இலட்சுமிதர விஜயதுங்கதேவி

11-ஆம் நூற்றாண்டு பாலியின் ஆட்சியாளர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

இலட்சுமிதர விஜயதுங்கதேவி (ஆங்கிலம்: Laksmidhara Wijayottunggadewi இந்தோனேசியம்: Śri Maharaja Śri Sakalendu Kirana Isana Gunadharma Laksmidhara Wijayotthunggadewi) என்பவர் பாலி இராச்சியத்தின் வர்மதேவ மரபு வழி அரசி ஆவார். மேலும் இவர் பாலி இராச்சியத்தின் 14-ஆவது அரசியாகவும் ஆட்சி செய்தார்.[1][2]

விரைவான உண்மைகள் இலட்சுமிதர விஜயதுங்கதேவி Laksmidhara Wijayottunggadewi Sakalendukirana Laksmidhara Wijayottunggadewi, ஆட்சிக்காலம் ...

இலட்சுமிதர விஜயதுங்கதேவியின் ஆட்சிக்காலம் கிபி 1088-1101[3] இவர் 1088-இல் மகாராஜா வளபிரபுவிற்குப் பிறகு பதவியேற்றார். இவருடைய நீண்ட பெயர், முந்தைய ஆட்சியாளர்களுடன் அவரின் அரச உறவு முறைத் தொடர்புகளையும்; தெய்வீகத் தன்மையில் அவரின் தொடர்புகளையும் விவரிக்கும் வகையில் அமைந்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது.[4][5]

Remove ads

பொது

1010, 1020, 1023-ஆம் ஆண்டு என பொறிக்கப்பட்ட பாலினிய கல்வெட்டுகள், இலட்சுமிதர விஜயதுங்கதேவியின் ஆட்சியை விவரிக்கின்றன. அவற்றில் வர்மதேவ வம்சம் என்பது சகலேந்துகிராண வம்சம் (Sakalendukirana Dynasty) என்று மாற்றம் பெற்றதாக விவரிக்கப்பட்டுள்ளது.[6]:129,144,168,180

செரி மகாராஜா சகலேந்துகிராண இலட்சுமிதர விஜயதுங்கதேவி என்ற தலைப்பில் இலட்சுமிதர விஜயதுங்கதேவி பற்றி நான்சி குயின் காலின்ஸ் (Nancy Quinn Collins) என்பவர் எழுதிய ஒரு கவிதை, "பெமினிஸ்ட் போயம்ஸ்" என்ற நூலில் 2016-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.[7]

Remove ads

மேலும் காண்க

மேற்கோள்கள்

சான்றுகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads