இலித்தியம் ஆக்சைடு

From Wikipedia, the free encyclopedia

இலித்தியம் ஆக்சைடு
Remove ads

இலித்தியம் ஆக்சைடு (Lithium oxide) (Li
2
O) அல்லது இலித்தியா ஒரு  கனிமச் சேர்மம் ஆகும். இலித்தியம் ஆக்சைடானது, இலித்தியம் உலோகம் காற்றில் எரிக்கப்படும் போது ஆக்சிசனுடன் இணைந்து சிறிய அளவு இலித்தியம் பெராக்சைடுடன் கிடைக்கிறது:[2]

4Li + O
2
→ 2Li
2
O
.
விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...

துாய்மையான Li
2
O
, 450 ° செல்சியசு வெப்பநிலையில் இலித்தியம் பெராக்சைடின் (Li2O2) வெப்பப் பகுப்பின் மூலமாகப் பெறப்படுகிறது.[2]

2Li
2
O
2
→ 2Li
2
O
+ O
2
Remove ads

அமைப்பு

திண்ம நிலையில் இலித்தியம் ஆக்சைடு ஒரு கால்சியம் புளோரைடு அமைப்பையொத்த ஆண்டிபுளோரைட்டு அமைப்பை ஏற்றுக் கொண்டது. புளோரைடு எதிரயனிகளுக்குப் பதிலாக பதிலியிடப்பட்ட இலித்தியம் நேரயனிகளுடன் புளோரைட்டு அமைப்பும் மற்றும் கால்சியம் நேரயனிகளுக்காக பதிலியிடப்பட்ட ஆக்சைடு எதிரயனிகளையும் கொண்ட அமைப்பாக இருந்தது.[3] தாழ்-ஆற்றல் வாயு நிலை Li
2
O
மூலக்கூறானது வலிமையான அயனிப் பிணைப்புக்கு ஒத்த பிணைப்பு நீளத்துடன் நேர்கோட்டு வடிவத்தைப் பெற்றுள்ளது.[4][5]

வலுவளவு ஓட்டு இலத்திரன் சோடிகளின் தள்ளுகைக் கொள்கையின்படி இச்சேர்மத்திற்கு நீர் மூலக்கூறு கொண்டிருப்பது போன்ற  வளைந்த வடிவத்தைக் கொண்டிருப்பதாக கணிக்கப்படுகிறது.

Remove ads

பயன்கள்

இலித்தியம் ஆக்சைடு சுட்டாங்கல் பளபளப்பாக்கத்தில் இளக்கியாகப் பயன்படுகிறது. இது தாமிரத்துடன் நீல மணிகளையும், கோபால்ட்டுடன் இளஞ்சிவப்பு மணிகளையும் தருகிறது. இலித்தியம் ஆக்சைடு நீர் மற்றும் நீராவியுடன் வினைபுரிந்து இலித்தியம் ஐதராக்சைடினை உருவாக்குகிறது. இவ்வாறு உருவாக்கப்பட்ட இலித்தியம் ஐதராக்சைடு உடனுக்குடன் அக்கலவையிலிருந்து பிரித்தெடுக்கப்பட வேண்டும். வெப்ப தடுப்பு பூச்சு அமைப்புகளுக்குள் அழிவு ஏற்படுத்தாத உமிழ்வு நிறமாலையியல் மதிப்பீடு மற்றும் சிதைவு கண்காணிப்பு ஆகியவற்றிற்காக பயன்படுத்துதல் குறித்தும் இச்சேர்மம் ஆய்விடப்பட்டு வருகிறது.

இலித்தியம் ஆக்சைடின் மின்னாற்பகுப்பின் மூலமாகவும் இலித்தியம் உலோகமானது பெறப்படுகிறது. இவ்வினையில் ஆக்சிசன் உபவிளைபொருளாகக் கிடைக்கப்பெறுகிறது.

Remove ads

மேலும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads