இலித்தியம் கார்பனேட்டு

வேதிச் சேர்மம் From Wikipedia, the free encyclopedia

இலித்தியம் கார்பனேட்டு
Remove ads

இலித்தியம் கார்பனேட் ஒரு கனிமச் சேர்மம் ஆகும். இது Li
2
CO
3
மூலக்கூற்று வாய்ப்பாட்டுடன் இலித்தியத்தின் கார்பனேட்டு உப்பு ஆகும். இந்த வெள்ளை நிற உப்பு உலோக ஆக்சைடுகளை பதப்படுத்துவதற்கும் மனநிலைக் கோளாறுகளுக்கு சிகிச்சையளிப்பதற்கும் பரவலாக பயன்படுத்தப்படுகிறது.

விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...

இருமுனையப் பிறழ்வுக்கான சிகிச்சையைப் பொறுத்தவரை, இது உலக சுகாதார அமைப்பின் அத்தியாவசிய மருந்துகளின் பட்டியலில் உள்ளது, இது அடிப்படை சுகாதார அமைப்பிற்குத் தேவைப்படும் மிகவும் முக்கியமான மருந்துகளில் ஒன்றாகும்.[5]

Remove ads

பயன்கள்

இலித்தியம் கார்பனேட் ஒரு முக்கியமான தொழில்துறை வேதிப்பொருளாகும். இது சிலிக்கா மற்றும் பிற பொருட்களுடன் இணைந்து எளிதில் உருகும் இளக்கிகளை உருவாக்குகிறது. இலித்தியம் கார்பனேட்டிலிருந்து பெறப்பட்ட கண்ணாடிகள் கணப்பு அடுப்பு பாத்திரங்கள் செய்வதற்கு உகந்ததாக இருக்கும். இலித்தியம் கார்பனேட் குறைந்த தீ வெங்களி பளபளப்பாக்கம் மற்றும் உயர்-தீ வெங்களி பளபளப்பாக்கம் இரண்டிலும் பயன்படும் ஒரு பொதுவான மூலப்பொருள் ஆகும். இலித்தியம் கார்பனேட்டை சேர்த்து தயாரிக்கப்படும் சிமென்ட் மிகவும் விரைந்து இறுகும் தன்மையைப் பெறுகிறது. மேலும் இச்சேர்மம் ஓடு ஒட்டும் பசைகள் உற்பத்தியிலும் இது பயன்படுகிறது. அலுமினியம் புளோரைடுடன் சேர்க்கும்போது, இது அலுமினியத்தை பதப்படுத்துவதற்கான ஒரு சிறந்த மின்பகுபொருள் LiF ஐ உருவாக்குகிறது. இலித்தியம் கோபால்ட் ஆக்சைடால் செய்யப்பட்ட பெரும்பாலான இலித்தியம் அயனி மின்கலத்தின் எதிர்மின்முனை உற்பத்தியிலும் இது பயன்படுத்தப்படுகிறது.

மருத்துவ பயன்கள்

1843 ஆம் ஆண்டில், சிறுநீர்ப்பையில் உள்ள கற்களுக்கு லித்தியம் கார்பனேட் ஒரு புதிய கரைப்பானாகப் பயன்படுத்தப்பட்டது. 1859 ஆம் ஆண்டில், சில மருத்துவர்கள் கீல்வாதம், சிறுநீரகக் கல், வாத நோய், பித்து, மனச்சோர்வு மற்றும் தலைவலி உள்ளிட்ட பல நோய்களுக்கு இலித்தியம் உப்புகளுடனான ஒரு சிகிச்சையை பரிந்துரைத்தனர். 1948 ஆம் ஆண்டில், லித்தியம் அயனிகளின் ஆண்டிமேனிக் விளைவுகளை ஜான் கேட் கண்டுபிடித்தார். இந்த கண்டுபிடிப்பு இலித்தியத்தை, குறிப்பாக இலித்தியம் கார்பனேட்டை, இருமுனையப் பிறழ்வுடன் தொடர்புடைய மனநோய்க்கு சிகிச்சையளிக்க வழிவகுத்தது.

இருமுனையப் பிறழ்வின் உச்சகட்ட மனநிலைக் கோளாறுக்கு சிகிச்சையளிக்க இலித்தியம் கார்பனேட் பயன்படுத்தப்படுகிறது. இலித்தியம் அயனிகள் அயனி போக்குவரத்து செயல்முறைகளில் தலையிட்டு அவை மூளையின் உயிரணுக்களுக்கு எடுத்துச் செல்லப்படும் செய்திகளைக் கடத்தவும் மற்றும் பெருக்கவும் செய்கின்றன.[6] மூளைக்குள் புரோட்டீன் கைனேஸ் சி (பி.கே.சி) செயல்பாட்டில் ஒழுங்கற்ற அதிகரிப்புடன் மனநோயானது தொடர்புடையது. இலித்தியம் கார்பனேட் மற்றும் சோடியம் வால்ப்ரோயேட், போன்றவை பாரம்பரியமாக மனக்கோளாறுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகின்ற சேர்மங்களாகும். இச்சேர்மங்கள் புரதக் கைனேஸ் சி-யின் செயல்பாட்டைத் தடுப்பதன் மூலம் மூளையில் செயல்படுகிறது மேலும் புரதக் கைனேஸ்சி-ஐத் தடுக்கும் பிற சேர்மங்களையும் உற்பத்தி செய்ய உதவுகிறது. மனநிலையைக் கட்டுப்படுத்தும் இலித்தியம் கார்பனேட்டின் பண்புகள் முழுமையாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கவில்லை.[7]

பாதகமான எதிர்வினைகள்

இலித்தியம் உப்புகளை எடுத்துக்கொள்வது ஆபத்துகளையும் பக்க விளைவுகளையும் ஏற்படுத்துகிறது. பல்வேறு மனநல கோளாறுகளுக்கு சிகிச்சையளிக்க லித்தியத்தை நீண்ட கால அளவில் பயன்படுத்துவது பெறப்பட்ட சிறுநீரகத்திசு நீரிழிவு நோய்க்கு வழிவகுக்கும் என்று அறியப்படுகிறது.[8] இலித்தியப் பயன்பாட்டால் நஞ்சாதல் மத்திய நரம்பு மண்டலம் மற்றும் சிறுநீரக அமைப்பை பாதிக்கும் மற்றும் ஆபத்தானது.

Remove ads

பண்புகள் மற்றும் வேதிவினைகள்

சோடியம் கார்பனேட்டைப் போலன்றி, இச்சேர்மம் குறைந்தது மூன்று ஐதரேட்டுகளை உருவாக்கும். இலித்தியம் கார்பனேட் நீரற்ற வடிவத்தில் மட்டுமே உள்ளது.[9] மற்ற லித்தியம் உப்புகளுடன் ஒப்பிடும்போது நீரில் அதன் கரைதிறன் குறைவாக உள்ளது. இலித்தியம் தாதுக்களின் நீர்க்கரைசல்களில் இருந்து இலித்தியத்தைப் பிரித்தெடுப்பது இந்த மோசமான கரைதிறனை அடிப்படையாகக் கொண்டே அமைகிறது. கார்பன் டை ஆக்சைடடின் இலேசான அழுத்தத்தின் கீழ் அதன் வெளிப்படையான கரைதிறன் 10 மடங்கு அதிகரிக்கிறது; இந்த விளைவு மெட்டாநிலைத்தன்மை கொண்ட பைகார்பனேட் உருவாவதால் ஏற்படுகிறது, உருவாகின்ற இச்சேர்மம் கூடுதல் கரைதிறனைக் கொண்டது:

Li
2
CO
3
+ CO
2
+ H
2
O
⇌ 2 LiHCO
3
Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads