள்ளிட்ட கோழி வளர்ப்பின் கழிவுப் பொருளிலிருந்து பெறப்படுகின்றன. இந்த இறகுகள் அவற்றின் தோற்றத்தை மேம்படுத்த சாயமிடப்படுகின்றன, ஏனெனில் கோழி இறகுகள் காட்டுப் பறவைகளின் இறகுகளுடன் ஒப்பிடும்போது பெரும்பாலும் மங்கிய தோற்றத்தில் இருக்கும்.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads