இறவாப்படை (அகாமனிசியப் பேரரசு)

அகாமனிசியப் பேரரசுக்காகப் போராடிய வீரர்களின் உயரடுக்கு படை From Wikipedia, the free encyclopedia

இறவாப்படை (அகாமனிசியப் பேரரசு)
Remove ads

இறவாப்படை அல்லது இம்மார்டல்ஸ் (Immortals, பண்டைக் கிரேக்கம்: Ἀθάνατοι Athánatoi ) அல்லது பாரசீக இம்மார்டல்ஸ் (Persian Immortals) என்பது எரோடோட்டசால் குறிப்பிடப்படும் அகாமனியப் பேரரசின் இராணுவத்தில் 10,000 வீரர்களைக் கொண்ட உயரடுக்கு கனரக காலாட்படை பிரிவுக்கு வழங்கப்பட்ட பெயர் ஆகும். பாரசீகப் பேரரசின் தொழில்முறை இராணுவமாக இருந்ததுடன், பேரரசின் காவலராக பங்களித்து இரட்டை திறன்களில் பணியாற்றியது. இது முதன்மையாக பாரசீகர்களைக் கொண்டிருந்தாலும், இறவாப்படையில் மீடியர் மற்றும் ஈலாம்களும் அடங்குவர். அதிகாரப்பூர்வ ஆதாரங்கள் போதிய அளவில் இல்லாததால், வரலாற்றில் அத்தியாவசிய கேள்விகளுக்கு பதிலில்லாமல் உள்ளது. [2]

Thumb
சூசா நகரத்தின் முதலாம் டேரியஸ் அரண்மனையில் உள்ள "சூசியன் காவலர்களின்" சித்தரிப்பு. அவர்களின் ஆடைகள் பண்டைய எழுத்தாளர்களின் எழுத்துகளில் உள்ள இறவாப்படை குறித்த விளக்கத்துடன் பொருந்துகின்றன. [1]
Remove ads

எரோடோடசின் எழுத்துகளில்

Thumb
1971 இல் பஹ்லவி ஈரானில் பாரசீகப் பேரரசின் 2,500 ஆண்டு கொண்டாட்டத்தின் போது அவர்களின் பாரம்பரிய உடையில் இறவாப்படையின் நவீன புனரமைப்பு.

எரோடோட்டசு இறவாப்படையை இளைய ஹைடார்னெஸ் தலைமையிலான கனரக காலாட்படை என்று விவரிக்கிறார். இது பாரசீகப் படைகளின் தொழில்முறைப் படைகளைக் கொண்டிருந்தது. மேலும் சரியாக 10,000 பேர் கொண்ட படை பலத்துடன் தொடர்ந்து வைக்கப்பட்டிருந்தது. படையில் கொல்லப்பட்டோ, பலத்த காயம் அடைந்தோ, நோய்வாய்ப்பட்ட பணியாற்ற முடியாத ஒரு உறுப்பினருக்கு பதிலாக உடனடியாக புதிய நபர் நியமிக்கப்படுவார். இந்தப் படை நிலையான பலத்துடன், ஒருங்கிணைந்த அமைப்பாக படைகளை பராமரிக்கும் வழக்கத்திலிருந்து இந்த பிரிவின் பெயரான இம்மார்டல்ஸ் (பொருள்; இறவாப்படை) என்பது உருவானது என்று அவர் கூறினார். [3]

எரோடோட்டசின் எழுத்துகளை அடிப்படையாகக் கொண்ட ஆதாரங்களில் இந்த உயரடுக்குப் படை "இம்மார்டல்ஸ்" என்று மட்டுமே குறிப்பிடப்படுகிறது. பாரசீக ஆதாரங்களில் ஒரு நிரந்தரப் படை இருந்ததற்கான சான்றுகள் உள்ளன.  இருப்பினும், அவை "இம்மார்டல்ஸ்" என்ற பெயரை பதிவு செய்யவில்லை.

Remove ads

குறிப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads