சகாதேவன்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சகாதேவன் (Sahadeva) மகாபாரதத்தில் வரும் பாண்டுவின் இரண்டாவது மனைவியான மாத்ரியின் புதல்வராவார். இவர் அஸ்வினி தேவர்களின் மூலமாக பிறந்தவர். இவரும் நகுலனும் இரட்டையர்கள் ஆவர்.
பாண்டவர் ஐவரில் சகாதேவனே இளையவர் ஆவார். மேலும் அவர்களில் சகாதேவனே புத்திக்கூர்மை மிக்கவர். தன்னுடைய சகோதரன் நகுலனைப் போல் வாள் வீச்சில் சிறந்தவராக விளங்கினார்.
இவர் மகத நாட்டு மன்னனான ஜராசந்தனின் மகளை மணந்து கொண்டார்.
சகாதேவன், பாண்டவர்களின் தலைமறைவு வாழ்க்கையின் போது தந்திரிபாலன் என்ற மாற்றுப் பெயருடன் விராடமன்னனின் நூறாயிரம் பசுக்களை மேற்பார்வையிடுபவராக மாறுவேடம் தாங்கினார். போரின் போது சகுனியை வதம் செய்கிறார்.[1]
Remove ads
குறிப்புகள்
- மகாபாரதத்தில் கூறப்படாவிடினும், அரி வம்சம் என்ற நூல் யாதவ குல இளவரசியான பானுமதி என்பவர் சகாதேவனின் மனைவிகளில் ஒருவர் என்று உரைக்கிறது
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads