இலக்குமி விலாஸ் அரண்மனை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இலக்குமி விலாஸ் அரண்மனை என்பது மராத்திய பேஷ்வாக்களின் ஒரு பிரிவினரான, கெயிக்வாட் குலத்தவர்கள் ஆண்ட பரோடா இராச்சியத்தின் மகாராஜக்கள் கட்டிய அரண்மனைத் தொகுதியாகும்.
இவ்வரண்மனைகள் இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் வதோதரா நகரத்தில் உள்ளது.
Remove ads
வரலாறு

இலக்குமி விலாஸ் அரண்மனை, பரோடா சமஸ்தானத்தின் மன்னர் மகாராஜா சாயாஜிராவ் மூன்றாம் கெயிக்வாட் என்பவரால், 1,80,000 பிரித்தானிய பவுண்டு செலவில், இந்தோ-சாசனிக் கட்டிடக் கலையில் 1890ல் கட்டப்பட்டது.
பரோடா சமஸ்தான குடும்பத்தவர்களின் வாழ்விடமான இலக்குமி விலாஸ் அரண்மனை, லண்டன் பக்கிங்காம் அரண்மனையை விட நான்கு மடங்கு கொண்டது. தற்கால நவீன வசதிகளுடன் 1890ல் கட்டப்பட்ட இவ்வரண்மனையின் மாடிகளில் செல்வதற்கு மின்தூக்கிகள் பயன்படுத்தப்பட்டது.
500 ஏக்கர் பரப்பளவு கொண்ட அரண்மனை வளாகத்தில் அரச குடும்பத்தினர், அரச அலுவலர்கள், அரச விருந்தினர்கள் மற்றும் ஊழியர்கள் தங்குவதற்கான பெரிய கட்டிடங்கள் உள்ளது. அவற்றில் மோதி தோட்ட அரண்மனை மற்றும் மகராஜா பதே சிங்க் அருங்காட்சியகம் குறிப்பிடத்தக்கது.

1930ல் இலக்குமி விலாஸ் அரண்மனை வளாகத்தில், பரோடா மன்னர் பிரதாப் சிங், தனது பிரித்தானிய விருந்தினர்களுக்கான கோல்ப் விளையாட்டுத் திடலை அமைத்தார்.
1990ல் பரோடா மன்னர் பிரதாப் சிங்கின் பேரனும், முன்னாள் கிரிக்கெட் விளையாட்டு வீரருமான சமர்ஜித்சிங், இலக்கு விலாஸ் அரண்மனை வளாகத்தின் கோல்ப் விளையாட்டுத் திடலை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.[1]

Remove ads
திரைப்படங்கள்
இலக்குமி விலாஸ் அரண்மனையில் கீழ்கண்ட இந்தி திரைப்படங்கள் எடுக்கப்பட்டது.
- பிரேம் ரோக், 1982
- கிராண்ட் மஸ்தி
- ரங்க் ரகசியம்
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads