இலட்சுமி மித்தல்
இங்கிலாந்தில் வசிக்கும் இந்திய வணிகர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
இலட்சுமி நிவாசு மித்தல் (லக்ஷ்மி நிவாஸ் மித்தல்) (சூன் 15, 1950) இலண்டன் நகரத்தில் வசிக்கும் இந்தியர். இராச்சசுத்தான் மாநிலத்தில் அமைந்துள்ள சுரு பகுதியில் சதுல்பூர் என்னும் ஊரில் பிறந்த இலட்சுமி மித்தல் இன்று கெனிங்சிட்டன், இலண்டனில் வசித்து வருகின்றார். பிரித்தானியாவிலேயே அதிக சொத்துக்களை உடைய இவர் அந்நாட்டின் பணக்காரர் பட்டியலில் முதலாவதாக உள்ளார்.[1]
இலட்சுமி மித்தல் சிறுவயதில் தனது கூட்டுக் குடும்பத்தினருடன் சதுல்பூரில் ஜந்து ஆண்டுகள் தங்கியிருந்தார். லக்ஷ்மி மித்தல், மார்வாரி அகர்வால் இனத்தைச் சேர்ந்த எளிமையான குடும்பத்தில் பிறந்தவர். இவரது பாட்டனார் இந்தியா விடுதலை அடைவதற்கு முன்னர் மார்வாரி தொழில் நிறுவனம் ஒன்றில் வேலை செய்தார். மேலும் இலட்சுமி மித்தலின் தந்தை மோகன் கொல்கத்தாவில் உள்ள இரும்புத் தொழிற்சாலை நிறுவனத்தில் பங்காளராக விளங்கினார். 1969 ஆம் ஆண்டு புனித சேவியர் கல்லூரி, கொல்கத்தா கல்லூரியில் இலட்சுமி மித்தல் பட்டம் பெற்றார்.
1994 ஆம் ஆண்டுகளில் தந்தையின் தொழில் நிறுவனமாக விளங்கிய மித்தல் இரும்புத் தொழிலை வெளிநாடுகளில் வளர்க்கத் தொடங்கினார். இன்று உலகளவில் அதிக இரும்புகளைத் தயாரிக்கும் நிறுவனமாக [சான்று தேவை] உள்ள மித்தல் இரும்பு நிறுவனத்தின் தலைவராக இலட்சுமி மித்தல் திகழ்கிறார். 22 சூன் 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற இவர் மகள் வனிசாவின் திருமணத்திற்காக 65 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரையிலான செலவுகளைச் செய்திருந்தார். மேலும் இத் திருமணமே உலகில் நடைபெற்ற அதிக செலவுகள் செய்யப்பெற்ற திருமண நிகழ்வாகும்.[சான்று தேவை]
Remove ads
இவற்றையும் காண்க
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads