காலி

இலங்கையின் தென் மாகாணத்தில் அமைந்துள்ள நகரம் From Wikipedia, the free encyclopedia

காலி
Remove ads

காலி இலங்கையின் தென் பகுதியிலுள்ள ஒரு நகரம். இலங்கையின் பெரிய நகரங்களுள் ஒன்று. இலங்கையின் எட்டு மாகாணங்களுள் ஒன்றான தென் மாகாணத்தின் தலைநகரமும் இதுவே. இலங்கையின் முக்கிய துறைமுகங்களில் ஒன்றான காலித் துறைமுகமும் இங்கே அமைந்துள்ளது. 2004 ல் ஏற்பட்ட சுனாமியினால் இந்த நகரம் கடுமையாகப்பாதிக்கப்பட்டது. சர்வதேச துடுப்பாட்ட திடல் ஒன்றையும் இந்த நகரம் கொண்டுள்ளது. 2004 ஆழிப்பேரலை தாக்கத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட இந்த திடல் புணரமைக்கப்பட்டு மீண்டும் பயன்படுத்தப்படுகிறது.

விரைவான உண்மைகள் காலி, நாடு ...
Remove ads

காலநிலை

இதன் காலநிலை வெப்பமண்டல மழைக்காடுகளின் காலநிலையை ஒத்ததாக உள்ளது. இங்கு வறட்சி என தனிக் காலம் இல்லாவிடிலும் சனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் சற்று வறட்சி தென்படும்.

மேலதிகத் தகவல்கள் தட்பவெப்ப நிலைத் தகவல், Galle, மாதம் ...
Remove ads

மக்கள்

காலியின் மக்கள் தொகை 91 000 ஆகும். அதிகமாக சிங்களவர்களே வசிக்கின்றனர். மேலும் தமிழர் முஸ்லிம்களும் வசிக்கின்றனர்.

மேலதிகத் தகவல்கள் சனத்தொகை (2001) ...
மேலதிகத் தகவல்கள் Ethnicity, Population ...
Remove ads

காலியில் உள்ள வெளிச்சவீடு

இங்குள்ள வெளிச்சவீடு பழமை வாய்ந்தது. இது 1934 ஆம் ஆண்டில் தீயினால் அழிந்ததை அடுத்து 1939 இல் புதிதாகக் கட்டப்பட்டது. இதன் உயரம் 26.5 மீற்றர், வட்ட இரும்புக்கோபுரமாகவும், மேற்பக்கம் தட்டை உருவம் உடையதாகவும் உள்ளது. கோபுரம் முழுவதும் வெள்ளை நிறத்தாலும் அடிப்பகுதி சிவப்பு நிறத்தாலும் நிறம் தீட்டப்பட்டுள்ளது.[3]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads