லகாட் டத்து
From Wikipedia, the free encyclopedia
Remove ads
லகாட் டத்து (மலாய்: Lahad Datu; ஆங்கிலம்: Lahad Datu; சீனம்: 拉哈达图) என்பது மலேசியா, சபா மாநிலம், தாவாவ் பிரிவு, லகாட் டத்து மாவட்டத்தில் உள்ள நகரம். இதுவே அந்த மாவட்டத்தின் தலைநகரமாகவும் இயங்குகிறது. சபா மாநிலத்தில், அண்மைய காலத்தில் அதிகமாக அறியப்பட்ட நகரங்களில் இதுவும் ஒன்றாகும்.
சபா மாநிலத்தின் தலைநகரமான கோத்தா கினபாலுவில் இருந்து 430 கி.மீ. தென் கிழக்கே இருக்கும் இந்த நகரில், இந்தோனேசியாவின் தாக்கத்தை அதிகமாகக் காண முடியும்.
இங்கு டூசுன் பூர்வீக இனத்தைச் சேர்ந்த மக்கள் மிகுதியாக வாழ்கின்றனர். லகாட் டத்துவின் சுற்றுப் பகுதிகளில் ஏராளமான கொக்கோ, செம்பனை எண்ணெய் தோட்டங்கள் உள்ளன. காட்டு மரங்கள் ஏற்றுமதிக்கு முக்கியத் துறைமுகமாகவும் விளங்குகிறது. உள்ளூர் பயணப் போக்குவரத்திற்காக இங்குள்ள லகாட் டத்து வானூர்தி நிலையம் (Lahad Datu Airport) செயல்படுகிறது.
Remove ads
வரலாறு
லகாட் டத்துவில் நடைபெற்ற ஓர் அகழ்வாராய்ச்சியில் மிங் வம்சத்தின் (Ming dynasty) சீன மண்பாண்டங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அந்த மண்பாண்டங்கள் மூலமாக, 15-ஆம் நூற்றாண்டில் இங்கு ஒரு குடியேற்றம் இருந்ததாக நம்பப்படுகிறது.[1]
லாகாட் டத்துவின் கிழக்கே துங்கு (Tunku) எனும் பெயரில் ஒரு கிராமம் உள்ளது. இது 19-ஆம் நூற்றாண்டில் கடற்கொள்ளையர்களுக்கும்; மற்றும் அடிமை வியாபாரிகளுக்கும் புகலிடமாக விளங்கியது.[2]
கி.பி 1408-இல் இடான் மொழி (Idaan Language) கையெழுத்துப் பிரதியின் அடிப்படையில், வடக்கு போர்னியோவில் இசுலாம் முதலில் இங்குதான் அறிமுகப் படுத்தப்பட்டதாக நம்பப் படுகிறது.
Remove ads
வெளிநாட்டு போராளிகளின் ஊடுருவல்கள்
1985 செப்டம்பர் 23-ஆம் தேதி அண்டை நாடான பிலிப்பீன்சு நாட்டில் இருந்து 15- 20 ஆயுதம் ஏந்திய மோரோ கடல்கொள்ளையர்கள் (Moro Pirates) லகாட் டத்து நகரத்தில் தரையிறங்கி, குறைந்தது 21 பேரைக் கொன்றனர்; மேலும் 11 பேருக்கு காயங்கள் விளைவித்தனர்.[3]
உள்ளூர் வங்கியில் இருந்து சுமார் $ 200,000; (அமெரிக்க டாலர்) மற்றும் மலேசியன் ஏர்லைன்சு நிறுவனத்தின் அலுவலகத்தில் இருந்து மற்றொரு $ 5,000 (அமெரிக்க டாலர்) கொள்ளையடித்துச் சென்றனர்.[4]
தண்டுவோ கிராமம்
2013 பிப்ரவரி 13-ஆம் தேதி, இந்த லகாட் டத்து பட்டணத்திற்கு அருகில் இருக்கும் தண்டுவோ (Tanduo) எனும் கிராமத்தை, சூலு சுல்தானகத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறிக் கொண்ட சிலர் ஆக்கிரமித்துக் கொண்டனர். சூலு சுல்தானகத்தின் அரியணைக்கு உரிமை கோரும் சமாலுல் கிராம் III (Jamalul Kiram III) என்பவரால் அனுப்பப் பட்டனர் என்றும் அறியப்படுகிறது.
கிழக்கு சபாவின் மீது பிலிப்பீன்சு நாட்டின் பிராந்திய உரிமையை வலியுறுத்துவதே (Philippine Territorial Claim to Eastern Sabah) சமாலுல் கிராமின் முக்கியக் குறிக்கோளாக இருந்தது.[5][6]இரு வாரங்கள் போராட்டத்திற்குப் பின்னர் மலேசியப் பாதுகாப்பு படையினர் அந்தக் கிராமத்தை மீட்டனர்.[7]
ஆயுத மோதல்
இந்த ஆக்கிரமிப்பிற்குப் பலடியாக மலேசியப் பாதுகாப்பு படையினர் (Malaysian Security Forces) அந்த தண்டுவோ கிராமத்தைச் சுற்றி வளைத்தனர். பிலிப்பீன்சு மற்றும் மலேசியா அரசாங்கங்கள் ஓர் அமைதியான தீர்வைக் காண்பதற்காக அந்தக் குழுவுடன் பல பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டனர். அந்தப் பேச்சுவார்த்தைகள் தோல்வியுற்ற பிறகு, இந்த மோதல் ஆயுத மோதலாக மாறியது.[8][9]
அந்த மோதலில் சூலு சுல்தானகத்தை சேர்ந்தவர்கள் என்று கூறிக் கொண்ட 56 பேர் சுட்டுக் கொல்லப் பட்டார்கள்; மற்றும் பலர் மலேசிய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். [7][8] மோதலின் போது மலேசியத் தரப்பில் ஆறு பேர் கொல்லப்பட்டனர்; பொதுமக்களில் 10 பேர் உயிர் இழந்தனர்.[10][11][12]
Remove ads
மேற்கோள்கள்
மேலும் காண்க
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads