இலங்கையில் பிரித்தானிய ஆட்சியின் ஆரம்பம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
1796 – 1948 வரை இலங்கையை பிரித்தானியர் ஆட்சி செய்தனர். பிரித்தானிய முடியின் நிர்வாகத்தின் கீழ் இலங்கை நேரடியாக வருவதற்கு முன்பு பிரித்தானிய கிழக்கிந்திய வர்த்தக நிறுவனமே இலங்கையை தனது கட்டுப்பாட்டின் கீழ்க் கொண்டுவந்தது. பிரித்தானியக் கிழக்கிந்திய வர்த்தகக் நிறுவனம் கீழைத்தேய நாடுகளில் கேந்திர முக்கியத்துவம் மிக்கதாக விளங்கிய இலங்கையைக் கைப்பற்றிக் கொள்ளப் பல்வேறு காரணிகள் ஏதுவாக அமைந்திருந்தன.

Remove ads
ஏதுவான காரணிகள்
பாதுகாப்புக் காரணிகள்
இந்தியா உட்பட கீழைத்தேய நாடுகளில் ஏற்கனவே தன் செல்வாக்கிற்கு உட்பட்ட பிரதேசங்களின் பாதுகாப்பிற்கும், இந்தியாவை முற்று முழுதாகத் தமது கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கும் திருக்கோணமலைத் துறைமுகம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்கியது. புயல் அபாயங்களிலிருந்து தனது கடற்படையைப் பாதுகாத்துக் கொள்ளவும், இங்கு தனது கடற்படைத் தளத்தை அமைப்பதன் மூலம் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும் எனவும் பிரித்தானியா எண்ணியது.
ஆதரவுநிலை
பிரித்தானிய ஏகாதிபத்தியக் கொள்கைகளையும், குடியேற்றவாதக் கொள்கைகளையும் விரிவுபடுத்த இலங்கையின் அமைவிடம் சாதகமாக அமைந்திருந்தமை
பொருளாதாரக் காரணிகள்
- பிரித்தானிய வர்த்தக்கத்தில் காணப்பட்ட திறந்த பொருளாதாரக் கொள்கை (தலையிடாக் கொள்கை அல்லது தாராளவாதக் கொள்கை என அழைக்கப்படும்) காரணமாக இலங்கையில் மூலப் பொருட்களைப் பெற்று, முடிவுப் பொருட்களை சந்தைப்படுத்தக் களமமைக்க எண்ணிமை.
- இலங்கையில் முதன்மை பெற்று விளங்கிய கறுவா வர்த்தகத்தைக் கைப்பற்றிக் கொள்ள எண்ணிமை.
- 1789ம் ஆண்டின் பின்னர் பிரான்ஸ்சுடன் பிரித்தானியா மேற்கொண்ட போர்களின் போது பயன்படுத்தப்பட்ட போர்வீரர்களுக்கு போர் முடிவின் பின்னர் தொழில் வாய்ப்புக்களை வழங்கல். (பிரித்தானியரால் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட பெருந்தோட்ட துறைகளில் இந்தப் போர்வீரர்களின் பங்களிப்பே அதிகமாகக் காணப்பட்டிருந்தது.
Remove ads
கரையோரப் பிரதேசங்களை பிரித்தானிய வர்த்தக நிறுவனம் கைப்பற்றல்
1796ல் பிரித்தானிய வர்த்தக நிறுவனம் இலங்கையின் கரையோரப் பிரதேசங்களைக் கைப்பற்றிய பின்னணி
- 18ம் நூற்றாண்டின் இறுதியில் பிரான்சியரும், ஆங்கிலேயரும் இந்தியாவில் தத்தம் ஆதிக்கத்தைச் நிலைநிறுத்தப் போராடினர். 1789ல் பிரான்சியப் புரட்சியின் பின்னர் ஒல்லாந்து பிரான்ஸ்சின் ஆதிக்கத்தின் கீழ் வந்தது.
- இந்த நிலையில் இலங்கையில் ஒல்லாந்தர் வசமிருந்த பகுதிகளைப் பிரான்ஸ்சின் கைக்குள் சிக்காதிருக்க ஒல்லாந்தப் பகுதிகள் மீது இங்கிலாந்து தாக்குதலை நடத்தியது.
- இதன் விளைவாக ஆகஸ்ட் 20. 1795 இல் கர்ணல் ஸ்டுவார்ட் தலைமையில் ஒரு படை திருகோணமலைத் துறைமுகத்தைக் கைப்பற்றிக் கொண்டது.
- தொடர்ந்து திருகோணமலைக் கோட்டையையும், செப்டம்பர் 18, 1795 இல் மட்டக்களைப்பையும், அக்டோபர் 27 ம் திகதி யாழ்ப்பாணத்தையும், பருத்தித்துறையையும், அக்டோபர் 5ம் திகதி கற்பிட்டியையும், பிப்ரவரி 3, 1796 இல் நீர்கொழும்பு, காலி ஆகிய இடங்களையும், 09ம் திகதி கொழும்பையும் கைப்பற்றிக் கொண்டது.
- இலங்கையின் கரையோரப் பிரதேசங்களை ஒல்லாந்தரிடமிருந்து கைப்பற்ற பிரித்தானியக் கிழக்கிந்திய வர்த்தகக் நிறுவனத்திற்கு 06 மாதங்கள் எடுத்தன. (யூலை 02, 1795 முதல் பிப்ரவரி 14, 1796வரை)
Remove ads
1797 இலங்கைக் கலகம்
இலங்கை வரலாற்றில் 1797ம் ஆண்டு கலகம் ஒரு முக்கிய கலகமாக கொள்ளப்படுகின்றது. இக்கலகமானது பிரித்தானிய கிழக்கிந்திய வர்த்தக நிறுவனத்திற் கெதிராக மேற்கொள்ளப்பட்ட ஒரு கலகமாகும்.
- ஓல்லாந்தரும், ஆங்கிலேயரும் நண்பர்களாய் இருந்தமையால் பிரான்சிய ஆதிக்கத்திலிருந்து அது விடுபட்டால் இலங்கையைத் திருப்பிக் கொடுக்க வேண்டிவரும் எனக் கருதிய ஆங்கிலேயர் இதற்கிடையில் தமது யுத்தச் செலவையாவது ஈட்டிக் கொள்ளக் கருதினர். இதனால் அவசர, அவசரமாக வரிவிதிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
- ஓல்லாந்தர் காலத்தில் கடமையாற்றிய முதலியார்கள் நீக்கப்பட்டனர். பதிலாக சென்.ஜோர்ஜ் கோட்டையில் பணிபுரிந்த தென்னிந்திய உத்தியோகத்தர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டனர். இவர்கள் ‘அமில்தார்கள்’ என அழைக்கப்பட்டனர்.
- இவர்கள் பலபுதியவரிகளை மக்கள் மீது சுமத்தினர். இதனால் வர்த்தகக் நிறுவனத்திற் கெதிராக 1797ம் ஆண்டில் கலகம் ஏற்பட்டது.
கலகத்திற்கான காரணிகள்
- வர்த்தகக் கம்பனியினர் மக்கள் மீது சுமத்திய வரிச்சுமைகள்
- வரிகளை அறவிட இவர்கள் நடந்துகொண்ட கடுமையான வழிமுறைகள். (வரி அறவிடும் பகுதியை வரி வசூலிப்போருக்கு ஏலத்தில் விற்றனர்.)
- பதவி நீக்கப்பட்ட முதலியார்கள் எதிர்ப்பு
கலகத்தின் போக்கு
- 1797ம் ஆண்டுக் கலகம் கிழக்கிந்திய வர்த்தகக் கம்பனியின் ஆட்சிக்கெதிராக சுதேச மக்களால் ஏற்படுத்தப்பட்ட கலகமாகும். முக்கியமாக கொழும்பு திசாவனி, இரயிகம, றேவாகம, சியான சல்பிற்று கோரளைகளில் ஆரம்பித்து யாழ்ப்பாணத்திலும், வன்னியிலும், மட்டக்களப்பிலும் பரவியது. இக்கலகக்காரர்களுக்கு கண்டி இராச்சியத்தின் உதவி கிடைத்தது. மேலும் பிரான்ஸ் ஏஜண்டுகளினதும், ஒல்லாந்த உத்தியோகத்தர்களினதும் உதவியும் கிடைத்தன.
இரட்டை ஆட்சிக்காலம்
இலங்கையில் பிரித்தானிய கிழக்கிந்திய வர்த்தக நிறுவனமும், பிரித்தானிய முடியால் நியமிக்கப்பட்ட மகாதேசாதிபதியும் இணைந்து இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட நிர்வாகம் இரட்டை ஆட்சி எனப்படுகின்றது.
- பிரித்தானிய கிழக்கிந்திய வர்த்தகக் நிறுவனத்திற்கெதிரான 1797ம் ஆண்டுக்கலகமே இலங்கையில் இரட்டையாட்சியொன்று ஏற்பட அடிப்படையாக அமைந்தது.
- 1798ல் இலங்கையின் கரையோரப் பிரதேசங்களில் சிவில், இராணுவ நிர்வாகம், நீதிப்பரிபாலனம் போன்றவற்றைப் புரிய, ஒரு தேசாதிபதி பிரித்தானிய அரசால் நியமிக்கப்பட்டார். (இலங்கையில் நியமிக்கப்பட்ட முதல் தேசாதிபதி ஸார் பிரடரிக் நோத் என்பராவார்)
- அதேநேரம் இலங்கையின் கரையோரப் பிரதேசங்களின் வர்த்தகமும், இறைவரி நிர்வாகம் தொடர்ந்தும் பிரித்தானிய கிழக்கிந்திய வர்த்தகக் நிறுவனத்தையே சார்ந்திருந்தது.
- இவ்வாறாக இலங்கையில் பிரித்தானிய அரசின் தேசாதிபதியாலும், வர்த்தகக் நிறுவனத்தாலும் இணைந்து மேற்கொள்ளப்பட்ட ஆட்சிக்காலமே ‘இரட்டை ஆட்சி’ எனப்படுகின்றது.
- இந்த இரட்டை ஆட்சிக்காலம் அக்டோபர் 12 1798 திகதி முதல் சூன் 1 1802 திகதி வரை நீடித்தது. இக்காலத்தில் இருசாராருக்குமிடையில் அடிக்கடி முரண்பாடுகள் எழுந்தன.
Remove ads
ஏமியன்ஸ் உடன்படிக்கையும், இலங்கை முடிக்குரிய ஒரு குடியேற்ற நாடாக மாறியமையும்.
- ஏமியன்ஸ் உடன்படிக்கை என்பது பிரித்தானிய கிழக்கிந்திய வர்த்தக நிறுவனத்திற்கும், பிரித்தானிய அரசுக்குமிடையே செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையாகும். இதன் பிரகாரம் சூன் 12 1802 முதல் இலங்கை முடிக்குரிய ஒரு குடியேற்ற நாடாக மாறியது.
- இதிலிருந்து இலங்கையின் கரையோரப் பிரதேசங்களின் சிவில் நிர்வாகம், நீதிப்பரிபாலனம், நிர்வாகவிடயங்கள் பிரித்தானிய அரசினால் இலங்கையில் நியமிக்கப்பட்டிருந்த தேசாதிபதியால் நிறைவேற்றப்பட்டன.
- தேசாதிபதிக்கு ஆலோசனை வழங்க 6 பேரைக் கொண்ட ஒரு சபை அமைக்கப்பட்டிருந்தது. இச்சபையில் இராணுவத் தளபதி, குடியேற்ற நாட்டுக்காரியதரிசி, பிரதம நீதியரசர் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
மேற்குறிப்பிட்ட அடிப்படையிலேயே இலங்கையில் பிரித்தானியர் ஆட்சி ஆரம்பமாகியது.
Remove ads
உசாத்துணை
- மெண்டிஸ், ஜீ. ஸி. நம்முன்னோரளித்த அருஞ்செல்வம், முதலாம் பாகம், கொழும்பு அப்போதிக்கரீஸ் கம்பனி - 1969
- பீ. எம். புன்னியாமீன். வரலாறு ஆண்டு 11 சிந்தனை வட்டம் 1998
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads