இலக்கணம் - சொல்விளக்கம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இலக்கணம் (ⓘ) என்னும் சொல் இலக்கு+அண்+அம் என்னும் சொற்களின் கூட்டு.
இலக்கு என்பது இலங்குவது அதாவது துலங்குவது.[1]
அண் என்பது அண்மை என்னும் நெருக்கத்தை உணர்த்தும்.
அண்ணன் என்னும் சொல்லோடு தொடர்புடையது.
இது வேளாண்மை, தாளாண்மை என்னும் சொற்களில் ‘ஆண்மை’ சேர்ந்திருப்பது போன்றது.
இலக்கணம் என்னும் சொல்லில் சேர்ந்திருக்கும் ‘அணம்’ (அண்+அம்) அண்மை (அண்+ம்=அண்ம்+ஐ) என்பதன் மற்றொரு வடிவம்.
‘அண்’ என்னும் வேர்ச்சொல்லிலிருந்து தோன்றிய மற்றொரு பொருள் அணி. ஆடையணிகள் நமக்குத் தெரியும்.
மாந்தர் அணிந்துகொள்வது அணி.
மொழி அணிந்துகொள்வது அணம்.
மொழி இலக்காக, விளக்கமாக அணிந்துகொண்டிருப்பது இலக்கணம்.
இலக்கம் என்னும் தொல்காப்பியருக்கு முன்பிருந்தே தமிழ்மொழி வழக்கில் இருந்தது.
தொல்காப்பியர் இதனை ‘எல்லே இலக்கம்’ [2] என்று விளக்கும்போது பயன்படுத்தியுள்ளார்.
‘இலக்கம்’ என்னும் பொருளில் ‘எல்’ என்னும் இடைச்சொல் பயன்படும் என்பது அவர் கருத்து.
தொல்காப்பியர் குறிப்பிடும் இலக்கம் என்னும் சொல் இலங்குதலைக் குறிக்கும்.
இலங்குதல் என்பது விளங்குதல்.
விளங்குவதும் விளங்கச் செய்வதும் விளக்கம்.
அதுபோல இலங்குவதும் இலங்கச் செய்வதும் இலக்கம்.
இலங்குமலை[3] இலங்குவளை [4] இலங்குமணி[5] இலங்குவாள் [6] இலங்குவன [7] போன்ற ஐம்பதுக்கும் மேற்பட்ட பழமையான சொல்லாட்சிகளை எண்ணுவோம்.
இலக்கம் என்னும் தமிழ்ச்சொல் வேறு. லட்சியம் என்னும் வடமொழிச்சொல் வேறு. இலக்கம் என்னும் சொல்லுக்கு இலங்குதல் என்று பொருள். லட்சியம் என்னும் சொல்லுக்குக் குறிக்கோள் என்பது பொருள்.
Remove ads
மேற்கோள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads