இலித்தியம் நைட்ரைடு

From Wikipedia, the free encyclopedia

இலித்தியம் நைட்ரைடு
Remove ads

லித்தியம் நைட்ரைடு (Lithium nitride) Li3N என்ற மூலக்கூறு வாய்ப்பாட்டை உடைய கனிமச் சேர்மம் ஆகும். இது மட்டுமே கார உலோகம் ஒன்றின்  நிலையான நைட்ரைடு ஆகும்.  இந்தத் திண்மமானது சிவப்பு அல்லது கருஞ்சிவப்பு நிறத்துடன் அதிக வெப்பநிலையைக் கொண்டதாகவும் உள்ளது.[1]

விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...
Remove ads

தயாரிப்பு மற்றும் கையாளுதல்

லித்தியம் நைட்ரைடு, தனிம இலித்தியத்துடன் நைட்ரசன் வாயுவை நேரடியாக வினைப்படுத்தி தயாரிக்கப்படுகிறது:[2]

6 Li + N2 → 2 Li3N

நைட்ரசன் சூழலிலெரியும் இலித்திய உலோகத்திற்குப் பதிலாக, திரவ சோடியம் உலோகத்திலுள்ள இலித்தியம் கரைசலானது நைட்ரசனுடன் N2 வினைப்படுத்தப்படலாம். இலித்தியம் நைட்ரைடு நீருடன் தீவிரமாக வினைபுரிந்து அம்மோனியாவைத் தருகிறது :

Li3N + 3 H2O → 3 LiOH + NH3

அமைப்பு மற்றும் பண்புகள்

ஆல்பா-Li3N (அறை வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் நிலையானது) வழக்கத்தில் இல்லாத இரண்டு அடுக்குகளைக்கொண்ட ஒரு படிக அமைப்பைக் கொண்டுள்ளது. ஒரு அடுக்கு Li2N 6-ஈந்திணைவு உள்ள N மையங்களைக் கொண்டுள்ள இயைபைக் கொண்டுள்ளது. மற்றொரு அடுக்கு இலித்தியம் நேர்மின் அயனிகளை மட்டுமே கொண்டுள்ளது.[3] பீட்டா லித்தியம் நைட்ரைடு மற்றும் காமா லித்தியம் நைட்ரைடு ஆகிய இரண்டு நைட்ரைடு வடிவங்களும் காணப்படுகின்றன. 4200 அழுத்தவலகு (பார்) அல்லது 4,100 வளிமண்டல அழுத்தத்தில் ஆல்பா வடிவத்திலிருந்து மாற்றமடைந்து பீட்டா இலித்தியம் நைட்ரைடானது பெறப்படுகிறது. இது சோடியம் ஆர்செனைடின் வடிவத்தைக் கொண்டுள்ளது. காமா - லித்தியம் நைட்ரைடானது,  (Li3Bi கொண்டுள்ள அதே வடிவத்தைக் கொண்டுள்ளது) பீட்டா வடிவத்திலிருந்து 35 முதல் 45 கிகா பாசுகல்கள் (5,100,000 முதல் 6,500,000 psi) வரையிலான அழுத்தத்தில் பெறப்படுகிறது.[4]

லித்தியம் நைட்ரைடானது  2×10−4Ω−1செமீ−1 கடத்துத்திறன் மதிப்புடன் இலித்தியம் நேர்மின் அயனிக்கான அயனி கடத்துத்திறனைக் கொண்டுள்ளது. மேலும்,  c. 0.26 எலத்திரான்வோல்ட் (c.24 கிலோயூல்கள்/மோல்). மதிப்புள்ள படிகஇடை கிளர்வுறு ஆற்றலைக் கொண்டள்ளது. இச்சேர்மத்தில் ஐதரசனைக் கொண்டு மாசூட்டுவதன் விளைவாக கடத்தும் திறன் அதிகரிக்கிறது. அதே நேரத்தில், அலுமினியம், தாமிரம், மெக்னீசியம் உலோக அயனிகளைக் கொண்டு மாசூட்டுவதால் கடத்துத்திறன் குறைகிறது.[5][6] லித்தியம் நைட்ரைடு படிகங்களுக்கிடையிலான இலித்தியம் மாறுதலுக்கான கிளர்வுறு ஆற்றல் c. 68.5 கிலோயூல்கள்/மோல்[7] என்ற நிலையில் மிக அதிகமாக இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. ஆல்பா வடிவமானது,  c. 2.1 எலத்திரன் வோல்ட் என்ற ஆற்றல் இடைவெளியுடன் ஒரு குறைக்கடத்தியாக உள்ளது.

300 °செ(0.5மெகாபாசுகல் அழுத்தத்தில்) வெப்பநிலையில் ஐதரசனுடனான வினையில்  இலித்தியம் ஐதரைடு மற்றும் இலித்தியம் அமைடு ஆகியவற்றை உருவாக்குகிறது.[8]

வினையானது 270 ° செல்சியசு வெப்பநிலையில் மீள்வினையாக உள்ள காரணத்தால்,  இலித்தியம் நைட்ரைடு ஐதரசன் வாயுவிற்கு சேமிப்பு ஊடகமாக பயன்படுத்தப்படுவதற்கு பரிசீலனையில் உள்ளது. ஐதரசன் வாயுவானது 11.5% வரை எடை உறிஞ்சுதல் மூலம் இலித்தியம் நைட்ரைடினால் உறிஞ்சப்படுகிறது.[9]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads