இலங்கை இராச்சியம்

From Wikipedia, the free encyclopedia

இலங்கை இராச்சியம்
Remove ads

இலங்கை இராச்சியம் (Lanka அல்லது Lanka kingdom) வங்காள விரிகுடாவில், கடலால் சூழப்பட்ட தீவு நாடாகும். இராமாயணக் காவியத்தின் படி, பண்டைய இலங்கைத் தீவின் திரிகூடமலையில் பெரும் கோட்டைக்களைக் கட்டிக் கொண்டு, இராவணன் தன் தம்பியர்களான கும்பகர்ணன், வீடணன் மற்றும் தன் மூத்த மகன் இந்திரஜித் ஆகியவர்களுடன் இலங்கையை ஆண்டான். சீதையை கடத்திச் சென்ற இராவணனின் கோட்டைகளை அனுமன் எரித்தான். இராமன், இலங்கைக்கு சேது பாலம் அமைத்து, இராவணன் முதலியவர்களை வென்று சீதையை மீட்டு, வீடணனுக்கு இலங்கையின் மன்னராக பட்டம் கட்டினார்.[1][2][3]

இது பழங்கால நாட்டைப் பற்றியது. தற்கால நாட்டைப் பற்றி அறிய இலங்கை என்ற கட்டுரையை நோக்குக.
Thumb
இராவணின் இலங்கைக் கோட்டை
Thumb
இலங்கை எரிவதை அனுமன் நோக்குதல்
Thumb
மகாபாரத கால நாடுகள்
Remove ads

மகாபாரதக் குறிப்புகள்

மகாபாரத காவியத்தின் சபா பருவத்தில், தருமரின் இராசசூய வேள்வியின் பொருட்டு, பாண்டவர்களில் இளையவனான சகாதேவன், பரத கண்டத்தின் தெற்குப் பகுதி நாடுகளின் மீது படையெடுத்துச் செல்லும் போது இலங்கை நாட்டிற்கும் சென்றதாக கூறப்பட்டுள்ளது. மகாபாரத வன பருவத்தின் போது, தருமருக்கு இராமாயண வரலாறுகள் கூறப்படுகிறது. அர்ஜீனன் அல்லி ராணி என்ற இலங்கை அரசியை திருமணம் செய்ததாக மரபு வழிக் கதைகள் கூறுகின்றன.

இலங்கை நாட்டின் ஆட்சியாளர்கள்

இராமாயண காவியத்தின்படி, தேவ சிற்பி விசுவகர்மாவால், தேவர்களுக்காக நிறுவப்பட்ட இலங்கையை, அசுர சகோதரர்களான மால்யவான், சுமாலி மற்றும் மாலி கைப்பற்றி ஆண்டனர். பின்னர் தேவ லோகத்தைக் கைப்பற்றச் செல்லும் போது திருமாலால் விரட்டப்பட்டனர். பின்னர் குபேரன் இலங்கையை கைப்பற்றி யட்சர்களின் இராச்சியத்தை நிறுவினார். குபேரனின் ஒன்று விட்ட தம்பியான இராவணன், குபேரனை வென்று இலங்கையை கைப்பற்றி இராக்கதர்களின் நாட்டை ஆண்டார். இராவணின் மறைவிற்குப் பின்னர் இலங்கையை வீடணன் ஆண்டார்.

Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads