இலித்தியம் புரோமைடு
இரசாயன கலவை From Wikipedia, the free encyclopedia
Remove ads
இலித்தியம் புரோமைடு (Lithium bromide) என்பது LiBr என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கனிம வேதியியல் சேர்மமாகும். இலித்தியமும் புரோமினும் சேர்ந்து உருவாகும் இச்சேர்மத்தின் அதிகமான நீர் உறிஞ்சும் திறனைக் கொண்டிருப்பதால் இது பல குளிர் சாதானக் கருவிகளில் பயன்படுத்தப்படுகிறது.[2]
Remove ads
தயாரிப்பும் பண்புகளும்
இலித்தியம் கார்பனேட்டுடன் ஐதரோ புரோமிக் அமிலத்தைச் சேர்த்து வினைப்படுத்துவதால் இலித்தியம் புரோமைடைத் தயாரிக்கலாம். இவ்வுப்பு மற்ற கார உலோக புரோமைடுகள் போலில்லாமல் பல படிக வடிவ நீரேற்றுகளாக உருவாகிறது[3] . இலித்தியம் புரோமைடின் நீரிலி வடிவம் சோடியம் குளோரைடு போல கனசதுர படிகங்களாக உருவாகிறது.
இலித்தியம் ஐதராக்சைடு மற்றும் ஐதரோபுரோமிக் அமிலம் ( ஐதரசன் புரோமைடின் நீர்க் கரைசல்) ஆகியன தண்ணீர் முன்னிலையில் இலித்தியம் புரோமைடை வீழ்படிவாக்குகின்றன.
LiOH + HBr → LiBr + H2O
Remove ads
பயன்கள்
குளிர் சாதானக் கருவிகளில் ஈரம் உலர்த்தியாக இலித்தியம் புரோமைடு பயன்படுத்தப்படுகிறது. இவ்வுப்புகளை நீருடன் சேர்த்து உட்கவர் குளிர்விப்பிகளில் பயன்படுத்துகிறார்கள். தவிர இவை கரிம தொகுப்பு வினைகளில் வினைப்பொருட்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. உதாரணமாக இது சில மருந்துகளுடன் கூட்டு விளைபொருளாக மீள்நிகழ் வினையுடன் உருவாகிறது.[2]
மருத்துவப் பயன்கள்
ஆரம்பகால 1990 களில் இலித்தியம் புரோமைடு தூக்க மருந்தாகப் பயன்படுத்தப்பட்டது. பின்னர் 1940 களில் இந்தப்பயன்பாடு குறைந்து போனது. ஏனெனில், உப்புக்கு மாற்றாக இதைப் பயன்படுத்திய சில இதய நோயாளிகள் பிறகு இறந்து போனார்கள்.[4]
இலித்தியம் கார்பனேட்டு மற்றும் இலித்தியம் குளோரைடு உப்புகள் போல இதுவும் இருமுனைக் கோளாறுகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. ஒரு நாளைக்கு 225 மில்லி கிராம் இலித்தியம் புரோமைடு கொடுத்துவந்தால் புரோமியம் நோய்க்கு ஆளாக நேரிடும்.
தீங்குகள்
இலித்தியம் உப்புகள் அரிப்புத்தன்மையும் உளவியல் சார்ந்த நோய்களுக்கு காரணமாகவும் இருக்கின்றன. இலித்தியம் புரோமைடு உப்பானது நீரில் கரையும் போது வெப்பத்தை வெளிப்படுத்துகிறது. ஏனெனில் இது, கரைசலின் எதிர் உள்ளுறை வெப்பத்தைக் கொண்டுள்ளது.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads