இலங்கைத் தமிழர் வரலாற்றுக் காலக்கோடு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சங்ககாலம்
- சுமார் கி.மு. 237 – 215 – இரண்டு சகோதரர்களின் (ஈழசேனன் (சேனன்) ,நாககுத்தன் (குத்திகன்)) ஆட்சி.[1][2]
- சுமார் கி.மு. 204 – 164 - இலங்கையை தமிழ் மன்னன் எல்லாளன் அநுராதபுரத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தல்[3]
- சுமார் கி.மு. 164 - எல்லாளன் துட்டகைமுனு உடனான போரில் மரணமடைதல்.[4][5]
- சுமார் கி.மு. 103 – 7 தமிழர்கள் 7000 பேருடன் இலங்கையை வந்தடைதல்[1]
- சுமார் கி.மு. 103 – 89 – 5 தமிழர்களும் அநுராதபுரத்திலிருந்து ஆட்சி செய்தல்[1]
- சுமார் கி.மு. 48 - 44- 2 தமிழர்கள் இலங்கையில் ஆட்சி செய்தல்[6]
Remove ads
சங்ககாலத்திற்கு பின்னான காலம்
- சுமார் 429-455 - களப்பிரர் ஆட்சியில் தமிழகத்திலிருந்து இலங்கை சென்ற பாண்டிய மன்னர்கள், இராசராட்டிரம் என்னும் அரசை ஏற்படுத்தி ஆண்டனர்.[6][7]
- சுமார் 429-434 - பாண்டு
- சுமார் 434-437 - பரிந்தன்
- சுமார் 437-452 - குட்ட பிரிந்தன்
- சுமார் 452 - திரிதரன்
- சுமார் 452-455 - தாத்தியன்
- சுமார் 455 - பிதியன்
- சுமார் 600 - திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் - திருக்கோணமலை பதிகம்
- சுமார் 700 - சுந்தரமூர்த்தி நாயனார் - திருக்கேதீச்சர பதிகம்
- சுமார் 840 - சிறிவர்மன் இலங்கை மீது போர் தொடுத்து முதலாம் சேனனிடமிருந்து வட மாகாணங்களை கைப்பற்றல்
- சுமார் 990 - ராஜராஜ சோழன் இலங்கை மீது போர் தொடுத்து பொலநறுவையை தலைநகராக்கல்[8]
- சுமார் 1018 - ராஜேந்திர சோழன் முழு இலங்கையையும் ஆட்சி செய்தல்.[8]
Remove ads
யாழ்ப்பாண அரசு/கிழங்கிலங்கை அரசர்கள் காலம்
- சுமார் 1178 - கூழங்கை ஆரியச்சக்கரவர்த்தி
- சுமார் 1246 - குலசேகர சிங்கையாரியன்
- சுமார் 1256 - குலோத்துங்க சிங்கையாரியன்[9]
- 1223 - 1260 - குளக்கோட்டன்
- 1310 - சரசோதிமாலை நூல் எழுதப்பட்டது (பராக்கிரமபாகுவின் அரச சபையில் அரங்கேற்றப்பட்டது)
- 1380-1414 - செகராசசேகரமாலை நூல் எழுதப்பட்டது
- 14 - 16 ஆம் நூற்றா - பரராசசேகரம் நூல் எழுதப்பட்டது
போர்த்துக்கேயர் ஆட்சி
- 1505 - போர்த்துக்கேயர் இலங்கையை வந்தடைதல்[10]
- 1519 - 1561 - முதலாம் சங்கிலி போர்த்துக்கேசரை மூர்க்கமாக எதிர்த்தவன்.
- இறப்பு - 1621 - இரண்டாம் சங்கிலி போர்த்துக்கேசரை எதிர்த்தவன்.
ஒல்லாந்தர் ஆட்சி
பிரித்தானியர் ஆட்சி
- 1796 - ஒல்லாந்துக்காரரிடமிருந்து பிரித்தானியர் ஆட்சியைக் கைப்பற்றல்[10]
- பண்டார வன்னியன் - ஆங்கிலேயருக்கு எதிராகக் கலக்கம் செய்து கடைசி வரை எதிர்த்துத் தோற்றவன்.
- 1815 - பிரித்தானிய அரசால் தேயிலை, கோப்பி, தென்னைத் தோட்டங்களில் வேலை செய்வதற்கென்று தமிழ்நாட்டிலிருந்து தமிழர்கள் இலங்கைக்குக் கொண்டுவரப்படல்[10]
- 1915 - சிங்கள-முஸ்லிம் கலவரம்[12]
- 1928 - இலங்கையில் கோல்புறூக் அரசியல் சீர்திருத்தம்
- 1931 - டொனமூர் அரசியல் சீர்திருத்தம்[12]
- 1939 - இலங்கையில் முதலாவது தமிழ்-சிங்கள கலவரம் ஏற்படல்[13]
- 1944 - இலங்கையில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் உருவாக்கம்
Remove ads
பிரித்தானியாவிடம் இருந்து சுதந்திரத்திற்குப் பின்னான இலங்கை
- 1948 - இலங்கை இந்தியத் தமிழர்கள் வாக்குரிமையையும் குடியுரிமையையும் இழத்தல்[10]
- 1948 - இலங்கைத் தமிழரசுக் கட்சி எஸ். ஜே. வி. செல்வநாயகம் தலைமையில் கூட்டாட்சிக் கோரிக்கையை முன்வைத்து உருவாகியது[10][14]
- 1954 - இலங்கை இந்தியத் தமிழர்கள் நேரு-கொத்தலாவல உடன்படிக்கை[12]
- 1956 - சிங்களம் அரசு மொழியாக்கப்படலும், அதனை எதிர்த்த 100க்கு மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்படலும் 1000க்கு மேற்பட்ட தமிழர்கள் இடம்பெயர்தலும்[10]
- 1958 - இலங்கை இனக்கலவரம், 1958
- 1964 - இந்திய வம்சாவளித் தமிழர் தொடர்பான முதலாவது சிறிமா-சாஸ்திரி உடன்படிக்கை[15]
- 1972 - "சிலோன்" என்ற பெயர் "சிறி லங்கா" என பெயர் மாற்றம் பெறல்[10]
- 1974 - 1974 தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலைகள்
- 1975 - தனிநாடு கோரிக்கையைக் கொண்ட ஆயுதப் போராட்ட இயக்கமொன்றினால் முதலாவது அரசியல் படுகொலை நடத்தப்படுகின்றது[16]
- 1976 - வட்டுக்கோட்டைத் தீர்மானமும் தமிழரசு கட்சியின் பெரு தேர்தல் வெற்றியும்.
- 1976 - தமிழீழ விடுதலைப் புலிகள் உருவாக்கம்[10]
- 1977 - தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழர் வாழ் இடங்களில் சகல நாடாளுமன்ற ஆசனங்களையும் வெற்றி கொள்ளலும், தமிழருக்கு எதிரான கலவரத்தில் 100க்கு மேற்பட்ட தமிழர் கொல்லப்படல்[10] - 1977 தமிழர் இனப்படுகொலைகள்
- 1979 - பயங்கரவாத தடைச் சட்டம் அறிமுகப்படுத்தப்படல்[16]
- 1981 - யாழ்ப்பாணப் பொது நூலகம் எரியூட்டப்படல்[10]
Remove ads
இலங்கை உள்நாட்டு யுத்தம்/ஈழப் போராட்டம்
- 1983 - 13 அரச படையினர் கொல்லப்படுதலும், அதனைத் தொடர்ந்த முவாயிரம் வரையான தமிழர் படுகொலையும் (கறுப்பு யூலை) இலங்கை இனப்பிரச்சினை ஆயுதப் போராக மாறுதலும். இது முதலாம் ஈழப்போர் எனவும் அழைக்கப்படும்[17][18][19]
- 1983 - அதிகளவான ஈழத்தமிழர்கள் மேற்கத்தேய நாடுகளுக்கு புலம் பெயரத் தொடங்குதல்
- 1985 - ஈழத்தமிழர்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்குடன் திம்புப் பேச்சுவார்த்தைகள். முதலாவது அரச - ஈழத் தேசிய விடுதலை முன்னணி பேச்சுவார்த்தை.[10]
- 1987 - திலீபன் உண்ணாநிலை இருந்து உயிர்நீத்தல்.
- 1987 - இந்திய இலங்கை ஒப்பந்தம்.[20][21] இந்திய அமைதி காக்கும் படையின் பிரசன்னமும் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போரும்.
- 1990 - இந்திய அமைதி காக்கும் படை இலங்கையைவிட்டு வெளியேறலும், இலங்கையுடன் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போரிடல். இரண்டாம் ஈழப்போர் ஆரம்பம். முஸ்லிம்கள் வடக்கிலிருந்து வெளியேற்றப்படல்[10]
- 1991 - ராஜீவ் காந்தி கொல்லப்படலும் ஈழப்போருக்கான ஆதரவு தமிழ்நாட்டில் குறைதலும்[10]
- 1995 - மூன்றாம் ஈழப்போர் ஆராம்பமாதல்[10]
- 1997 - அமெரிக்கா தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத இயக்கமாகத் தடைசெய்தல்[16]
- 2002 - நோர்வேயின் அனுசரனையுடன் அரசு - புலிகள் மோதல் தவிர்ப்பு ஒப்பந்தம்[10]
- 2004 - புலிகளுக்குள் பிளவும், ஆழிப்பேரலையில் வடக்கு கிழக்கு உட்பட்ட இலங்கை பாதிப்புக்கு உள்ளாகுதல்[10]
- 2006 - சமாதானப் பேச்சுவார்த்தை ஜெனிவாவில் தோல்வியுறல்[10] நான்காம் ஈழப்போர் ஆராம்பமாதல்
- 2007 - காவல் துறையினரால் தமிழர்கள் கொழும்பிலிருந்து வெளியேற்றப்படல்[10]
- 2008 - அரசு ஓப்பந்தத்திலிருந்து பின்வாங்கலும் முழு அளவிலான இராணுவ நடவடிக்கையினை மேற்கொள்ளலும்[10]
- 2006-2009 - இலங்கைத் தமிழர் இனப்படுகொலை
- 2009 - இலங்கையில் ஆயுதப் போர் முடிவடைதல்[22]
Remove ads
உள்நாட்டு யுத்தத்திற்குப்/ஈழப் போருக்கு பின்னான நிலை
- 2010 - நாடு கடந்த தமிழீழ அரசு அங்கத்தவர்களைத் தெரிவதற்காக மே 2010 இல் தேர்தல்கள் இடம்பெற்று உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
- 2011 - அரசும் புலிகளும் போர்க்குற்றம் செய்ததாக ஐ.நா. குற்றம் சாட்டல் [10]
மேலதிக குறிப்புகள்
குறிப்பு: இவை முற்று முழுதாக நிரூபிக்கப்பட்ட முடிபுகள் அல்ல. இவை பற்றிய வாதங்களும் எதிர்வாதங்களும் காணப்படுகின்றன. தகவல் என்ற அடிப்படையில் அவை இங்கு தரப்பட்டுள்ளன.
- கி.மு. 8 - கி.பி. 1 எழுதப்பட்ட இராமாயணத் தொன்மத்தில் வரும் இராவணன் என்ற கதாபாத்திரம் இலங்கைய ஆண்ட ஒரு தமிழன் என்று சிலரால் கொள்ளப்படுகிறது
- சங்க இலக்கியங்களில் பாடல்கள் எழுதி உள்ள ஈழத்துப் பூதன்தேவனார், மதுரை ஈழத்துப் பூதன்றேவனார் ஆகிய இருவரும் ஒருவரே என்றும், இவர்கள் ஈழத்தைச் சார்ந்தவர்களாக இருக்கலாம் என்றும் சில அறிஞர்களால் கொள்ளப்படுகிறது. எனினும் இது முதன்மையாக பெயரை அடிப்படையாகக் கொண்ட ஒரு ஊகமே ஆகும்.[23]
இவற்றையும் பார்க்க
உசாத்துணை
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads