வடோதரா
குசராத்திலுள்ள ஒரு நகரம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
வடோதரா அல்லது வதோதரா (Vadodara)(குஜராத்தி: ⓘ, மராட்டி: बडोदा) அல்லது பரோடா இந்திய மாநிலங்களில் ஒன்றான குசராத்தில் அகமதாபாத் மற்றும் சூரத்திற்கு அடுத்தபடியாக மூன்றாவதாக மக்கள் தொகை அதிகம் உள்ள நகராகும். இது வதோதரா மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமாகும். 10 இலட்சம் மக்கள் தொகைகளைக் கொண்ட நகரங்களில் நான்காவது இடத்தில் உள்ளது,[6] மற்ற நகரங்கள் ராஜ்கோட் மற்றும் அகமதாபாத் ஆகும்.
இந்த நகரத்தை சயாஜி நகரி என்ற பெயரிலும் (சயாஜியின் நகரம் மகாராஜா சயாஜிராவ் கேக்வத் III அரசனின் பெயர்) அல்லது சன்சுகாரி நகரி (கலாச்சார நகரம், மற்றும் குசராத்தின் கலாச்சார தலைநகரம்). வதோதரா அல்லது பரோடா, முன்பு கேக்வார் மாநிலத்தின் தலைநகராக விளங்கியது, விசுவாமித்திரி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது, ரிஷி விசுவமித்ரா எனும் துறவியின் பெயரால் இப்பெயர் குறிக்கப்படுகிறது. அகமதாபாத்திற்கு தென்கிழக்கிலும், தலைநகர் காந்தி நகருக்கு 139 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. வதோதரா மாவட்டத்தின் நிருவாக தலைநகராக விளங்குகிறது.
பரோடா இராச்சியத்தின் மகாராஜா சாயாஜிராவ் மூன்றாம் கெய்க்வாட் கட்டிய இலக்குமி விலாஸ் அரண்மனை இந்நகரத்திற்கு அழகு சேர்க்கிறது.
இந்நகரிலிருந்து மக்களவைக்கு ஒரு[3] உறுப்பினரும் மாநில சட்டமன்றத்திற்கு ஐந்து உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்[2] [7]
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads